திமுகவை எதிர்த்து வலிமையான கூட்டணி அமைப்பதே எடப்பாடியின் திட்டமாகும் என்றும், அந்த கூட்டணியில் விஜயை தவிர அனைத்து அரசியல் கட்சிகளும் இடம்பெறும் என்று மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் தெரிவித்துள்ளார்.
2026 சட்டமன்ற தேர்தல் கூட்டணிகள் தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன், தொலைகாட்சி ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது:- சீமான் பாஜகவின் கட்டுப்பாட்டில் உள்ளார். அவர் மதவாத எதிர்ப்பாளரோ, மோடி எதிர்ப்பாளரோ கிடையாது. பாஜக, திமுகவுக்கு செல்லும் வாக்குகளை நாம் பிரிப்பதை விட, இன்னொரு அணி பிரித்தால் நல்லதுதான் என்று நினைக்கும். அதனால் விஜய், சீமான் கூட்டணி உறுதியாக அமையும். தமிழ்நாட்டில் கட்டாயம் 3 அணிகள் அமையும். ஒன்று திமுக, இரண்டாவது அதிமுக, 3வது விஜய் தலைமையிலான கூட்டணி. அரசின் நலத்திட்ட உதவிகளை கடந்துதான் மக்கள் மற்றவர்களுக்கு வாக்களிப்பார்கள். விஜய், வசீகரமான தலைவர்தான். ஆனால் களத்ததிற்கு போகாமல் மக்களின் மனதை வென்று எடுக்க முடியாது. ஆனால் அவர்கள் கடைசி 4 மாதம் சுற்றுப்பயணம் மேற்கொண்டாலே போதும், ஜனவரியில் வெளியாகும் ஜனநாயகன் படம் போதும் என்பது எல்லாம் அவரது மனக்கணக்கு. ஒருத்தன் வாக்களிக்க மாட்டான். ஒரு தொலைக்காட்சி நடத்திய சர்வே அடிப்படையிலதான் இதை சொல்கிறேன்.
எப்போது அரசியலில் உற்று கவனித்துக்கொண்டே இருப்பார்கள். தொலைக்காட்சிகளில் ஸ்டாலின், எடப்பாடி குறித்த செய்திகள் வந்துகொண்டே இருக்கும். ஏனென்றால் மக்கள் மனதில் அவர்கள் இருந்துகொண்டே இருப்பார்கள். வரும்போது என்ன பேசுகிறார் என்று பார்ப்பார்கள். நீங்கள் திடீரென ஒரு நாள் வந்தீர்கள் என்றால் மக்கள் கண்டுகொள்ள மாட்டார்கள். சீமான் போன்றவர்கள் ஊர் ஊராக சுழன்றடித்து பேசுகிறார். அவரால் வாக்குகளை இழுக்க முடியும். ஆனால் வீட்டில் உட்கார்ந்துகொண்டு படத்தை வெளியிட்டால் ஜெயித்திடலாம் என நினைக்கக்கூடாது. தொழிலாளர்களை, வியாபாரிகளை, விவசாயிகளை நீங்கள் தொட முடியாது. பிறகு நீங்கள் யாரையும் தொட முடியாது. விஜய், சீமான், பாமக கூட்டணி அமையும் பட்சத்தில் அது வலிமையான கூட்டணியாக அமையும். ஏனென்றால் வடதமிழ்நாட்டில் விஜயும் வலிமையானவர், பாமகவும் வலிமையான கட்சியாகும். ஆனால் ராமதாஸ் அய்யா எதை தேர்வு செய்யப்போகிறார் என்று தெரியவில்லை.
அதிமுக – பாஜக கூட்டணி உறுதியான உடன் வெளியான கருத்துக்கணிப்பில் அந்த அணி ஆட்சி அமைக்கும் என முடிவுகள் வெளியாகியுள்ளது. அது செல்போனில் வெளியான சர்வே ஆகும். ஆனால் எதார்த்தத்தில் இது வராது. மக்கள் ஒரு அரசால் என்ன நன்மை தீமை என்றுதான் பார்ப்பார்த்து தான் வாக்களிப்பார்கள். இது எந்த கருதுத்துக்கணிப்பிலும் வராது. என்னை பொருத்தவரை மும்முனை போட்டி வர வாய்ப்பு உள்ளது. விஜய்க்கு 50 முதல் 60 லட்சம் வாக்குகள் வரும். பாமக. சீமானின் பிரச்சார பலம் உள்ளது. அதிமுக – பாஜக கூட்டணி, தவெக, சீமான், ராமதாஸ் என்று 2 அணிகள் உருவாகினால் இரு தரப்பும் திமுகவை கடுமையாக எதிர்ப்பார்கள். திமுக என்ன செய்ததோ அதற்கான பலன் பிளஸ், மைனஸ் இரண்டும் அந்த கட்சிக்கு கிடைத்துவிடும். திமுக அதை எப்படி கொண்டு செல்வதுதான் முக்கியம். அங்கேயும் ஸ்டாலினை தான் முக்கியப்படுத்துகிறார்கள். இங்கேயும் எடப்பாடியை முன்னிறுத்தப் போகிறார்கள். இங்கே விஜயை முன்னிலைத்தப்போகிறார்கள்.
திமுகவை ஆட்சியில் இருந்து இறக்க வேண்டும். ஒன்று கூட்டணியை அந்த பக்கம் வைக்க வேண்டும். அல்லது இந்த பக்கம் வைக்க வேண்டும். திமுகவுக்கு எதிரான வாக்குகள் சிதறக்கூடாது அவ்வளவுதான் திட்டம். இதையும் தாண்டி ஒரு பிரஷரில் எது வேண்டுமானாலும் நடக்கலாம்.னால் விஜய் அதற்கு இணங்க மாட்டார் என்பது என்னுடைய கணிப்பு. விஜய்க்கு, பாஜகவில் இருந்து அழைப்பு வரலாம். அவர்களை பொறுத்தவரை திமுகவுக்கு எதிரான பவர்ஃபுல்லான அணி வேண்டும். எடப்பாடி பழனிசாமி வலிமையான கூட்டணி அமைப்பேன் என்று சொல்வதன் நோக்கம் என்பதில் சீமான் இருக்கிறார். பாமக இருக்கிறது. விஜயயை தவிர எல்லோரும் இருக்கிறார்கள், இவ்வாறு அவர் தெரிவித்தார்.