Homeசெய்திகள்கட்டுரைசீமானின் மனமாற்றத்திற்கு இதுதான் காரணம்... சுப.வீரபாண்டியன் நேர்காணல்!

சீமானின் மனமாற்றத்திற்கு இதுதான் காரணம்… சுப.வீரபாண்டியன் நேர்காணல்!

-

- Advertisement -

இலங்கை இறுதிப் போரை தமிழ்நாடு அரசு தலையிட்டு தடுத்திருக்க முடியாது, அன்று கலைஞர் ஆட்சியை விட்டு வெளியே வர வேண்டும் என்று பலரும் நினைத்தனர் என பேராசிரியர் சுப.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

ஈழப் போராட்டத்தில் கலைஞரின் பங்கு குறித்து பிரபல யூடியூப் சேனலுக்கு பேராசிரியர் சுப. வீரபாண்டியன் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-  ஈழப் போரின் இறுதி நாட்களில் போர் நிறுத்தத்திற்கான முயற்சிக்காக ப.சிதம்பரத்திடம், கஸ்பர், கனிமொழி, நான் ஆகியோர் முயற்சிகளில் ஈடுபட்டோம். ஆனால் சிங்களர்கள் போரை நிறுத்த முடியாது என பிடிவாதமாக இருந்தனர். அதற்கு 2 நாட்களுக்கு முன்பு நடேசன் போன்றோர் பேசினார்கள். பிறகு இரவு செய்தி வந்துவிட்டது. காலையில் அப்பாவிடம் சொல்லிவிடுங்கள் என்று கனிமொழி சொன்னார். மறுநாள் காலை 6 மணிக்கு எல்லாம் சென்று கலைஞரிடம் சென்று சொன்னேன். அவருக்கு எல்லாம் தெரிந்திருந்தது. மே 15, 16 தேதிகளில் கடைசியாக இலங்கையில் இருந்து ஓரு போராளி பேசினார். பின்னால் குண்டு சத்தம் கேட்டது. கடைசியாக அதுதான் நான் கேட்ட கடைசி குரல். எல்லாம் முடிந்த பிறகு இதை திமுகவிற்கு எதிராக மாற்றப்பட்டது. ரொம்ப கொடுமை என்ன என்றால் இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என்று சீமான் பேசியதை நான் கேட்டேன். திருமாவளவனுக்கு தேர்தல் பிரச்சாரத்திற்காக கடலூர் சென்றபோது, இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என்று சீமான் சொன்னார்.

ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது சாத்தியப்படாது – இது ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் – எதிர் கட்சிகள் கடும் எதிர்ப்பு

பிராபகரனை அழைத்து வந்து தூக்கில் போடுங்கள் என்று தீர்மானம் போட்ட ஜெயலலிதாவுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். ஜெயலலிதா ஆட்சியில் இருந்த 10 ஆண்டுகள்தான் புலிகளுக்கு எதிரான ஒடுக்கு முறைகள் தான் இருந்தன. வால்வாறையில் அதிமுகவில்  எஸ்.பி.வேலுமணியின் தூதுவர் ஒருவர் அவரை சந்தித்தார். பின்னால் ஆயிரம்  நடைபெற்றிருக்கலாம். சீமான் எந்த நியாயமும் இல்லாமல் பேசினார். நானும், சீமானும் 2010ஆம் ஆண்டிற்கு பின்னர் பேசி கொள்வதில்லை. கடைசியாக பரியேறும்  பெருமாள் படத்தின் முன்னோட்டத்திற்காக சென்றபோது, அவரை பார்த்தேன். அதன் பின்னர் அவரை சந்திக்கவில்லை. சந்திக்கவும் விரும்பவில்லை. இலங்கை இறுதிப்போரை தமிழ்நாடு அரசு தலையிட்டு தடுத்திருக்க முடியாது. அன்று கலைஞர் ஆட்சியை விட்டு வெளியே வர வேண்டும் என்று நினைத்தனர். அப்படி வந்தால் 2009ல் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்திருப்பார். அது கலைஞருக்கு எதிரான வெறுப்புதானே தவிர அதில் உண்மையில்லை.

