Homeசெய்திகள்கட்டுரைஇது தான் கருணாநிதியின் வாழ்க்கை

இது தான் கருணாநிதியின் வாழ்க்கை

-

என்.கே.மூர்த்தி

தமிழ்நாடு முழுவதும் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. யார் இந்த கருணாநிதி? ஏன் கொண்டாடப்படுகிறார்? அவருடைய வாழ்க்கை வரலாற்றை சுருக்கமாக பார்ப்போம்.

கலைஞர் கருணாநிதியின் தோற்றம் முதல் மறைவு வரை உள்ள வரலாற்று பதிவுகள்

1924ம் ஆண்டு ஜுன் மாதம் 3ம் தேதி நாகப்பட்டின மாவட்டம் திருகுவளை என்ற கிரமத்தில் கலைஞர் கருணாநிதி பிறந்தார். ஆவருடைய தந்தை பெயர் முத்து வேலர். தாயர் பெயர் அஞ்சுகம்.

 கலைஞர் கருணாநிதி பிறந்தார். ஆவருடைய தந்தை பெயர் முத்து வேலர். தாயர் பெயர் அஞ்சுகம்.

1938ம் ஆண்டு மாணவ பருவத்திலேயே அரசியல் ஆர்வம் கொண்டவராக இருந்தார். கையெழுத்து பிரதி எழுத தொடங்கினார்.

1941ம் ஆண்டு தமிழ் நாடு மாணவர் மன்றம் என்ற அமைப்பை தொடங்கினார்.

1944ம் ஆண்டு செப்டம்பர் மாதம் கருணாநிதிக்கும் பத்மாவதிக்கும் திருமணம் நடைப்பெற்றது. இவர்களுக்கு மு.க. முத்து என்ற மகன் பிறந்தார்.

1948ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தயாளு அம்மாளுடன் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். முதல் மணைவி பத்மாவதி இறந்த பின்னர் இரண்டாவது திருமணம் நடைபெற்றது.

 கருணாநிதிக்கும் பத்மாவதிக்கும் திருமணம் நடைப்பெற்றது. இவர்களுக்கு மு.க. முத்து என்ற மகன் பிறந்தார்.

1949ம் ஆண்டு செப்டம்பர் 18ம் தேதி அறிஞர் அண்ணா தலைமையில் திராவிட முன்னேற்ற கழகம் தொடங்கப்பட்டது. அதில் குறிப்பிடும் படியான தலைவர்கள் பட்டியலில் கருணாநிதி இடம் பெறவில்லை.

1950ம் ஆண்டு கருணாநிதி கதை – வசனம் எழுதிய “மந்திர குமாரி“ திரைப்படம் வெளியானது. அதில் எம்.ஜி. ஆர் அறிமுகமானார்.

https://www.apcnewstamil.com/news/tamilnadu-news/kalaignar-photo-exhibition-extended-till-7th/89519

1950 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 30 ஆம் தேதி கருணாநிதிக்கும் தயாளு அம்மாளுக்கும் முதல் மகனாக அழகிரி பிறந்தார்.

1952ம் ஆண்டு கலைஞர் கருணாநிதி கதை, திரைக்கதை, வசனம் எழுதிய “பராசக்தி” திரைப்படம் வெளிவந்தது. அதில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அறிமுகமாகி புகழ் பெற்றார்.

கலைஞர் கருணாநிதி கதை, திரைக்கதை, வசனம் எழுதிய “பராசக்தி” திரைப்படம் வெளிவந்தது. அதில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அறிமுகமாகி புகழ் பெற்றார்.

1953 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 01 ஆம் தேதி கருணாநிதிக்கும் தயாளு அம்மாளுக்கும் இரண்டாவது மகனாக ஸ்டாலின் பிறந்தார்.

