Homeசெய்திகள்கட்டுரைதிருப்பரங்குன்றம் மலை விவகாரம் : வடமாநிலம் என நினைத்தீர்களா தமிழ்நாட்டை? எச்சரிக்கும் உமாபதி தமிழன்! 

திருப்பரங்குன்றம் மலை விவகாரம் : வடமாநிலம் என நினைத்தீர்களா தமிழ்நாட்டை? எச்சரிக்கும் உமாபதி தமிழன்! 

-

- Advertisement -

பாஜக திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தை அரசியலாக்கி மதுரையில் காலுன்ற முயற்சிப்பதாக மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.

திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தை பாஜக கையில் எடுத்திருப்பதன் அரசியல் பின்னணி குறித்து பிரபல யூடியூப் சேனலுக்கு உமாபதி அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:- பாஜகவின் வளர்ச்சியே மத அடிப்படையிலானதுதான். பாஜகவின் போராட்டம் என்பதே காமெடியான ஒன்று. திருப்பரங்குன்றம் கோவில் குடைவரை கோவில் ஆகும். 1700 வருடங்களுக்கு முன்பு பாறையை குடைந்து அதில் தெய்வ உருவங்களை உருவாக்குவது குடைவரை கோவிலாகும். இதன் பின்னர் கட்டுமான கோவில்கள் வருகிறது. மதுரையில் பாண்டிய சாம்ராஜ்யம் 17ஆம் நூற்றாண்டு வரை இருந்தது. இதற்கிடையே 14ஆம் நூற்றாண்டில் இஸ்லாமியர்கள் வருகிறார்கள், அதன் பின்னர் நாயக்கர்கள் வருகிறார்கள். இதில் மதுரையை ஆண்ட இஸ்லாமிய மன்னர்களில் ஒருவர் தான் சிக்கந்தர். திருப்பரங்குன்றம் கோவில் மலை மீது அடக்க ஸ்தலம் அமைந்துள்ளது. அது இன்று கட்டியேதோ, நேற்று கட்டியதோ கிடையாது. அது பாண்டிய மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டது. அந்த தர்காவில் பெரிய அளவில் விழாக்கள் நடைபெறுவது இல்லை. தர்கா தொடர்பாக இஸ்லாமியர்களோ, திருப்பரங்குன்றம் கோவிலுக்கு வரும் பக்தர்களோ எதிர்ப்பது கிடையாது. திருப்பரங்குன்றத்தில் மத ரீதியான பாகுபாடு என்பதே கிடையாது. பாஜக இதனை அரசியலாக்கி கலவரத்தை உண்டாக்குவதற்காக பீதியை ஏற்படுத்துகின்றனர்.

பாஜக, இந்து முன்னணி போன்றவர்கள் மத அரசியலை கோவையில் செய்து வெற்றி பெற்று பெற்றனர். அதேபோல் மதுரையில் மத ரீதியான கலவரங்களை தூண்ட முயற்சிக்கிறார்கள். மதுரையில் முஸ்லிம்கள் அதிகளவில் உள்ளனர். இஸ்லாமியர்கள் 90 ஆண்டுகள் மதுரையை ஆட்சி செய்துள்ளனர். பாண்டியர்கள் தான் அவர்களை அழித்து, மீண்டும் ஆட்சியை கைப்பற்றினர். அதன் பிறகு நாயக்கர், பிரிஷ்ட்டிஷர் ஆட்சியை பிடித்தனர். பாஜக இறந்தவர்களை தோண்டி எடுத்து அரசியல் செய்கிறார்கள். மதுரையில் ஒரு குறிப்பிட்ட சாதியினரை இஸ்லாமியர்களுக்கு எதிராக திருப்பிவிட முயற்சித்தார்கள். ஆனால் இரு சமுதாயத்தினரும் ஒற்றுமையாக இருப்பதால் பிரச்சினை ஏற்படவில்லை. இதனால் அவர்கள் தற்போது திருப்பரங்குன்றம் கோவிலை கையில் எடுத்துள்ளனர். இதை அரசியலாக்கி மதுரையில் பாஜகவை காலூன்ற வைக்க வேண்டும் என்பது தான் அவர்களது திட்டம். ஏனென்றால் அதிமுக பலவீனமாகி கொண்டிருக்கிறது. மத ரீதியாக மக்களை தூண்டிவிட்டு பிளவு படுத்தி இஸ்லாமியர்களுக்கு எதிரான பிரச்சினையை துண்டி கோவை போன்று கலவரத்தை ஏற்படுத்தலாம் என பார்க்கிறார்கள். ஆனால் இங்கே அது நடக்காது.

