Homeசெய்திகள்கட்டுரைஉலகமே வியக்க ஸ்டாலின் வெளியிட்ட "இரும்புப்பிடி"... சாதனைகளை பட்டியலிடும் பாலச்சந்திரன் ஐஏஎஸ்!

உலகமே வியக்க ஸ்டாலின் வெளியிட்ட “இரும்புப்பிடி”… சாதனைகளை பட்டியலிடும் பாலச்சந்திரன் ஐஏஎஸ்!

-

- Advertisement -

தமிழ்நாட்டில் 5,300 ஆண்டுகளுக்கு முன்பு உருக்கு இரும்பை பயன்படுத்தும் தொழில்நுட்பம் அறிந்து இருந்ததாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளது, உலக வரலாறு எழுதுபவர்களுக்கு ஒரு புது மையில் கல் என்று ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி பாலசந்திரன் தெரிவித்துள்ளார். மேலும் உலக வரலாறு மாற்றி எழுத்தப்படும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரும்பின் தொன்மை குறித்த நூலினை வெளியிட்டு பேசியவை தொடர்பாக பாலச்சந்திரன் ஐஏஎஸ் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:- 5,300 ஆண்டுகளுக்கு முன்பு உருக்கு இரும்பை பயன்படுத்தும் தொழில்நுட்பத்தை தமிழினம் அறிந்திருந்ததாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு என்பது மிகவும் முக்கியமானது. அறிவியல் பூர்வமாக ஆய்வுகள் நடத்தப்பட்டன. அந்த ஆய்வுகளின் முடிவுகள் இதுதான். இவைகள் சரியானது என நாங்கள் நம்புகிறோம். நீங்கள் அதனை ஆய்வுக்குட்படுத்தி சரியானதா? என சொல்லுங்கள் என புளோரிடாவில் உள்ள ஆய்வு நிறுவனம் உள்ளிட்ட உலகின் புகழ்பெற்ற 4 நிறுவனங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அதில் 4  நிறுவனங்களும் ஆய்வு நடத்தி அதனை உறுதி செய்துள்ளன. தமிழ்நாடு அரசு செய்த ஆய்வில் கி.மு. 15ஆம் நூற்றாண்டிலேயே இரும்பை உருக்கும் தொழில்நுட்பம் தமிழர்களுக்கு தெரிந்துள்ளது. இதற்கு முன்பு துருக்கியில் கி.மு 13ம் நூற்றாண்டில் இந்த தொழில்நுட்பத்தை அறிந்திருந்தனர். தற்போது மயிலாடும்பாறையில் நடைபெற்ற சோதனையில் கி.மு 15ஆம் நூற்றாண்டில் இரும்பை உருக்கும் தொழில்நுட்பம் தெரிந்துள்ளனர் என உறுதியாகியுள்ளது. நாம் ஆய்வுக்கு அனுப்பிய 4 இடங்களும் புகழ்பெற்ற நிறுவனங்கள். இந்த விவகாரத்தில் ஆய்வுடன் விஞ்ஞானிகளின் வேலை முடிந்துவிட்டது. இததை உலகிற்கு அறிவிக்க வேண்டியது அரசுதான். அதனால்தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முறைப்படி மக்களுக்கு அறிவித்துள்ளார்.