1953ம் ஆண்டு ஜுலை 14,15 ஆகிய தேதிகளில் ராஜஜி கொண்டு வந்த குலக் கல்வி திட்டத்தை எதிர்த்து திமுக போராட்டம் நடத்தியது. ரயில் தண்டவாலத்தில் படுத்து கருணாநிதி போராட்டம் நடத்தினார். “டால்மியா புரம்“ என்ற பெயரை கல்லக்குடி என்று பெயர் மாற்றம் செய்யவும் கருணாநிதி போராட்டம் நடத்தினார்.

1957ம் ஆண்டு கருணாநிதி முதன் முதலாக குளித்தலை சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றிப் பெற்றார்.

1959ம் ஆண்டு சென்னை மாநகராட்சி தேர்தலில் திமுக போட்டியிட்டு 45 இடங்களில் வெற்றிப் பெற்றது. சென்னை மாநகராட்சியை திமுக கைப்பற்றியதற்கு கருணாநிதியே காரணமாக இருந்தார்.

சென்னை மாநகராட்சி தேர்தலில் திமுக போட்டியிட்டு 45 இடங்களில் வெற்றிப் பெற்றது. சென்னை மாநகராட்சியை திமுக கைப்பற்றியதற்கு கருணாநிதியே காரணமாக இருந்தார்.

1962ம் ஆண்டு தமிழக சட்டமன்றத்தில் திமுக 50 தொகுதிகளை கைப்பற்றி எதிர் கட்சியாக அமர்ந்தது. அதில் எதிர் கட்சி துணை தலைவராக கருணாநிதி பதவியேற்றார்.

1963ம் ஆண்டு சட்ட எரிப்பு போராட்டத்தில் கலந்துக் கொண்டு 6 மாத காலம் கடுங்காவல் சிறை தண்டனை அனுபவித்தார்.

1965ம் ஆண்டு பிப்ரவரி 16ம் தேதி இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். ஏப்ரல் 15ம் தேதி விடுதலை ஆனார்.

1966 ஆம் ஆண்டு ராஜாத்தி அம்மாவை மூன்றாவது மனைவியாக மணம் முடித்தார் கலைஞர் கருணாநிதி.

 ராஜாத்தி அம்மாவை மூன்றாவது மனைவியாக மணம் முடித்தார் கலைஞர் கருணாநிதி

1967ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றிப் பெற்றது. தமிழ் நாடு முதலமைச்சராக அறிஞர் அண்ணா பதவியேற்றார். கலைஞர் கருணாநிதி பொதுப்பணி துறை அமைச்சராக பதவியேற்றார்.

1968 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 05 ஆம் தேதி கலைஞர் கருணாநிதிக்கும் ராஜாத்தி அம்மாளுக்கும் கனிமொழி பிறந்தார். மூன்றாவது மனைவிக்கு முதல் குழந்தையாக பிறந்தவர் தான் கனிமொழி.

https://www.apcnewstamil.com/news/tamilnadu-news/kavignar-vairamuthu-pays-floral-tribute-to-kalaignar/89464

1969ம் ஆண்டு மார்ச் மாதம் அறிஞர் அண்ணா உயிர் இழந்தார். பிப்ரவரி மாதம் 10ம் தேதி தமிழ் நாடு முதலமைச்சராக கலைஞர் கருணாநிதி பதவியேற்றார்.

1971ம் ஆண்டு மார்ச் மாதம் 15ம் தேதி இரண்டாவது முறையாக திமுக வெற்றிப் பெற்றது. மீண்டும் முதலமைச்சராக கலைஞர் கருணாநிதி பதவியேற்றார்.

1972ம் ஆண்டு அக்டோபர் மாதம் 14ம் தேதி திமுகவில் இருந்து எம்.ஜி.ஆர் வெளியேற்றப்பட்டார்.

ஆகஸ்ட் 15ம் தேதி தேசிய கொடியை ஏற்றும் உரிமையை மாநில முதலமைச்சருக்கு வழங்கப்பட்டது. அந்த உரிமையை பெற்று தந்தவர் கலைஞர் கருணாநிதி.

