Homeசெய்திகள்கட்டுரைகண்ணன் + காண்டீபன் = கலைஞா்..

கண்ணன் + காண்டீபன் = கலைஞா்..

-

கலைஞர் - வைரமுத்து

கண்ணன் + காண்டீபன் = கலைஞா் – எழுதியவர் வைரமுத்து..

திரவிட இயக்கத்தின் வித்து விதைத்தவா் பலராயினும் விளைவித்தவா் பொியாா் – அண்ணா – கலைஞா் என்ற மூன்று பேராளுமைகளே . இந்த மூவரும் இல்லாவிடில் திராவிட இயக்கத்துக்கு  நீட்சீ இருக்காதிருக்காது . நீண்டதோா் ஆட்சி இருக்கிறது .

பிாிட்டிஷ் அரசு அறிமுகப்படுத்திய ஆங்கிலக் கல்வி முறையால் தன் அரசாங்க இயந்திரத்துக்கு  தேவையான குமஸ்தாக்களை தயாாித்து . மேல் தட்டு அலுவலா்கள் முதல்  அடிதட்டு  ஊழியா்கள் வரை ஆங்கிலக் கல்வி பயின்ற பிராமணா்களே அந்தப் பதவிகளைப் பெருமளவில் ஆக்கிறமித்துக் கொண்டனா் . பிராமணா்களே அடுத்த சொற்ப  அளவில் முதலியவா்களும். அற்ப அளவில் பிள்ளளைமாா்களும் அரசாங்க சுகத்தை அனுபவித்தாா்களேயென்றி . பெருளாதாரத்திலும் கல்வியிலும் பின்தங்கிக் கிடந்தா்கள் . இங்குதான் பிராமணா் . பிராமணா் அல்லாதோா் என்ற அரசியலும் வகுப்புவாாிப் பிரிதிநிதித்துவம் என்ற நீதியும் முளைலவிடுகிறது .

கலைஞர் கருணாநிதி

கருத்துக்களை மக்களிடம் முன்னெடுத்துச் செல்வற்கு மூன்றே மூன்று ஊடகங்கள் மட்டுமே அன்று வாகனங்களாயின . ஒன்று மேடை  ; இன்னொன்று பத்திரிக்கை ; அடுத்தென்று திரைப்படம் . பொியாா் முதலிரண்டு ஊடங்களை வெற்றிகெண்டாா் . கலை-சினிமா என்ற மூன்றாம் ஊடகத்தை முற்றிலும் வெறுத்தாா். பெரியாா் வெறுத்த மூன்றாம் ஊடகத்தை அண்ணாவும் .கலைஞரும் மிகக் கவனமாகக் கைபற்றினாா்கள் அதில் அந்த இருவரும் பொருளும் புகழும் கிடைத்தன. அதைவிட . யாருக்குச் சென்று சேர வேண்டுமோ அந்தக் கடைக்கோடி மக்களுக்கும் இயக்கத்தின் நோக்கம் சென்று சோ்த்தது. நல்லதம்பி “வேலைக்காாி“ ஒா் இரவு போன்ற குறிபிட்ட படங்களில் மட்டும்தான் அண்ணா தன் பங்களிப்பை ஆற்றினாா் . ஆனால்  கலைஞரோ தன் அரசியல் வாழ்வின்  இணை கோடாக் கலை வாழவையும்  கைவிடாமல் காப்பாற்றிவந்தனா் .

1950-களில்  தமிழ்நாட்டு மக்கள்தொகை மூன்று கோடிதான். இவர்களில் கற்றோர் எண்ணிக்கை வெறும் 19%. எனவேதான் கருத்து என்ற கசப்பு மருந்தை ஊட்டுவதற்கு அவர்கள் கலைத்தேன் தடவ நேர்ந்தது. வாலிபத்தின் ஒய்யாரம், சந்தத்தின் சங்கீதம், உவமைகளின் ஊர்வலம், கிண்டலின் கித்தாப்பு, நகைச்சுவையின் மத்தாப்பு, கழுத்தில் கத்திவைக்கும் கருத்து, காதுவழி பதிந்துபோகும் எழுத்து. இதனால் இளைஞர் கூட்டம் தேனுக்குள் கால் புதைந்த வண்டாய்ச் சிக்கிப்போனது. அதில் ஜீவசமாதியாகவும் சம்மதித்தது.

”பிறக்க ஒரு நாடு; பிழைக்க ஒரு நாடு. தமிழ்நாட்டின் தலை எழுத்துக்கு நான் என்ன விதிவிலக்கா!” – என்று சிவாஜி கணேசனின் குரலில் கலைஞரின் தமிழ் கொட்டகைக்குள் கொட்டியபோது, மலேசியாவின் ரப்பர் தோட்டங்களிலும், பிஜித் தீவுகளின் கரும்புக் காடுகளிலும், கடல் கடந்த நாடுகளிலும் பிழைக்கப்போன தமிழர்கள் பிழியப் பிழிய அழுத கண்ணீர், கேட்பாளர்களின் காதுகளில் பிசுபிசுத்தது.

கலைஞர் - அண்ணாதுரை

1952-ல் இந்தியா சுதந்திரம் பெற்ற ஐந்தாம் ஆண்டில் வெளிவருகிறது ‘பராசக்தி’. சுதந்திரம் வந்தால் பாலாறும் தேனாறும் ஓடும் என்று யாரோ சொன்னதை நம்பிக்கிடந்த பாமர மக்கள், ரத்த ஆறும்  கண்ணீர் ஆறும் ஓடுவதையே கண்டிருந்த நாட்கள். சமூகத்தின் கண்ணீரை, வறுமையை, விரக்தியை, குதிரைப் பாய்ச்சலில்  கொட்டித் தீர்த்தது கலைஞரின் தமிழ்.

