Homeசெய்திகள்கட்டுரைகல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற விரும்பாத மத்திய அரசு! திமுக மீது பழி போடுகிறார்கள்! பின்னணியை...

கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற விரும்பாத மத்திய அரசு! திமுக மீது பழி போடுகிறார்கள்! பின்னணியை உடைக்கும் தராசு ஷியாம்!

-

- Advertisement -

மத்தியில் ஆட்சிபுரியும் எந்த கட்சியும், கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வராததற்கு காரணம் அரசியல் என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், அரசமைப்பு சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டு அதனை மாநில பட்டியலுக்கு கொண்டு வருவது மத்திய அரசில் அங்கம் வகித்தாலும் திமுகவால் முடியாது என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழ்நாட்டில் இருமொழி கொள்கை அமலுக்கு வந்ததன் வரலாற்று பின்னணி குறித்து  வரலாறு மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:- நான் தமிழ்நாட்டில் மும்மொழி அமலில் இருந்த கால கட்டத்தில் ஆரம்பப் பள்ளி படித்துக் கொண்டிருந்தேன். ஆனால் அப்போது இந்தி மொழி கட்டாயத்தேர்வு இல்லை. அதனால் பொதுவாக அனைவரும் இந்தி மொழியை படிக்க மாட்டோம். இந்த சூழல் 1967ஆம் ஆண்டு வரை தமிழ்நாட்டில் இருந்தது. 1967ல் நான் கல்லூரி 2ஆம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தேன். காங்கிரஸ் கட்சி 1967ல் தோற்கடிக்கப்படும்போது இந்தியா முழுவதும் அந்த கட்சிக்கு பின்னடைவு இருந்தது. 1935 கவர்ன்மென்ட் ஆஃப் இந்தியா சட்டத்தின்படி கல்வியை மாகாண அரசுகளுக்கு, பிரிட்டிஷ் அரசு வழங்கியது. மாகாண பட்டியலில் கல்வி இருந்ததால் தான் மாகாணங்களின் தேவைக்கு ஏற்றுவாறு கல்வி கொள்கையை வடிவமைக்க முடியும் என்று இதற்கு காரணம் சொல்லப்பட்டது. 1950-இல் இந்திய அரசியலமைப்பு சட்டம் வந்து விடுகிறது. நமது அரசியல் சாசன சபையில் கல்வி தொடர்பான எந்த விவாதத்தை எடுத்துப் பார்த்தாலும் இந்த கருத்து மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்பட்டிருக்கும். இந்தியா போன்ற ஒரு பன்முகத்தன்மை கொண்ட நாட்டில், பல மொழிகள் இருக்கும் ஒரு நாட்டில் கல்வி அந்தந்த மாநிலங்களின் பொறுப்பில்தான் இருக்க வேண்டும். காரணம் என்ன என்றால் அப்போதுதான் அந்த மொழிகளின் சிறப்பை பேணி பாதுகாக்க முடியும்.

தாய்மொழி என்பது ஒரு பண்பாட்டின் அடிப்படை என்பதால் அதனை மாணவர்களுக்கு உணர்த்த வேண்டும். 1967ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் அண்ணா ஆட்சிக்கு வந்தபோது கல்வி மாநிலப் பட்டியலில்தான் இருந்தது. அப்படி இருந்த போதும் இந்தி கற்பித்தல் தொடர்ந்து கொண்டேதான் இருந்தது. மாணவர்களாகிய நாங்கள் 1965-ல் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் இருந்து வருகிறோம். அப்போது மாணவர்கள் மத்தியில் பெரிய கொந்தளிப்பு நிலவியது. 1968-ல் கோவை விவசாய கல்லூரியில் மாணவர்கள் போராட்டம் நடைபெற்றது. இதனை அறிந்து முதலமைச்சர் அண்ணா மிகவும் விசனப்பட்டார், கவலைப்பட்டார். கடைசியில் ஒரு உச்சபட்ச உணர்ச்சியில் தனித் தமிழ்நாடு கொடியை எல்லாம் ஏற்றிவிட்டோம். அப்போது என்ன பிரச்சினை வந்தது என்றால், முதலமைச்சர் அண்ணாவே நேரடியாக மாணவர்கள் பிரதிநிதிகளிடம் பேசினார். நான் மதுரை விவசாய கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தேன், அது கோவை விவசாய கல்லூரி. இன்று கோவை வேளாண் பல்கலைக் கழகமாக மாறிவிட்டது. அது எங்களுக்கு தாய் கல்லூரி ஆகும். இந்தி அல்லது மும்மொழி கொள்கை குறித்து விவாதம் வந்தபோது, அண்ணா அதனை ஒப்புக்கொண்டார். கல்வி மாநில பட்டியலில் இருக்கும்போது, மிகவும் எளிதாக மாநிலத்திற்கு என்று தனியான மொழிக்கொள்கை. அது இருமொழி கொள்கை. 1968 ஜனவரி 26ல் தமிழ்நாடு சட்டமன்றத்தில் விவாதிக்கப்பட்டு, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அன்று முதல் தமிழ்நாட்டி இருமொழி கொள்கைதான் நடைமுறையில் உள்ளது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றம் வரை வழக்குகள் சென்றன. ஆனால் உச்சநீதிமன்றம் இருமொழி கொள்கை விவகாரத்தில் தலையிட வில்லை. காரணம் கல்வி என்பது மாநில அரசுகள் தொடர்புடைய விஷயம் என்று இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் உள்ளது.

