தேனின் மகத்துவம்
தேன்: இனிப்பான உணவு பொருட்கள் ஒன்றில் தேன் மிக முக்கியத்துவம் கொண்டது. அப்படி மருத்துவத்திலும் பயனளிக்கும் தேனின் சில பண்புகளை தெரிந்துக்கொள்வோம்.
தேனின் வகைகள்: கொம்புத்தேன், மலைத்தேன், புற்றுத்தேன், இஞ்சித்தேன், முருங்கைத்தேன், நெல்லித்தேன், துளசித்தேன் என தேனிலும் பல வகைகள் உண்டு. ஆனால் மரத்திலிருந்து எடுக்கும் கொசுவந் தேனீர்க்கு பயன் அதிகம் உள்ளது.
தேன் புளிக்கமால் இருக்க என்ன செய்ய வேண்டும்? மரத்தின் தேன் கூட்டில் இருந்து சேகரித்த தேனை ஒரு சிரிய பாத்திரத்திற்குள் வைத்துக்கொள்ளவும். பின் ஒரு பெரிய பாத்திரத்தில் நீரை நிரப்பி அதற்குள் இந்த சிரிய தேன் பாத்திரத்தை வைத்து சூடு ஏற்ற வேண்டும். குறிப்பாக தண்ணீரை சல சல வென்று கொதிக்க விடக் கூடாது.
சூடேற்றிய பின் ஒரு கம்பளியில் அதை வடிகட்டி எடுத்துக்கொள்ளவும். பின் சிறிதளவு பழைய ஓடு ஒன்றை எடுத்துக் கொள்ளவும், அதை சூடேற்றி அந்த தேனினுள் போடவும். 5 நிமிடத்திலேயே ஓட்டை எடுத்து விடவும், இவ்வாறு செய்தால் தேன் புளிக்காமல் இருக்கும் என்பர்.
உடல் எடை குறைய: வெண்ணீரில் தேன் கலந்து குடித்தால் உடல் எடை குறையும் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அதை எவ்வளவு அளவில் கலந்துக் குடிக்க வேண்டும் என்று தான் பலருக்கும் தெரியாது,
200-மில்லி வெண்ணீரில் 50-மில்லி அளவு தேன் மட்டுமே சேர்க்க வேண்டும், இந்த அளவில் சேர்த்து குடித்தால் மட்டுமே உடல் எடை குறையும் என்பார்கள்.
குழந்துகளுக்கு தேன் கொடுக்கலாமா? பொதுவாக குழந்தைக்களுக்கு மார்பு சளி கட்டிக்கொள்ளும் அப்போது எலும்பிச்சை சாருடன் 30 மில்லி தேனை கலந்துக்கொடுத்தால் சளி நீங்கும் என கூறுவர்.
ஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்கள் தேன் அருந்தலாமா? ஆஸ்துமா ( வீசிங் ) பிரச்சனை உள்ளவர்கள், ஆஸ்துமாவை கட்டுக்குள் கொண்டுவர வயிற்ரை சுத்தமாக வைத்துக் கொள்ளவேண்டும். வயிற்றை சுத்தம் செய்ய மற்றும் மூச்சு இரைப்பு பிரச்சனை குறைக்க, 10 மில்லி தேனுடன் 20 மில்லி சிற்றாமணக்கு எண்ணெய் கலந்து மாலையில் சாப்பிட்டு வந்தால் பூரண குணமடையும் என பாட்டி வைத்தியம் சொல்லுகிறது.
தேனை சாப்பிடுவதால் ஆயுள் நீடிக்குமா? வேலைக்கார தேனிக்கள் தேனிலிருந்து ராயல் ஜெல்லை உருவாக்கி, அதை ராணி தேனியிடம் கொடுக்கும். அதனால் தான், ராணி தேனீ மூன்று முதல் ஐந்து ஆண்டு வரை உயிர்வாழும். அதுப்போன்ற தேனை பருகினால் ஆயுள் காலம் நீடிக்குமாம். தமிழ்நாட்டில் தேன் எங்கு அதிகமாக கிடைக்கும் என்றால் கொல்லிமலையில் தான். இங்கு வெட்பாலை மரங்கள் அதிகம் என்பதால் அங்கும் வருடம் முழுக்க தேன் கிடைக்கும் என்பர்.
தேனின் மருந்துவம்: தேன் அல்சரை மட்டுமல்ல, அத்தனை உள்ளுறுப்புகளின் ரணங்களையும் ஆற்றும். தேனில் சோற்றுக்கற்றாழைத் துண்டுகளை ஊற வைத்துச் சாப்பிட்டால், குடல் புற்றுநோயில் மாற்றம் தெரியும். தேன், எலுமிச்சைச்சாறு, இஞ்சிச்சாறு சம அளவு கலந்து அருந்த இதயநோய்கள் வராது.