Homeசெய்திகள்கட்டுரைஇந்தியாவின் பன்முகத்தன்மையை சிதைக்கும் யுஜிசியின் புதிய விதிகள்... பாலச்சந்திரன் ஐஏஎஸ் குற்றச்சாட்டு!

இந்தியாவின் பன்முகத்தன்மையை சிதைக்கும் யுஜிசியின் புதிய விதிகள்… பாலச்சந்திரன் ஐஏஎஸ் குற்றச்சாட்டு!

-

- Advertisement -

மத்திய அரசை ஆர்எஸ்எஸ் அமைப்பு பின்னால் இருந்து இயக்குவதாகவும், இந்திய நாட்டின் பன்முகத்தன்மையை அவர்கள் ஒழித்துக்கட்ட நினைக்கிறார்கள் என்றும் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி பாலசந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.

மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களை அபகரிக்கும் விதமான யுஜிசியின் புதிய விதிகள் தொடர்பாக பாலச்சந்திரன் ஐஏஎஸ் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:- யுஜிசியின் புதிய விதிகளுக்கு எதிராக டெல்லியில் திமுக மாணவர் அணியினர் போராட்டம் நடத்தியுள்ளது வரவேற்கத்தக்கது. நாட்டின் தலைநகரான டெல்லியில் அனைத்து மாநில மக்களும் வசிப்பார்கள். அங்கு ஒரு நியாயமான காரணத்திற்காக அமைதியான போராட்டம் நடத்தினால் அது இந்தியாவின் அனைத்து தரப்பு மக்களின் கவனத்தையும் ஈர்க்கும். யுஜிசி புதிய விதிகளுக்கு எதிராக தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா, கர்நாடகா போன்ற மாநிலங்கள் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளன. ஆனால் வடமாநிலங்களில் இதுபோன்ற விழிப்புணர்வு இல்லாது ஏன் என கேள்வி எழுகிறது. அப்போது, பல்கலைக் கழங்களுக்கும், யுஜிசியின் விதிகளுக்கும் மோதல் வரும்போது யுஜிசியின் விதிகள் தான் இறுதியானது என உச்சநீதிமன்ற டிவிஷன் பென்ச் தீர்ப்பு வழங்கியது. அப்போது, அது பெரும் விவாதத்தை எழுப்பியது. ஆனால் அந்த தீர்ப்பை எதிர்த்து யாரும் மேல் முறையீடு செய்யவில்லை. அந்த தைரியத்தில்தான் இவர்கள் இதுபோன்ற விதிகளை கொண்டுவந்துள்ளனர்.

ugc
ugc

எனவே இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மாநில அரசுகள் உடனடியாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும். அப்போது வழக்கில் இறுதித் தீர்ப்பு வெளியாகும் வரை முந்தை உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்க வேண்டும். அப்படி தடையோ, விதிகளை ரத்து செய்யாவிட்டாலோ சட்டப்படி யுஜிசி இதுபோன்ற விதிகளை கொடுக்கலாம் என்ற நிலை உள்ளது. இது துரதிர்ஷ்டவசமானது. அதிலும் கல்வித் துறையை சாராதவர்களும் துணை வேந்தர்கள் ஆகாலம் என விதிகள் கொண்டு வந்துள்ளனர். இதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்.

சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், யுஜிசியின் புதிய விதிகள் அரசியல்வாதிகளை, முதலாளிகளின் பணியாளர்களாக மாற்ற விரும்பும் விதமாக உள்ளதாக தெரிவித்துள்ளார். அவரது கருத்து உண்மைதான். அரசு பணியாளர்களுக்கு காண்டக்ட் ருல்ஸ் உள்ளது. நாங்கள் ஒவ்வொரு ஆண்டும் சொத்து விவரங்களை அரசுக்கு அளிக்க வேண்டும். யாராவது ஒருவருடைய செயலில் சந்தேகம் ஏற்பட்டால் அந்த ஆவணங்களை பரிசோதித்து நடவடிக்கை எடுப்பார்கள். மத்திய அரசு பணிகளில் லேட்டரல் என்ட்ரி முறை முலம் இணைச் செயலாளராக நியமனம் செய்ய முயற்சித்தார்கள். அரசில் பெரும்பாலான பணிகளை இணைச் செயலாளர்கள்தான் மேற்கொள்வார்கள். பொருளாதார விவகாரங்கள், நிதித்துறை போன்ற முக்கிய துறைகளில் தனியார் நிறுவன உயர் பொறுப்புகளில் நேரடியாக நியமனம் செய்ய முடியும். அப்படி ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்களில் இருந்து வந்தவர்கள் என்ன செய்வார்கள். இந்த 5 வருடத்தில் அடுத்து பெரிய நிறுவனத்திற்கு செல்வதற்கான வேலைகளைதான் செய்வார்கள்.