annadurai
annadurai

அதற்கு பின்னர் கல்விக்கொள்கை விவகாரத்தில் முக்கியமான மாறுதல் எந்த இடத்தில் ஏற்பட்டது என்றால், இந்திரா காந்தி அம்மையாரின் அவசர நிலைச் சட்டத்தின்போதுதான் (1975-1976). ஸ்வரன் சிங் தலைமையில் ஒரு கமிட்டி அமைக்கப்படுகிறது. அந்த கமிட்டி கல்வியை பொதுப்பட்டியலுக்கு கொண்டு வந்துவிட வேண்டும். மாநிலப் பட்டியலில் கல்வி இருக்கும்போது, மாநிலத்திற்கு மாநிலம் எல்லாமே மாறுபடுகிறது. அதனால் கல்வியை பொதுப்பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும் என்று ஒரு அபத்தமான பரிந்துரையை அந்த குழு வழங்கியது. அவசர நிலை என்பதால் நாடாளுமன்றத்தில் விவாதம் இன்றி உடனடியாக அரசமைப்பு சட்டத்தில் 42-வது சட்டத்திருத்தம் கொண்டுவந்து கல்வியை பொதுப் பட்டியலுக்கு கொண்டு சென்றுவிட்டனர். அதன் பின்னர் 1977ல் மொராய் தேசாய் அரசு வருகிறது. அப்போது கல்வி பொதுப்பட்டியலுக்கு சென்றதற்கு மாணவர்கள் கண்டனம் எல்லாம் தெரிவித்தனர். மொராய் தேசாய், இந்திரா காந்தி அம்மையார் அவசர நிலையின்போது கொண்டுவந்த பல சட்டங்களை திரும்ப பெற்றார். ஆனால் கல்வியை திரும்பவும் மாநில பட்டியலுக்கு கொண்டு வரவில்லை.

பின்னர் ராஜிவ்காந்தி ஆட்சிக்காலமோ, அல்லது வட இந்திய தலைவர்கள் என அனைத்து காலக்கட்டங்களிலும் டெல்லியில் ஆதிக்கம் செலுத்தும்போது கல்வியை மாநிலப் பட்டியலுக்கு திரும்ப கொண்டுவர முடியவில்லை. இன்று மோடியே அவசர நிலையின் போது காங்கிரஸ் அது செய்தார்கள், இது செய்தார்கள் என்று சொல்கிறார் அல்லவா? அவசர நிலையின்போது கொண்டுவரப்பட்ட முக்கிய திருத்தத்தை ஏன் அவர் திரும்பப் பெறவில்லை?. ஏன் என்றால் அதில் அவர்களுக்கு ஓட்டு லாபம் உள்ளது. இந்தி மொழி பேசும் மக்கள் மத்தியில் மும்மொழி கொள்கைக்கான ஆதரவு இருக்கும் நிலையில், இதற்குள் கை வைப்பதற்கு அனைத்து கட்சிகளும் தயங்கின என்பதே உண்மை. அரசியலமைப்பு சட்டத்தை திருத்த பலம் வேண்டும் என்பதால், கூட்டணி அரசுகளால் அந்த முடிவு எடுக்க முடியாது. திமுக மத்திய அரசில் கூட்டணியில் இருந்தபோது ஏன் கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டுவரவில்லை என்று கேட்பவர்களுக்கு, கூட்டணி அரசால் அந்த பெரும்பான்மையை திரட்ட முடியவில்லை.

