Homeசெய்திகள்கட்டுரைவிடிய விடிய கதறியும் வேஸ்ட்! மோடி சட்டத்தை ரத்து செய்யும் உச்சநீதிமன்றம்!

விடிய விடிய கதறியும் வேஸ்ட்! மோடி சட்டத்தை ரத்து செய்யும் உச்சநீதிமன்றம்!

-

- Advertisement -

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள வக்பு வாரிய திருத்த சட்டத்திற்கு உச்சநீதிமன்றம் தான் ஒரே நிவாரணம் என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தை உச்சநீதிமன்றம் சிறப்பு அமர்வை ஏற்படுத்தி விரைந்து விசாரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

மக்களவையில் வக்பு வாரிய திருத்த சட்ட மசோதாவுக்கு பாஜகவின் கூட்டணி கட்சிகளான தெலுங்கு தேசம் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள் ஆதரவு அளித்ததன் பின்னணி குறித்து மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் கூறி இருப்பதாவது:- நாடாளுமன்றத்தில் வக்பு மசோதா தாக்கல் செய்யப்பட்டபோது சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் 3 திருத்தங்கள் கோரப்பட்டுள்ளது. அந்த திருத்தம் நிச்சயமாக எல்லோருக்கும் பிடித்தமானதாக தான் இருக்கும். வக்பு வாரிய திருத்த சட்டத்தால் தனது வாக்கு வங்கி பாதிக்கப்படும் என்று சந்திரபாபு நாயுடு நினைக்கிறார். பொதுவாகவே பாஜக உடன் எந்த கட்சி கூட்டணி அமைத்தாலும் அவர்களுக்கு வாக்கு வங்கி பாதிக்கப்படும். நிதிஷ்குமார் கட்சி மட்டும் அல்ல. அதிமுகவுக்கும் இது பொருந்தும். பாஜக குறிப்பிட்ட அஜெண்டா உடன்தான் இயங்குகிறது. அது ஆர்எஸ்எஸ் – பாஜகவினுடைய சித்தாந்தமாகும். அதற்கு என்ன வாக்கு வங்கி உள்ளதோ அதை திரட்டிக்கொண்டே செல்கிறது. அதற்கு மாறுபட்டு இயங்குகிற கட்சி கூட்டணி வைத்தால் மிகவும் தர்ம சங்கடமாக இருக்கும். தற்போது நிதிஷ்குமாருக்கு இது ஏற்படபோகிறது. அதனால்தான் நிதிஷ்குமாரின் ஆதரவாளர்களில் ஒரு பகுதியினரை குறிப்பிட்டு இது அவர்களுக்கு ஆதரவானது என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா சொல்கிறார். ஆனால் அவர்களது அமைப்புகள் எல்லாம் சட்டத்தை கண்டித்து அறிக்கைகள் வெளியிட்டுள்ளன.

நிதிஷ்குமார் இந்த சட்டத்தை ஆதரிக்காமல் போய்விடுவாரோ என்றுதான் இதுபோன்ற வாதங்கள் முன்வைக்கப்பட்டன. நிதிஷ்குமாருக்கு இது அரசியல் ரீதியாக பின்னடைவை ஏற்படுத்தும். ஆனால் அது குறித்து எல்லாம் பாஜகவுக்கு கவலை இல்லை. ஏனென்றால் பாஜகவுக்கான  வாக்கு வங்கி என்ன இருக்கிறதோ அதைதான் அவர்கள் பெற முயற்சிக்கிறார்கள். அது தேர்தலில் பாஜகவுக்கு சாதகமாக இருக்கும். ஆனால் அடிவாங்க போகிறது நிதிஷ்குமார்தான். இதன் மூலம் அவரது முதலமைச்சர் பதவிக்கு ஆபத்து வந்துவிடும். அவருடைய விருப்பம் எல்லாம் அவரது மகன் நிஷாந்த் குமாரை அரசியலில் வெற்றி பெற செய்ய வேண்டும் என்பதுதான். அதற்காக பாஜகவிடம் விட்டுக்கொடுத்து செல்கிறார்.

சந்திரபாபு நாயுடுவுக்கான அஜெண்டா என்ன என்றால் பவன் கல்யாண் வளர்ந்து விடக்கூடாது என்பதுதான். காரணம் அவரது மகன்தான். தனது மகனை மேலே கொண்டுவர வேண்டும் என சந்திரபாபு நாயுடு நினைக்கும்போது, அதற்கு அச்சுறுத்தலாக இருப்பவர் பவன் கல்யாண்தான். இதுதவிர என்.டி.ஆரின் பேரன் ஜுனீயர் என்.டி.ஆர். வேறு போட்டியாக உள்ளார். இவற்றை எல்லாம் மனதில் வைத்துக்கொண்டு தான் சந்திரபாபு நாயுடு 3 திருத்தங்களை மட்டும் கொண்டு வந்தார். ஆனால் அந்த திருத்தங்களை பாஜக ஏற்றுக்கொள்ளாது. ஏன் என்றால் சட்ட விதிகள் வகுக்கப்பட்ட பின்னர்தான் எந்த ஒரு சட்டம், சட்டத் திருத்தம் அமலுக்கு வரும். ஆனால் அந்த சட்டவிதிகள், ஒரு சட்டம் அல்லது சட்டத் திருத்தத்தில் இருக்கும் விதிகளில் இருந்து எப்படி மாறுபட முடியும். நீங்கள் அதற்குதான் விதிகளை வகுக்க முடியும். அடிப்படை சட்டத்தின் படிதான் விதிதகளை வகுக்க முடியும். இப்படி கேட்பதன் மூலம் தனககு ஏற்படும் வாக்கு வங்கி இழப்பை சரிகட்டலாம் என்று சந்திரபாபு நாயுடு பார்க்கிறார்.