தர்காவை பெரும்பான்மையான இஸ்லாமியர்களே ஏற்க மாட்டார்கள். இது இஸ்லாமில் தடை செய்யப்பட்டதாகும். மதுரையில் உள்ள கோவில் திருவிழாக்களில் இந்து – முஸ்லிம்கள் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகின்றனர். அப்பாவி பெண்களிடம் முருகன் கோவிலில் பள்ளிவாசல் கட்டிவிட்டார்கள் என பாஜகவினர் தவறான தகவலை பரப்பி போராட்டதிற்கு அழைத்துச் சென்றுள்ளனர். மத ரீதியிலான சண்டையை மூட்டி விட்டு அதை வாக்குகளாக மாற்றி, ஜெயித்து பார்ப்பனர் ஒருவரை முதலமைச்சர் ஆக்க வேண்டும் என்பது அவர்களது ஆசை. இது இன்று நேற்று உள்ள ஆசை இல்லை. 3ஆம் நூற்றாண்டில் வடஇந்திய பிராமணர்களான பல்லவர்கள் வந்தபோதே, இந்த ஆசையுடன்தான் வந்தனர். அவர்கள்தான் தெற்காசிய முழுவதும் விநாயகரை கொண்டு சேர்த்தனர். ஒற்றுமையுடன் உள்ள மக்களுக்குள் பிரச்சினை ஏற்படுத்தி அதில் குளிர்காய்ந்து ஹெச்.ராஜா, பாண்டே போன்றவர்களை கொண்டு வந்து முதலமைச்சராக உட்கார வைத்துவிடுவார்கள். இதேபோல்தான் மத்திய பிரதேசத்தில் யாதவ் என்பவதை முதலமைச்சர் ஆகியுள்ளனர். பாஜக ஜெயித்து ஆட்சிக்கு வந்தால், உங்களை ஆளப் போவது திராவிடர்கள் இல்லை. ராஜஸ்தானில் இருந்து ஒரு சேட்டையோ, குஜராத்தில் உள்ள  ஒருவரையோ தான் கொண்டுவந்து முதலமைச்ச ஆக்கிவிடுவார்கள். இதற்கு சீமான் போன்ற கைக்கூலிகள் பணத்தை வாங்கிக்கொண்டு ஆதரவு தெரிவிப்பார்கள்.

H RAJA
H RAJA

பாஜகவினர் ஒரு கட்டம் வரை அண்ணாமலை அண்ணாமலை என்பார்கள். பின்னர் அண்ணாமலையை ஒழித்துக் கட்டிவிட்டு  குஜராத்தில் இருந்து ஒருவரை கொண்டுவந்து விடுவார்கள். இந்தி மயம் , இந்துத்துவ மயம் என்பது பழமையான கருத்தியல். சீமான் போன்றவர்களை கைகளில் வைத்துக்கொண்டு மாநிலத்தையே  கைப்பற்ற பாஜகவினர் திட்டமிடுகின்றனர். திருப்பரங்குன்றம் போராட்டத்தில் நிறைய பெண்கள் பங்கேற்றதாக பாஜக ஐ.டி.விங் சொல்கிறது. பெண்கள் முருகனுக்கு ஆபத்து என்றவுடன் ஓடோடி வந்தனர். பாஜக சொல்லும் பொய்யை படித்த ஐஐடி இயக்குநரே நம்பி மாட்டு கோமியம் குடிக்கிறார். பாஜக பரப்பிய வதந்தியை நம்பி பெண்கள் ஏராளமானோர் திரண்டனர். அடுத்து இதேபோல் பாஜக வந்ததியை பரப்பினால் அவர்கள் வர மாட்டார்கள். கந்தர் மலையா? சிக்கந்தர் மலையா? என ரைமிங் ஆக கேட்கிறார்கள். ஆனால் திருப்பரங்குன்றம் பகுதி மக்கள் இதனை வேடிக்கைதான் பார்ப்பார்கள். அவர்ளுக்கு உண்மை தெரியும் என்பதால் போராட்டத்தில் பங்கேற்க மாட்டார்கள். மதுரை மக்கள் தெளிவாக உள்ளனர். அவர்கள் பாண்டியர் காலம் முதல் எல்லாவற்றையும் பார்த்து வளர்ந்தவர்கள்.

போராட்டத்தில் பங்கேற்ற பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா, சிக்கந்தர் தர்காவை நோண்டி எடுத்துச்சென்று கோரிபாளையத்தில் வையுங்கள் என்று சொல்கிறார். இவர்கள் இந்துக்கள் என்ற பெயரில் சிலரை வைத்து வாக்குகளை பிரிக்கிறார்கள். தமிழ்நாட்டில் பாஜகவை நாம் எப்படி பார்க்க வேண்டும் என்றால், கடற்கரையில் குழந்தைகள் கட்டி விளையாடும் மணல் கோபுரம் போன்றதுதான். கட்டும்போது அழகாகத்தான் இருக்கும். ஆனால் ஒரு பெரிய அலைவந்து அடித்துச் சென்றால் பூஜியமாகிவிடும். இவர்கள் திருப்பரங்குன்றம் விவகாரத்தில் இப்படிதான் கோபுரம் கட்டி விளையாடி கொண்டிருக்கிறார்கள். பெரிய அலை வந்து அடித்துச்சென்றால் மீண்டும் பூஜியமாகிவிடும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