திமுக - அண்ணா அறிவாலயம்

அப்போது மோடியே ஒரு குஜராத்திதான். அவருக்கு குஜராத்தி தாய் மொழி. குஜராத்தில் ஒன்று முதல் 8ஆம் வகுப்பு வரை குஜராத்தி மொழி கட்டாயம் கற்பிக்க வேண்டும் என சட்டம் அண்மையில்தான் பிறப்பிக்கப்பட்டது. பிகார் உள்ளிட்ட பல மாநிலங்களில் உள்ளுர் வட்டார மொழிகள் அழிந்துவிட்டன. அதற்கு காரணம் இயல்பாக இனனொரு மொழியை புகுத்துவது, தேசிய மொழி என்ற அந்தஸ்து கொடுக்கிறபோது ஏற்படுகிற பிரச்சினை ஆகும். அப்போது, இந்தியாவில் எது மொழிக்கொள்கையாக இருக்க வேண்டும்?. தாய்மொழி. அது பண்பாட்டின் அடையாளம். கண்டிப்பாக தாய்மொழிக் கொள்கை இருக்க வேண்டும். அனைத்து மாநில கல்வி கொள்கைகளிலும் அனைத்து மாநில மொழிகளுக்கும் சிறப்பு சேர்க்க வேண்டும்.

தேசியக்கல்வி கொள்கை ஒன்றும் இந்தியாவிற்கு புதிதானது இல்லை. NEP 1 என்பது அபுல்கலாம் ஆசாத் காலம். NEP 2 என்பது ராஜிவ்காந்தி காலம். NEP 3 தான் 2020ல்  மோடியின் ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட புதிய கல்வி கொள்கையாகும். மூன்று NEP-க்களிலும் இந்த ஒரு விஷயத்தில் மாற்றம் கொண்டு வரப்படவில்லை. மூன்றாவது மொழி கற்றுக்கொள்ள வேண்டும் என்று தேசிய கல்விக்கொள்கையில் சொல்கிறார்கள் என்றால், அப்படி 3வது மொழியை கற்றுக்கொள்வதால் இன்றைய தேதியில் வாழ்க்கைக்கு எந்த வகையில் அது லாபம்? அரசியல் உரையாடல் எதை நோக்கி கட்டமைக்கப்பட்டதாக இருக்க வேண்டும்? தேவையின் அடிப்படையில் ஆனதாக இருக்க வேண்டும். அல்லது எதிர்கால வாழ்வின் வளர்ச்சியின் அடிப்படையில் ஆனதாக இருக்க வேண்டும். இன்று ஒவ்வொரு மாநிலத்திலும் தாய் மொழி கொள்கை உள்ளது. அது பண்பாட்டின் அடையாளம், கண்டிப்பாக அது தேவை. 2-வது அறிவியல், கணிதம், ஆங்கிலம். இதனை தாண்டி எந்த மாநிலத்தில் படிக்கும் மாணவர்களுக்கு அவர்களது வாழ்க்கை தேவைகளுக்கு 3வது மொழி என்பது பூர்த்தி செய்யாது.

nep
nep

ஒரு உதாரணத்திற்கு நீங்கள் பள்ளியில் கன்னடம் படித்திருக்கும் பட்சத்தில், பள்ளி, கல்லூரி படிப்புகளை முடித்துவிட்டு வேலைக்கு அதே கன்னட பூமிக்கு சென்றால், நீங்கள் படித்த கன்னடம் அப்போது பயன்படாது. நீங்கள் இந்தி, கன்னடம் என எந்த மொழியை படித்தாலும், அது இலக்கண சுத்தமான மொழி அவ்வளவு தான். இந்த மொழி பேச்சு வழக்கிற்கு பயன்படாது. அப்போது மீண்டும் ஒரு முறை நீங்கள் அங்கே போய் பேச்சு வழக்கு மொழியை கற்றுக் கொள்ளத்தான் வேண்டும். இன்றைய தொழில்நுட்ப காலகட்டத்தில் அது மிகவும் எளிமையான ஒன்றுதான், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