இந்தியா டுடே யூடியூப் பக்கத்தில் எழுதியுள்ளார்கள். தமிழ்நாட்டில் இரும்பு உருக்கு தொழில்நுட்பம் பழங்காலத்தில் பயன்பாட்டில் இருந்ததாக முதலமைச்சர் சொல்வதாக கூறினார்கள். ஆனால் அவர் வெறுமனே வாய்வார்த்தையில் கூறவில்லை. இப்படிதான் உள்ளது என்று உறுதியாக கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக முதலமைச்சர் சொல்கிறார். இது ஆங்கில நாளிதழின் ஒரு பக்க சார்பு வெளிபடுகிறது. இந்தியாவின் உண்மையான, சரியான வரலாறு எழுதப்பட வேண்டும் என்றால், அது தெற்கில் இருந்துதான் தொடங்க வேண்டும் என்கிறார் வின்சென்ட் ஸ்மித். இந்த கண்டுபிடிப்பின் மூலம் இதுவரை வழிவழியாக வந்த சில அனுமானங்கள். அனுமானங்கள் என்பது நிரூபிக்கப்பட்ட  உண்மையாக ஆகி விடாது. சில நாட்களுக்கு முன்பு திராவிடர்கள் தான் இந்தியாவில் முதன்முதலில் இடம் பெயர்ந் வந்தவர்கள் என ஒருவர் சொன்னார். ஊர் பெயர்களை அடிப்படையாக கொண்டு பாலகிருஷ்ணன் ஐஏஎஸ் சில அற்புதமான ஆய்வுகளை மேற்கொண்டிருந்தார். அவர் மதுரை, வைகை இவை இரண்டும் பாரசீகத்தில் உள்ளதாகவும், டெல்லி பாலம் விமான நிலையம் அருகே உள்ளதாகவும், மத்திய பிரதேசம் அருகேயும் உள்ளது என்றும் கூறினார். அந்த அனுமானம் உழைப்பின் அடிப்படையில் சொல்லப்பட்டது,  ஆனால் தேற்றம் கிடையாது. அதற்கு போதுமான ஆதாரம் இல்லை. அவரது அனுமானம் இன்று எதனால் மறுதலிக்கப்பட்டது என்றால் மொகஞ்சதரோ நாகரிம் நடைபெற்று கொண்டிருந்த, அதே காலகட்டத்தில் தமிழ்நாட்டில் கி.மு. 15ஆம் நுற்றாண்டிலே இங்கு இரும்பு நாகரிகம் இருந்துள்ளது. அதனால் மொகசதரோ மற்றும் தமிழக இரும்புக்காலம் ஆகியவை சமகாலத்தில் நடைபெற்றதாகும்.

5300 ஆண்டுகளுக்கு முன்பு இரும்பை பயன்படுத்தியவர்கள் தமிழர்கள் - திராவிடர்களே மூத்த குடிமக்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

மற்றொரு மூடநம்பிக்கை என்ன என்றால் மொகஞ்சதரோ நாகரிகத்தின் முடிவுதான் சங்க காலத்தின் தொடக்கம் என கூறப்பட்டது. அப்போதே அது தவறு என மிக உறுதியாக சில வரலாற்று ஆய்வாளர்கள் சொன்னார்கள். நானும் அதே கருத்தை தான் வைத்தேன். கீழடி என்பது ஒரு தொடக்கம் தான். அது ஒரு முடிவு அல்ல. அதன் மூலம் கி.மு. 5, 6அம் நுற்றாண்டுகளில் தமிழ் மொழிக்கு எழுத்து வடிவம் உள்ளது என நிரூபணம் ஆகியுள்ளது. ஆனால் அது கீழடியுடன் முடிந்துவிடவில்லை. இன்னும் சிவகளை உள்ளது, மணலூர் உள்ளது, பூம்புகார் உள்ளது, கன்னியாகுமரி உள்ளது. இங்கெல்லாம் நமது ஆய்வுகள் தொடர்ந்தால் நாம் இன்னும் பின்னோக்கி செல்ல முடியும் என்று சொல்லப்பட்டது. அதற்கு இலக்கியத்தில் இருந்தே சில ஆதாரங்களை சொல்லுகிறேன். கனியன் பாலன் என்கிற பொறியியல் அறிஞர் இருந்தார். பின்னாளில் அவர், தமிழில் மிகப்பெரிய ஆராய்ச்சி நடத்தினார். அவர் அசோகரை பற்றியும், அசோகருடைய நாட்டை பற்றியும் மாமூலர் என்ற புலவர் தன்னுடய அரசரோடு ஒப்பிட்டு எழுதி இருக்கிறார் என்றால் அந்த அரசர் அசோகரின் சம கால கட்டத்தில் வாழ்ந்தவராகத்தான் இருக்க வேண்டும். இந்த அனுமானத்திற்கு நிறைய சாத்தியக்கூறுகள் உள்ளன. அதனால் அவர் சங்க காலத்தை எதனால் கி.மு 2-3ஆம் நூற்றாண்டு என்கிறீர்கள். அது கி.மு. 7-8ஆம் நூற்றாண்டுகளை சேர்ந்ததாக இருக்கும் என்று கூறினார்.