நாட்டில் மிகச்சிறந்த கல்வியாளர்களாக இருந்தவர்கள், ஆளுநர்களாக இருந்துள்ளனர். அலிகார் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக இருந்த நூருல்ஹாசன், ஆளுநராக சிறப்பாக செயல்பட்டுள்ளார். மேற்கு வங்கத்தின் ஆளுநராக சிறப்பாக செயல்பட்டு வந்தார். டார்ஜிலிங்கை தனி நாடாக வேண்டும் என சுப்சாஷ் கிசிங் போராடி கொண்டிருந்தனர். போராட்டத்திற்கு பின்னணியில் இருந்த நேபாள நாட்டினர் அனைவரும் ராணுவத்தில் பணிபுரிந்தவர்கள். இந்த விவகாரத்தில் போராடும் தரப்பும், மேற்கு வங்க அரசும் தவறான நிலைப்பாட்டை எடுத்துக் கொண்டிருந்தனர். மேற்கு வங்க அரசு, டார்ஜிலிங் ஒரு மாவட்டம். அதற்குரிய அதிகாரம் மட்டுமே வழங்க முடியும் என தெரிவித்தது. அப்போது ஆளுநராக இருந்த நூருல்ஹாசன் இரு தரப்பையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். மாநில அரசிடம் எவ்வளவு தர முடியும் என கேட்டார். அப்போது, தன்னாட்சி அதிகாரம் வழங்க முடியும் என முதலமைச்சர் ஜோதிபாசு தெரிவித்தார். போராட்ட தலைவர் கிசிங்கிடம் ஒரே அடியாக பிரிந்து செல்லும் நிலைப்பாட்டிலேயே ஏன் நிற்கிறீர்கள்?. வந்து பேச்சுவார்த்தை நடத்துங்கள் என்று அழைத்து இரு தரப்பினரையும் பேசி வைத்தார். அப்போது நிதி சுதந்திரத்துடன் கூடிய தன்னாட்சி கவுன்சில் அதிகாரம் வழங்குவதாக முதலமைச்சர் ஜோதிபாசு தெரிவித்தார்.

ஆனால் கிசிங் கேட்கவில்லை. அப்போது யாரும் எதிர்பார்க்காத விதமாக முதலமைச்சர் ஜோதிபாசு தனது இருக்கையில் இருந்து எழுந்து சென்று சுப்சாஷ் கிசிங்கின் கைகளை பிடித்துக்கொண்டு ஒரு நிலைப்பாட்டிற்கு வாருங்கள் என கேட்டார். மிகப்பெரிய தலைவரான ஜோதிபாசு, தனது கைகளை பற்றியதால் நெகிழ்ச்சி அடைந்த கூர்க்கா தலைவரான கிசிங் அரசின் முடிவுக்கு ஒப்புதல் வழங்கினார். இதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் ஆளுநர் நூருல் ஹாசன். ஆனால் எந்தவிதமான கல்வி தகுதியும் இல்லாமல் துணை வேந்தர் ஆக வேண்டும். அரசுக்கு மிகவும் விசுவாசமாக இருந்து அடுத்த புரமோஷனில் ஆளுநராக வேண்டும். அப்படி ஆளுநராக இருந்துகொண்டு மாநில அரசின் எந்த தீர்மானத்திற்கும், மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் வைத்திருந்து குடியரசு துணை தலைவர் ஆக வேண்டும் என திட்டம் போட்டுக் கொண்டிருந்தார்கள் என்றால் நாடு எங்கே போகும்.

ஆர்.எஸ்.எஸ் அமைப்பு நாட்டில் உள்ள பிற வரலாறுகள், பிற கலாச்சாரங்கள், பிற பழக்க வழக்கங்களை ஒழித்துக்கட்டி விட்டு அவர்கள் நினைப்பதையே வரலாறு, கலாச்சாரம், பண்பாடு என உருவாக்கும் வேலையை செய்வதாகவும், அதன் வெளிப்பாடுதான் யுஜிசியின் புதிய விதிகள், அரசியலமைப்பு மீதான தாக்குதல் என்று ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார். அவர் சொல்வது முழுக்க முழுக்க உண்மைதான். இன்று ஆர்எஸ்எஸ் அரசின் பின்னால் இருந்து இயங்குகிறது என நான் நம்புகிறேன். பன்முகத்தன்மை கொண்ட ஒரு நாடு இந்தியா. இதனை ஒழித்துக்கட்ட வேண்டும் என நினைக்கிறார்கள். 100 வருடங்களுக்கு முன்பு இருந்த பாரதியார் செப்புமொழி பதினெட்டு உடையாள் எனில், சிந்தனை ஒன்றுடையாள் என்கிறார். இதில் பாரதியார் என்ன சொல்கிறார் என்றால், செப்புமொழி 18ஆக இருக்கும் வரைதான் சிந்தனை ஒன்றாக இருக்கும். செப்புமொழி ஒன்றாக்க யாராவது நினைத்தால் சிந்தனை 18 ஆகிவிடும் என்பதுதான். இதுதான் உண்மை செப்புமொழியை ஒன்றாக்க நினைப்பவர்கள்தான் இந்த நாட்டின் பிரிவினைக்கு வித்திடுகிறவர்கள் ஆவார்கள். இப்படிபட்ட பன்முகத்தன்மை கொண்ட ஒரு நாட்டில் எப்படி மக்கள் தங்களை உணர வேண்டும் என்றும் சொல்கிறார். என் மொழி, என் இனம், என் நாடு இதுதான் தரவரிசை. இதில் நாட்டின் முக்கியத்துவம் கூடத்தான் செய்கிறது. இப்படிப்பட்ட மொழியை பேசும் நான்,  இப்படிபட்ட  பாரம்பரியமிக்க மாநிலத்தில் வசிக்கும் இனத்தை சேர்ந்த நான் இந்தியன் என்பதில் பெருமை கொள்கிறேன் என்று தான் சொன்னார்.

MUST READ