Homeசெய்திகள்கட்டுரைதைராய்டா?கவலைவேண்டாம்! எடை குறைக்க எளிய வழி

தைராய்டா?கவலைவேண்டாம்! எடை குறைக்க எளிய வழி

-

தைராய்டா? கவலைவேண்டாம்! எடை குறைக்க எளிய வழி

இந்தியாவில் பத்தில் ஒருவர் தைராய்டு சுரப்பி குறைபாட்டால்  பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.  புள்ளிவிவரங்களின்படி இந்தியாவில் 4.5 கோடிக்கும் அதிகமானோர்  தைராய்டு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தைராய்டு நோய் அதிகம் பெண்களிடையே காணப்படுகிறது. பெரும்பாலும், கருவுற்றிருக்கும் பெண்கள் மற்றும் குழந்தை பெற்ற பெண்களுக்கு மகப்பேறுக்கு பிந்தைய முதல் மூன்று மாத காலத்தில் 44.3 சதவீதம் பேருக்கு தைராய்டு சுரப்பி குறைபாடு ஏற்படுகிறது.

தைராய்டு மற்றும் பிசிஓடி-யால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் எதிர்கொள்ளும் பிரச்சனை உடல் எடை.

பல வருடங்களாக தைராய்டு பாதிப்பு உள்ளதா? உடல் பருமனால் அவதிப்படுகிறீர்களா? உடற்பயிற்சி,  உணவுக்கட்டுப்பாடு என முயற்சி செய்தும் உடல் எடையைக் குறைக்க முடியவில்லையா?

உங்கள் பிரச்சனைக்கு தீர்வு சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, உடற்பயிற்சி பயிற்சியாளர் ஷீபா தேவராஜ்.

தைராய்டு அல்லது பிசிஓடி பிரச்னை உள்ளவர்களுக்கு எடையைக் குறைப்பது சாத்தியமா? இல்லையா? என்ற கேள்வி பலருக்கும் இருக்கிறது, அதற்கு ஓரளவு வாய்ப்பும் உள்ளது.

உடற்பயிற்சியை பொறுத்தவரை Resistance Training செய்வதன் மூலம் தைராய்டு மற்றும் பிசிஓடி பாதிப்பு உள்ளவர்களாலும் எடையை நன்றாகவே குறைக்க முடியும். கூடவே சரியான உணவுப்பழக்கத்தையும் பின்பற்ற வேண்டும்.

தைராய்டும் பிசிஓடியும் லைஃப் ஸ்டைலுடன் தொடர்புடைய பிரச்னைகள். இதற்கு சரியான உணவை எடுத்துக் கொள்வதால் உடல் எடை குறையும்.

 

இது எடைக்குறைப்பில் 100 சதவிகிதப் பலனைத் தருகிறது. மேலும் இந்தப் பிரச்னைகள் தீவிரமடையாமல் கட்டுக்குள் இருக்கவும் உதவுகிறது. சரியான ஃபிட்னெஸ் ஆலோசகரை சந்தித்து உடற்பயிற்சிகள் குறித்து  கேட்டுக் கொள்வது சிறந்தது.

உடற் பயிற்சிகள் உங்கள் தசைகளின் வலிமையை அதிகரித்து, உடல் எடையை  குறைத்து, உடலை சரியான வடிவத்துக்குக் கொண்டு வரவும் உதவும்.

மகப்பேறு மருத்துவர்களிடம் Resistance Training குறித்துப் பேசியபோது அவர்கள் சொல்வதும் இதுதான், சிலர் Resistance Training செய்வதையே ஒரு வேலையாக பின்பற்றி வருகிறார்கள் என்று கூறுகின்றனர்

அதன் பின்னரும் உடல் எடை குறையவில்லை என்றால் நீங்கள் உடற்பயிற்சியை சரியாகச் செய்யவில்லை என்று தானே அர்த்தம்.

எனவே எடைக்குறைப்பு முயற்சியைக் கைவிட்டவர்களின் ஆலோசனையையோ, அல்லது  அனுபவமில்லாதவர்களின்  பேச்சைக் கேட்டுக்கொண்டு உங்கள்  நம்பிக்கையை இழக்காதீர்கள்.

உடற்பயிற்சி, உணவுப்பழக்கம் இரண்டையும் சரியான நிபுணர்களின் வழிகாட்டுதலோடு மனம் தளராமல் பின்பற்றும்போது நல்ல பலன் கிடைக்கும் என்று கூறினார் ஷீபா தேவராஜ்.

MUST READ