5300 ஆண்டுகளுக்கு முன்பு இரும்பை பயன்படுத்தியவர்கள் தமிழர்கள் - திராவிடர்களே மூத்த குடிமக்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தொல்காப்பியம் தமிழின் முதல் இலக்கண நூல் என்று கூறுவது தவறு. அது தமிழின் முதல் இலக்கண நூலும் கிடையாது. தமிழினுடைய இலக்கண நூலும் கிடையாது.  தொல்காப்பியம் தமிழருடைய இலக்கண நூல். தமிழர்களின் வாழ்வியல் முறை குறித்து சொல்லிய நூல். அதில் மொழியை சேர்த்து சொல்லியுள்ளது. இலக்கியத்தின் இலக்கண நூல் என்பது, அந்த நாட்டு மக்களின் வாழ்வியல் முறையை பற்றி சொல்லாது. ஆனால் தொல்காப்பியம் சொல்லியுள்ளது. தொல்காப்பியர் 31 இடங்களில் என்மறார் புலவர், என்மறார் அறிஞர் என்று சொல்கிறார். அப்படி என்றால் எனக்கு முன்னால் இருந்தவர்கள் சொன்னார்கள் என்கிறார். இலக்கணம் என்பது இலக்கியம் வந்த பிறகுதான் வரும். இலக்கியம் தறிகெட்ட பின்னர், அதை நெறிப்படுத்த இலக்கணம் வரும். அப்படி என்றால் தொல்காப்பியத்திற்கு முன்னாள் இலக்கணங்கள் உள்ளன. அந்த இலக்கண நுல்களுக்கு முன்பாக இலக்கிய நூல்கள் உள்ளன.  நம்முடைய பழமை என்பது கீழடியில் பார்த்த கி.மு 6ஆம் நூற்றாண்டுடன் முடிந்துவிட வில்லை. அதனால் மொகஞ்சதரோவின் முடிவுதான், சங்க காலத்தின் தொடக்கம் என்ற கருத்து அடிபட்டு போய்விடுகிறது.

5300 ஆண்டுகளுக்கு முன்பு இரும்பை பயன்படுத்தியவர்கள் தமிழர்கள் - திராவிடர்களே மூத்த குடிமக்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

என்னை பொருத்தவரை  சங்க காலம் என்பதே தவறு. பழந்தமிழ் இலக்கியம் என்பதுதான் சரியான சொல். ஏனென்றால் சங்க காலத்திற்கு புராண கதைகள் எல்லாம் சொல்கிறார்கள். முதல் தமிழ் சங்கத்திற்கு சிவபெருமான் தலைமை தாங்கினார். 2வது தமிழ்சங்கத்திற்கு முருகன் தலைமை தாங்கினார் என்கிறார்கள். கபாடபுரம் என்பது தமிழ் சொல்லா? இவை எல்லாம் அனுமானங்கள். இரும்பின் தொன்மை என்று இவர்கள் கொடுத்துள்ளார்களே இதிலும் அனுமானங்கள் உள்ளன. கேம்பிரிட்ஜ் பேராசிரியாக இருந்த திலிப்குமார் சக்கரவர்த்தி, கி.மு 2ஆம் நூற்றாண்டில் கங்கை சமவெளியில் இரும்பின் பயன்பாடு இருந்தது. அது வணிக பயன்பாடு மூலம் தமிழ்நாட்டிற்கு வந்திருக்கலாம் என்கிறார். மிளகாய், துருக்கியில் இருந்து வாணிபம் மூலம் இங்கு வந்தது. அதேபோல், நமது இரும்பு காலத்திலும் செம்பு, வெண்கலம் கலப்பு இருந்ததால், அதுவும் அங்கிருந்து வந்திருக்கலாம். இவை எல்லாம் அனுமானங்கள்.

ஆனால் நிரூபிக்கப்பட்டது என்றால் அது கி.மு.15ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில் இரும்பு உருக்கு தொழில்நுட்பம் பயன்பாடு இருந்தது எனபது தான். உலகில் முதன்முறையாக இரும்புக்காலம் வந்தது என்றால் அது தமிழ்நாட்டில் வந்தது. இதன் மூலம் ஆதிச்சநல்லூர் செம்பு, வெண்கலம் எங்கிருந்து வந்தது. கங்கை சமவெளியில் இரும்பு எங்கிருந்த வந்தது என ஆய்வு நடைபெறுகிறது. இது உலக வரலாறு எழுதுபவர்களுக்கு ஒரு புது மையில் கல். உலக வரலாறு மாற்றி எழுத்தப்படும். இது அறிஞர் பெருமக்களுக்கு சென்றாகிவிட்டது. ஆனால் எங்கே போக வேண்டும் என்றால், நம் தமிழ் மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும், நம் இந்திய மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். தமிழ்நாடு என்பது இந்தியாவின் ஒரு பகுதி. தமிழ்நாட்டிற்கு பெருமை என்றால், அது இந்தியாவின் பெருமையாகும். அதை அவர்கள் உலகம் முழுவதும் பறை சாற்ற வேண்டும். இதை மத்திய அரசு உலகிற்கு எடுத்துரைக்க வேண்டும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