Homeசெய்திகள்கட்டுரைதேர்தல் ஆணையம் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும் - என்.கே.மூர்த்தி

தேர்தல் ஆணையம் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும் – என்.கே.மூர்த்தி

-

நாம் மின்னணு வாக்கு இயந்திரத்தின் மீது தொடர்ந்து சந்தேகங்களை எழுப்பி வருகிறோம். நாம் சந்தேகப்பட வேண்டியது மின்னணு வாக்கு இயந்திரத்தின் மீது அல்ல; தேர்தலை நடத்தும் ஆணையத்தின் மீதுதான் என்கிற புரிதல் வேண்டும்.

தேர்தல் ஆணையம் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும் - என்.கே.மூர்த்தி

97 கோடி வாக்காளர்களைக் கொண்ட இந்தியா போன்ற மிகப்பெரிய நாட்டில் வாக்கு சீட்டின் மூலம் தேர்தல் நடத்துவது என்பது மிகவும் கடினம். அதுவும் வாக்கு சீட்டு முறையில் வாக்கு எண்ணிக்கை நடத்தி முடிப்பதற்கு வாரக் கணக்கில் காத்திருக்க வேண்டும். மேலும் வாக்கு சீட்டு முறையில் செல்லாத ஓட்டுகளை கணக்கிடுவதற்கு மட்டும் தனி அதிகாரிகளை நியமிக்க வேண்டும்.

இதுபோன்ற பலப்பிரச்சனைகளை கவனத்தில் கொண்டுதான் மின்னணு வாக்கு இயந்திரம் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது.

தேர்தல் ஆணையம் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும் - என்.கே.மூர்த்தி

வாக்குப்பதிவு இயந்திரம் நடைமுறைக்கு வந்ததில் இருந்து அதன் மீது சந்தேகங்களும் வரத்தொடங்கியது. அந்த சந்தேகத்திற்கு தேர்தல் ஆணையம் அவ்வப்போது பதிலளித்து நிவர்த்தி செய்து வருகிறது. மேலும் யாருக்கு வாக்களித்தோம் என்பதை ஒரு வாக்காளார் விவிபேட் மூலம் அறிந்துக் கொள்ளவும் முடியும் என்பதால் மின்னணு இயந்திரத்தில் இருந்த சந்தேகம் ஓரளவு குறைந்தது.

இந்த நிலையில் 18வது மக்களவை தேர்தலின் போது தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பும் தேதி அறிவித்த பின்னரும் தேர்தல் ஆணையத்தின் செயல்பாட்டின் மீது மக்களுக்கு சந்தேகம் எழத்தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை முடிந்த பின்னரும் அந்த சந்தேகம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

நெருக்கடிக்குள் இந்தியா – புதிய அரசுக்கு காத்திருக்கும் சவால் (apcnewstamil.com)

தேர்தல் ஆணையம் எதற்காக உருவாக்கப்பட்டதோ அந்த நோக்கத்திற்காக செயல்படுகிறதா? தேர்தல் ஆணையம் சுயேட்சையாக இயங்குகிறதா அல்லது வேறு எவரேனும் இயக்குகிறார்களா என்கிற அய்யப்பாடுகள் தொடர்ந்து எழுந்து வருகிறது.

மக்களவை தேர்தலுக்கான தேதி அறிவிப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு மார்ச் 9 தேதி இரண்டு தேர்தல் ஆணையர்களில் ஒருவர் அருண் கோயல் திடீரென்று ராஜினாமா செய்தார். அதனை தொடர்ந்து புதியதாக இரண்டு ஆணையர்கள் நியமிக்கப்படுகிறார்கள். ஏன் இந்த திடீர் விலகல்? சேர்த்தல்?

தேர்தல் ஆணையம் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும் - என்.கே.மூர்த்தி

தேர்தல் ஆணையரை நியமனம் செய்ய வேண்டும் என்றால் பிரதமர், எதிர்கட்சி தலைவர், சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ஆகியோரின் பரிந்துரையின் அடிப்படையில் தேர்வு செய்ய வேண்டும் என்கிற விதிமுறையை மாற்றி, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியை நீக்கிவிட்டு உள்துறை அமைச்சரை சேர்த்தது ஏன்? ஒரு கட்சியை சேர்ந்த பிரதமர், உள்துறை அமைச்சர் ஆலோசனைப் படி தேர்வு செய்யப்படும் தேர்தல் ஆணையம் நடுநிலையோடு செயல்படும் என்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? அதற்கு என்ன உத்தரவாதம்?

முதல்கட்டம் ஏப்ரல் 19 ல் தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. முதல் ஐந்து கட்ட வாக்குப் பதிவு எண்ணிக்கையை ஆணையத்தின் இணையதளத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிடாமல் நான்கு ஐந்து நாள்கள் கழித்து பதிவான வாக்குகளின் சதவீதத்தை மட்டும் வெளியிட்டு மக்களை குழப்பியது ஏன்? எதிர் கட்சியினர், சமூக ஆர்வலர்கள் வைத்த கோரிக்கைகளுக்கு பின்னர் மே 25ம் தேதி ஐந்து கட்டங்களாக பதிவான வாக்குகளையும் இணையத்தில் வெளியிட்டது ஏன்? இப்படி தொடர்ந்து தேர்தல் ஆணையத்தின் மீதுதான் மக்களுக்கு சந்தேகம் எழுகிறது.

மக்களவை தேர்தல் 2024 : முடிவுகள்…முறையாக அமையவில்லை

வாக்கு எண்ணிக்கை முடிந்த பின்னர் தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ள பதிவான வாக்குகள், எண்ணப்பட்ட வாக்குகள், அவை இரண்டிற்கும் இடையில் உள்ள முரண்பாடுகள் என்று ஆணையத்தின் மீது மேலும் சந்தேகம் எழுந்துள்ளது.

ஒரு நாட்டில் நடுநிலைமையுடன் செயல்பட வேண்டிய தேர்தல் ஆணையம், தன் நிலை தவறும்போது அந்த நாடும் மிக பெரிய தடுமாற்றத்தை சந்திக்கும் என்பதை உணரவேண்டும்.

MUST READ