தொகுதி மறுவரைக்கு எதிராக ஒரே குரலில் ஒன்றிய பாஜக அரசின் செயலுக்கு எதிர்ப்பு – சா.மு.நாசர்

வக்பு வாரிய திருத்த சட்டத்தில் இருக்கும் ஒரே நிவாரணம் என்ன என்றால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்து வைத்திருக்கும் முயற்சிதான். அது என்ன என்றால் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடருவது ஆகும். பல மாநிலங்களும் இதேபோல் வழக்குகளை தொடரும். ஏற்கனவே பல்வேறு அமைப்புகள் தொடர்ந்த வழக்குகளும் நிலுவையில் உள்ளன. இந்த வழக்கை உச்சநீதிமன்றம் தாமதம் இன்றி விசாரிக்க வேண்டும். சில அவசர வழக்குகளை விசாரிக்க உச்சநீதிமன்றம் சிறப்பு அமர்வை ஏற்படுத்தி தினசரி விசாரணைகளை மேற்கொண்டு ஒரு வாரம், 10 நாட்களுக்குள் தீர்ப்பு வழங்குவதை எது தடுக்கிறது? அது உச்சநீதிமன்றம் செய்ய வேண்டிய கடமையாகும். அப்படியான ஒரு அவசரம் வக்பு வாரிய திருத்த சட்ட விவகாரத்தில் மேற்கொள்ளப்பட வேண்டும். காரணம் இது நாட்டை பிளவு படுத்துகிறது.

வக்பு சட்டத்தில் திருத்தம் மேற்கொண்ட பின்னர், அந்த திருத்தம் நிலைக்கத்தக்கதா? அல்லது நிலைக்கத்தக்கது இல்லையா? என்று உச்சநீதிமன்றம் உடனடியாக முடிவு எடுக்க வேண்டும். திருத்தத்திற்கு பின்னர் தாமகவே விதிகள் வந்துவிடும். சட்டம் நிறைவேறி பல பாதிப்புகள் ஏற்பட்ட பின்னர் உச்சநீதிமன்றம் விவாதிப்பதில் பயன் கிடையாது. உ.பி. போன்ற மாநிலங்களில் இது கொளுந்துவிட்டு எரியும் பிரச்சினையாகும். நேற்று அகிலேஷ் அதை எச்சரிக்கையாக சொல்கிறார். பல அமைப்புகள் அங்கே போராட்டத்தை தொடங்கிவிட்டன. வக்பு வாரிய திருத்த சட்டம் தேவையின்றி நாட்டில் பதற்றத்தை ஏற்படுத்தக்கூடிய பிரச்சினையாக உள்ளது. அப்படி பற்றம் ஏற்படுத்த வேண்டும் என்றும் மத்திய பாஜக அரசு விரும்புவதும் மிகப்பெரிய தவறாகும்.

இழப்பீடு வழங்க காப்பீட்டு நிறுவனங்களுக்கு உத்தரவு! உச்ச நீதிமன்ற நீதிபதி சூரியகாந்த் தலைமையிலான அமர்வு

வக்பு வாரிய திருத்த சட்டத்தை அவசரமாக போதிய விவாதம் இன்றி கொண்டு வருவதில் அர்த்தம் கிடையாது. காரணம் இது ஒரு பெரிய பிரச்சினையாகும். வக்புவின் வரலாறு 150 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கும். வக்பு வாரிய விவகாரத்ததில் ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒவ்வொரு விதமான உணர்வுகள் இருக்கும். காரணம் அங்கு வெவ்வேறு விதமாக வக்புக்கள் உருவாகி இருக்கும். வக்பு என்பது மிகவும் பெரிய விஷயமாகும். அதற்கு மத்திய அரசு முன்வைக்கும் வாதம் என்பது நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடைபெற்றது. இத்தனை மணி நேரம் விவாதித்தோம். இணையதளத்தில் பல லட்சம் பேர் கருத்து தெரிவித்துள்ளதாக சொல்கிறார்கள். நிச்சயமாக எம்.பிக்களுக்கு அவகாசம் போதாது.

இவ்வளவு அவசரமாக வக்பு வாரிய திருத்த மசோதாவை நிறைவேற்றி, நாளைக்கே இது முடியப்போகிற விஷயம் கிடையாது. அப்போது பாஜகவின் நோக்கம் அரசியல் தானே. நேற்றைக்கு இரவோடு இரவாக வக்பு திருத்த சட்டத்தை நிறைவேற்றிவிட்டு நாளைக்கே எல்லாம் மாறிவிடப் போகிறதா என்றால் கிடையாது. பொதுவாகவே இரவோடு இரவாக விவாதிக்கப்படுகிற அனைத்து மசோதாக்களுமே , இயல்பாகவே ஆளும்கட்சி தங்களின் நன்மைக்காக கொண்டு வருகிற தீர்மானம்தான். அவர்களது அரசியல் அணுகூலத்திற்காக தான் அவசரம் காட்டப்படுகிறது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