பிரபாகரன், எம்ஜிஆர் மீது மிகுந்த பிரியமுடன்  இருந்தார். எம்.ஜி.ஆரும் பிரபாகரன் மீது பிரியமாக இருந்தார். ராஜிவ்காந்தி கொலைக்கு பின்னர் கலைஞர் புலிகளை எதிர்ப்பதும் இல்லை, ஆதரிப்பதும் இல்லை என்ற முடிவுக்கு வந்தனர். அப்போது தான் வைகோ, பிரபாகரனை சென்று பார்த்தது. ராஜிவ்காந்தி கொலைதான் தமிழ்நாட்டில் ஈழத்திற்கு ஆதரவான நிலையை மாற்றியது. நானே இதனை ஒரு காலத்தில் ஆதரித்தேன். ராஜிவ் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்காக தொடர்ந்து பாடுபட்டவர்களில் ஒருவன் நான். 1998 மே மாதம் காமராஜர் அரங்கத்தில் நான், பழ நெடுமாறன் போன்றோர் துண்டு ஏந்தி நிதி திரட்டி, அனுப்பினோம். 26 தமிழர்கள் உயிர் காக்கும் நிதி என்று அனுப்பிவைத்தோம்.

2012ஆம் ஆண்டு பிரபாகரன் மரணம் தொடர்பாக பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. கலைஞர், பேராசிரியர் அன்பழகன், ஆசிரியர் கி.வீரமணி, நான் ஆகியோர் அதில் பங்கேற்றேன். அப்போது பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா? என்று பத்திரிகையாளர் கேள்வி எழுப்பினர். அப்போது கலைஞர் போராளிகள் சாவதில்லை என்று விடை அளித்தார். கலைஞர் புலிகளுக்கு எதிராக பேசியது இல்லை. எங்களைப் போல ஆதரவாகவும் பேசியது இல்லை. ஈழ இறுதிப் போரின்போது காலை நான் சென்றபோது, ப.சிதம்பரத்துக்கு போன் செய்து கொண்டு இருந்தார். அதனை என்னிடம் காண்பித்தார். கலைஞரால் காப்பாற்ற முடியாமல்தான் போனது. அதில் மாற்று இல்லை. ஆனால் அதை இவர்கள் பயன்படுத்திக்கொண்டு ஜெயலலிதாகவுக்கு ஆதரவாக பேசுவது எந்த விதத்திலும் நியாயம் இல்லை.

எல்லோரையும் அனுப்பிவிட்டு கலைஞர் என்னிடம் சொல்கிறார். மற்றவர்களுக்கு தேர்தல் பழக்கம். உனக்கு இது புதியது. இலக்கிய கூட்டங்கள் பேசுவது வேறு. தேர்தல் பிரச்சாரத்தில் பேசுவது வேறு. எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நீ எந்தந்த ஊர்களுக்கு செல்கிறாய் என்று நாட்களை ஒதுக்கி புரோகிராம்களை சொல்லு, நான் மாவட்ட செயலாளர்களிடம் சொல்லி ஏற்பாடுகளை செய்கிறேன் என்றார். நான் கண் கலங்கிவிட்டேன. நான் என் புத்தகத்தில் மறுபடியும் என் அப்பாவின் குரலை கேட்டேன் என்று எழுதினேன். நான் கட்சியில் உறுப்பினர் ஆகவில்லை. எப்போதும் எந்த அரசியல் செய்திகளுக்காகவும் கோபப்பட்டு பேசுவதில்லை. ஆனால் சீமான் கலைஞரை பற்றி இழிவாக பாடும்போது அன்றிரவு முழுவதும் என்னால் தூங்கக்கூட முடியவில்லை, இவ்வாறு அவர் தெரித்தார்.

MUST READ