தான் பெற்ற குழந்தையை வறுமையால் கொல்லப்போன கதாநாயகி  நீதிமன்றத்தில் நிற்கிறாள். “குழந்தையைக் கொல்வது குற்றம். ஆக்கப்பட்ட பொருட்கள் அனைத்தும் அரசாங்கத்திற்குச் சொந்தம்” என்கிறார் நீதிபதி.

கதாநாயகி வெகுண்டெழுகிறாள்.

“சொந்தம். பட்டினிப் புழுக்களாய்த் துடித்தோம் நெளிந்தோம். அப்போதெல்லாம் சொந்தம் பாராட்டி ஆதரிக்கவில்லை அரசாங்கம். அநீதியிடையே வாழ வேண்டாம். இறப்புலகில் இன்பம் காண்போம் என்று சாவதற்குச் சென்றால், சட்டமென்ற கையை நீட்டிச் சொந்தம் என்ற சூழ்ச்சி மொழி பேசுகிறது அரசாங்கம். அதிசயமான அரசாங்கம்; அற்புதமான நீதி!”

சமூகம் என்ற நிறுவனத்தையும் அரசாங்கம் என்ற இயந்திரத்தையும் , தர்மம் என்ற விழுமியத்தையும் குத்திக் கிழித்து கூறுபோடுகிறது கலைஞரின் பேனா முள். ஆயிரம் மேடைகளில் பேசியும் அடைய முடியாத கருத்து திரைப்படத்தில் ஒரு பாத்திரத்துக்குள் புகுந்து பேசியபோது சாத்தியமாகிறது.

சமயம் என்ற நிறுவனத்தையும் அதன்மீதிருந்த நம்பிக்கை என்ற விழுமியத்தையும் கூட விட்டுவைக்கவில்லை கலைஞரின் எழுத்து.

பராசக்தி

“குழந்தையை எப்படியும் காப்பாற்ற வேண்டும்” என்கிறார் நீதிபதி.

”என் குழந்தை என்ன திருஞானசம்பந்தரா – பார்வதி வந்து பால் கொடுத்துக் காப்பாற்ற!” என்ற கதாநாயகியின் எதிர்வினை, அப்போது வளர்ந்து வந்த திமுகவின் காளையர்களுக்கெல்லாம் பகுத்தறிவுக் களத்தில் வாதாடும் கருவியைத் தந்தது.

புதைந்துபோன தமிழின் பெருமிதங்களையும் வீழ்த்தப்பட்ட விழுமியங்களையும் மீட்டெடுத்தல்  என்பது திராவிட இயக்கம் முன்வைத்த சிந்தனைகளுள் ஒன்று. மொழி வழியாக, இலக்கியத்தின் வழியாகத்தான் இனத்தின் பெருமைகளை இனங்காட்ட முடியும் என்பது அண்ணாவுக்கும், கலைஞருக்கும்  தெளிவாகப் புரிந்திருந்தது. கலைஞர் ‘மனோகரா’வில் எழுதுகிறார்: “புறநானூற்றை மறைக்க வந்த புழுதிக்காற்றே! புறமுதுகிட்டு ஓடும்.  கலிங்கத்துப்பரணியை மறைக்க வந்த காரிருளே! கால் பிடரியில் இடிபட ஓடும்!”

தமிழின் ஆதி இலக்கியங்களை கலைஞர் இப்படி அடையாளம் காட்டியபோது, பாமரனும் கூட அந்தத் தொல் இலக்கியங்களைத் தொட்டுப்பார்த்தான்.  தமிழ் திரைப்பட எழுத்தில் வேறெவரும் பெற்ற வெற்றியை விட  கலைஞரின் வெற்றிதான் கவனம் பெறுகிறது.

“ நற்றமிழ்  நாட்டிலே நீ

நடக்காத சாலை யில்லை

பெற்றதாய் நாட்டில் நீயும்

பேசாத ஊரு மில்லை

நெற்றியில் தமிழை வைத்தோர்

நெடுங்கணக் கதிகம்; ஆனால்

வெற்றியில் தமிழை வைத்த

வித்தகன் நீ மட்டும் தான்!“ என்று நானெழுதிய அறுச்சீர் விருத்தம் அலங்காரம் கடந்தும் உண்மையே பேசுகிறது.

அடித்தட்டு மக்களின் ஓர் இயக்கம் 17 ஆண்டுகளில் ஆட்சியைப்  பிடித்ததற்குக் கலையாயுதம்  ஒரு மிகப்பெரிய காரணம் என்று சொல்லலாம். கௌரவர்களின் பெரும்பான்மையை பாண்டவர்களின்  சிறுபான்மை வென்றது போலத்தான் ஆதிக்க சக்திகளை எதிர்த்துத் திராவிட இயக்கம் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தது. இதுவும் ஒரு குருஷேர்த்திரம்தான்.  இந்தப் போர்களத்தில்  கண்ணனாக இருந்து சொல்லெறிந்தவரும், காண்டீபனாக இருந்து வெல்லெறிந்தவரும் கலைஞர் என்று சொல்வதில் எனக்குத் தயக்கம் இல்லை.!

( குறிப்பு : இக்கட்டுரை தி இந்து குழுமம் நாளிதழ் வெளியிட்ட  ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’ புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டது.)

MUST READ