1974ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி தேசிய கொடியை ஏற்றும் உரிமையை மாநில முதலமைச்சருக்கு வழங்கப்பட்டது. அந்த உரிமையை பெற்று தந்தவர் கலைஞர் கருணாநிதி.

1976ம் ஆண்டு ஜனவரி 31ம் தேதி கலைஞர் கருணாநிதி தலைமையிலான அரசை மத்திய அரசு கலைத்தது.

1986ம் ஆண்டு கலைஞர் கருணாநிதி ஈழத்தமிழர் மானாட்டை நடத்தினார்.

1988ம் ஆண்டு வி.பி.சிங்வுடன் இணைந்து தேசிய முன்னணியை தொடங்கினார். அதற்கு வி.பி.சிங் தலைமைத் தாங்கினார்.

1989ம் ஆண்டு திமுக வெற்றிப் பெற்றது. கலைஞர் கருணாநிதி மூன்றாவது முறையாக முதலமைச்சரானர்.

1991ம் ஆண்டு ஜனவரி 30ம் தேதி திமுக ஆட்சியை மத்திய அரசு கலைத்தது.

1996ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றிப் பெற்றது. கலைஞர் கருணாநிதி 4வது முறையாக முதலமைச்சரானார்.

2001ம் ஆண்டு ஜுன் 30ம் தேதி அன்று நள்ளிரவில் கலைஞர் கருணாநிதி கைது செய்யப்பட்டார். நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை எர்படுத்தியது.

2006ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வெற்றிப் பெற்று 5வது முறையாக கலைஞர் கருணாநிதி முதலமைச்சரானார்.

2008 – 2009ம் ஆண்டு இலங்கையில் நடந்த போரில் விடுதலை புலி அமைப்பு பெரும் தோல்வியை தழுவியது. அதில் கலைஞர் மீது பெரும் விமர்சனம் எழுந்தது.

2010ம் ஆண்டு மார்ச் மாதம் புதிய தலைமை செயலகம்-சட்டமன்ற அலுவலகம் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் கட்டப்பட்டது. அதனை மன்மேகன் சிங் திறந்து வைத்தார்.

2010ம் ஆண்டு ஜுன் மாதம் கோயம்புத்தூரில் உலக தமிழ் செம்மொழி மாநாடு நடத்தினார்.

2013ம் ஆண்டு திமுக பொருளாளராக மு.க. ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார்.

2016ம் ஆண்டு அக்டோபர் 25ம் தேதி கலைஞர் கருணாநிதியின் உடல் நலம் பாதிக்கப்பட்டது.

2016ம் ஆண்டு டிசம்பர் மாதம் 1ம் தேதி கலைஞர் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டிசம்பர் 7ம் தேதி வீடு திரும்பினார்.

தனது 94வது வயதில் கலைஞர் கருணாநிதி மறைந்தார். அவர் மறைந்தாலும் அவர் வரலாற்றை மறைக்க முடியாத அளவிற்கு சாதித்து உள்ளார்.

2016ம் ஆண்டு டிசம்பர் 15ம் தேதி மீண்டும் காவேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சைப் பெற்று வீடு திரும்பினார்.

2017ம் ஆண்டு டிசம்பர் மாதம் 16ம் தேதி அண்ணா அறிவாலயம் சென்றார். ஓராண்டு கழித்து கட்சி அலுவலகத்திற்கு சென்றார்.

2018ம் ஆண்டு ஜுலை மாதம் 27ம் தேதி இரவு உடல் நலமின்றி காவேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 07ம் தேதி மாலை 6.10 மணி அளவில் கலைஞர் கருணாநிதியின் உயிர் மண்ணைவிட்டு பிரிந்தது.

தனது 94வது வயதில் கலைஞர் கருணாநிதி மறைந்தார். அவர் மறைந்தாலும் அவர் வரலாற்றை மறைக்க முடியாத அளவிற்கு சாதித்து உள்ளார்.

MUST READ