Homeசெய்திகள்கட்டுரைஉணர்ச்சி வசப்பட்டு சொல்லும் வார்த்தைகளை ஊடகங்கள் அரசியலாக்குகின்றன - வேல்முருகன் ஆதங்கம்!

உணர்ச்சி வசப்பட்டு சொல்லும் வார்த்தைகளை ஊடகங்கள் அரசியலாக்குகின்றன – வேல்முருகன் ஆதங்கம்!

-

- Advertisement -

உணர்ச்சி வசப்பட்டு சில வார்த்தைகளை சொல்லுகிறபோது, அதை ஊடகங்கள் அரசியலாக மாற்றுவதாகவும், அதற்கும் கூட்டணிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் விளக்கம் அளித்துள்ளார்

பாவலரேறு பெருஞ்சித்திரனார் நூல் வெளியீட்டு விழாவில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் கூறியதாவது:- உணர்ச்சிவசப்பட்டு சில வார்த்தைகளை சொல்லுகிறபோது,  சில பத்திரிகைகள், ஊடகங்கள் அதை அரசியலாக மாற்றுகிறார்கள். அதற்கும் கூட்டணிக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. இன்று அண்ணன் ஆ.ராசாவை வைத்துக்கொண்டு சொல்கிறேன், திமுக என்ற இயக்கம் எண்ணற்ற தமிழ் தேசிய போராளிகளால், தமிழறிஞர்களால்,  தமிழ் குடும்பங்களால் திமுக என்ற இயக்கம் ஆரியத்துக்கு எதிராக நிறுத்தப்பட்டு, தூக்கிப்பிடிக்கப்பட்டு 6வது முறையாக நாட்டின் முதலமைச்சராக வருவதற்கு தியாகம் செய்துள்ளது இங்குள்ள கூட்டம். இந்த கூட்டத்தின் ஒரு பிள்ளையாக வேல்முருகன் இருக்கிறான். இந்த தமிழ் அறிஞர்கள், தமிழ் குடும்பங்களில் இருந்து வருகிற கோரிக்கைகளை எனக்கே உரிய பாணியில் சடடமன்றத்திலும், ஊடகத்திலும் வைக்கிறேன். அதற்காக பாசிச சங் பரிவார கும்பலிடத்தில் பல் இளித்து சீட்டுக்காகவும் ஓட்டுக்காகவும் நிற்கிறவனாக நான் வளர்க்கப்படவில்லை. இதனை எனது அண்ணன் ஆ.ராஜா புரிந்துகொள்வார்கள். ஆனால் இங்குள்ள அதிகார வர்க்கம் புரிந்துகொள்ளுமா என்பதுதான் கேள்வி. அதற்காக நான் திமுகவை விமர்சனம் செய்யவில்லை.

உலக மாற்றுத்திறனாளிகள் தினவிழா ஒத்திவைப்பு!

நாட்டில் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் வர்க்கம் விவசாயத்திற்காக போராடுபவர்கள் மீது குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவதை எதிர்த்து பேசினேன். மாணவி பாலியல் குற்றச்சாட்டு குறித்து துண்டு பிரசுரம் கொடுத்தவர்களை கைது செய்ததை எதிர்க்கிறேன். நேற்றைக்கு பாலகிருஷ்ணன் கருத்தும், திருமாவளவனின் கருத்தும், வேல்முருகனின் கருத்தும் உங்களோடு இருந்து சில அரசு அதிகாரிகள், உங்கள் கொள்கைக்கும், லட்சியத்திற்கும் மாறாக முடிவுகள் எடுக்கின்றபோது தோழமையோடு, நட்புறவோடு எதிர்க்கிறோம். 1989ல் பாமக தொடங்குவதற்கு முன்பு கடலுர் மாவட்டத்தில, எனது உறவினர் பண்ருட்டியாரை எதிர்த்து திமுகவை வளர்ப்பதற்காக 3 கொலைப்பழிகளை ஏற்றது வேல்முருகன் குடும்பம். அந்த வலி சார்ந்த வேதனையில் கட்சி வளர்வதற்கும் தமிழ்நாடு விடுதலைப்படை, தமிழ்தேசிய தளத்திலும் பங்காற்றி உள்ளேன்.

ஏன் என்றால் திமுக தான் செய்கிற இடத்தில் உள்ளது. இன்று புலவர் களியபெருமாள் தூக்கு ரத்துக்காக வடமாநில நீதிபதிகள் போராடினார்கள். தியாகுதூககு ரத்திற்கு கலைஞர் பரிசீலனை செயதார். எத்தனையோ தமிழ்நாடு விடுதலைப்படையினருக்கு பொதுமன்னிப்பு வழங்க திமுக வாய்ப்பு வழங்கியது. எங்களது வலிகளை உணர்ந்து புரிந்துகொள்கிற இயக்கம் திமுக. காரணம் எங்களோடு சம தளத்தில் எங்களுக்கு முன்னத்தி ஏராக இந்த உணர்வை பெறுவதற்கு காரணமாக களம் கண்ட இயக்கம் திமுக. அந்த அடிப்படை புரிதலில்தான் இங்கே தமிழ்தேசியர்கள் கோரிக்கை வைக்கிறார்கள். திமுகவிடம் நாங்கள் உரிமையோடு கோரிக்கைகளை முன்வைக்கிறோம். தொல்லியல் துறைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 8 கோடி பரிசுத்தொகையை அறிவித்துள்ளார். அண்ணன் ஆ.ராஜா அவர்களிடம் கோரிக்கை வைக்கிறேன், முதலமைச்சரிடம் சொல்லுங்கள் இங்கே தமிழுக்காவும், மொழிக்காவும் தன் வாழ்நாளை அற்பணித்த கூட்டம் இங்கே இருந்து கொண்டிருக்கிறது. தமிழக அரசு அவர்களை கண்டறிந்து வறுமையில் இருந்து மீட்கவும், அவர்களை ஊக்கப்படுத்தவும் வேண்டும்.

தேவநேய பாவாணருக்கு சிலை வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்தேன். அவர் நிறைவேற்றி தந்தார். மருது இருவர் சிலை வைக்க கோரிக்கை வைத்தேன். பெருஞ்சித்திரனாருக்கும் உரிய அங்கீகாரம் வழங்க வலியுறுத்தியுள்ளேன். இதேபோல், தமிழ்தேசிய போராளிகளுக்கு உரிய மரியாதை செலுத்தவும், அவர்களுக்கு நினைவிடம் அமைக்கவும் அரசு அனுமதி வழங்க மறுப்பு தெரிவிக்கிறது. அவர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்ற ஆதங்கத்தில் தான் நான் பேசினேன். இதுதானே தவிர ஒரு காலத்திலும் பதவிக்காக, பணத்திற்காக எவரிடத்திலும் பல் இளிப்பவனாக நான் இல்லை என்பதை திமுகவால் மட்டுமே சொல்ல முடியும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