Homeசெய்திகள்கட்டுரைதேறாத விஜய்! தெறித்து ஓடிய சீமான்! பத்திரிகையாளர் விஜய்சங்கர் விளாசல்! 

தேறாத விஜய்! தெறித்து ஓடிய சீமான்! பத்திரிகையாளர் விஜய்சங்கர் விளாசல்! 

-

- Advertisement -

அதிமுக மத்தியில் ஆளும் பாஜகவையும், மாநில கட்சியான திமுகவையும் ஒன்று என ஒப்பிடுவது மிகவும் தவறானது என்று பத்திரிகையாளர் விஜய் சங்கர் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜயின் அரசியல் பிரவேசம் மற்றும் அவருடைய நிலைப்பாடுகள் குறித்து பத்திரிகையாளர் விஜய்சங்கர் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்துள்ள நேர்காணலில் கூறி இருப்பதாவது:- விஜய் தமிழக வெற்றிக்கழக மாநாட்டில் என்ன சொன்னார்? கொள்கை எதிரி பாஜக, அரசியல் எதிரி திமுக. கொள்கை எதிரி என்பவர், அரசியல் எதிரியாகவும் இருப்பார்கள் தானே?. உங்கள் கொள்கை எதிரியை யார் எதிர்க்கிறார்? திமுக தலைமையிலான அணி தானே எதிர்க்கிறது. அப்போது அந்த அரசியலை விட்டுவிட்டு நீங்கள் எங்கே செல்கிறீர்கள். உங்கள் அரசியல் எதிரிக்கு என்று ஒரு கொள்கை இருக்கிறதே? மும்மொழி கொள்கையை ஏற்காததால் தமிழ்நாட்டிற்கு ரூ.2,100 கோடி தரவில்லை. அப்போது மாநில சுயாட்சியை பறிக்கும் மத்திய அரசை ஏன் விஜய் எதிர்க்கவில்லை. தமிழ்நாட்டிற்கு எதிராக இருப்பது, உங்களது கொள்கை எதிரியின் அரசியல். பாசிசமா? பாயாசமா? என்பது மிகவும் மலிவானது.

திமுகவை பாசிச ஆட்சி என்று நீங்கள் சொல்லவே முடியாது. தலித்துகளுக்கு எதிராக அதிகளவில் குற்றங்கள் நடைபெறுவது உத்தரபிரதேசத்தில்தான். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடைபெறாத மாநிலமே இல்லை. தனிமனித குற்றங்கள் வேறு. கொள்கை சார்ந்த குற்றங்கள் வேறு. இன்று நாட்டில் வெறுப்பு பேச்சு அதிகம் பேசுபவர்கள் பாஜகவினர்தான். கடந்த தேர்தலில் பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைத்திருந்தால், மக்களவை தொகுதிகளை 800 ஆக மாற்றி அமைத்திருப்பார்கள். இதனால் தமிழகத்திற்கு மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை குறையும். உத்தர பிரதேசத்திற்கு தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். திமுக ஒரு மாநில கட்சி. பாஜக தேசிய கட்சி. மத்திய அளவில் அரசியல் அதிகாரம், பொருளாதார அதிகாரம், நிதி அதிகாரத்தை குவித்து வைத்திருக்கிற பாஜகவும் ஒன்று ஆகாது. விஜய் இரண்டு கட்சிகளையும் ஒன்றாக ஒப்பிடுவது மிகவும் தவறான பார்வையாகும். தமிழ்நாட்டில் பாஜகவை எதிர்க்காவிட்டால் உங்களுக்கு எந்தவித ஆதரவு கிடைக்காது. பெரியார் குறித்து இவ்வளவு மோசமாக சீமான் பேசிக் கொண்டிருக்கிறார். அவரது எல்லா வாதங்களுக்கும் மறுப்பு தெரிவிக்கப்பட்டுவிட்டது. அவர் மறுபடியும் வடிவேலு போல என்ன  கையை பிடித்து இழுத்தேன் என்கிறார். சரி விஜயுடன் விவாதிக்கலாம் என்றால், அவர் வெளியவே வர மாட்டேன்கிறார். செய்தியாளர் சந்திப்பு நடத்தினார் என்றால் இதெல்லாம் கேட்கலாம்.

The Governor of Nagaland, Shri R.N. Ravi calling on the Prime Minister, Shri Narendra Modi, in New Delhi on August 08, 2019.

அதிமுக கரைந்து கொண்டிருக்கும் நிலையில், அதற்கான மாற்று கட்சியாக தவெக இருக்க முடியாது. திராவிட கட்சி என்றால் நீங்கள் திராவிட கொள்கைகளுக்காக போராட வேண்டும். இன்று தமிழகத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி செய்யக்கூடாத எல்லா வேலைகளையும் செய்து கொண்டிருக்கிறார். சர்காரியா கமிஷன் உள்ளிட்ட எல்லா கமிஷன்களும் சொல்வது என்ன என்றால் ஆளுநர் அரசியல் முகவராக இருக்கக்கூடாது என்பது தான். ஆனால் ஆர்.என்.ரவி, தத்துவார்த்த ஏஜெண்டாக இருந்து, திராவிடம் இல்லை என்கிறார். தவெக ஒரு திராவிட கட்சியாக இருந்தால், விஜய் அவரிடம் சென்று மனு கொடுத்திருக்கக்கூடாது. விஜய் இன்று வரை ஆளுநரை எதிர்த்து ஒரு அறிக்கை வெளியிடவில்லையே. உங்கள் கொள்கை எதிரியின் ஏஜெண்ட் தான் ரவி. அவர் ராஜ்பவனில் உட்கார்ந்துகொண்டு ஒரு ராஜா பவனை நடத்திக்கொண்டிருக்கிறார். அதை கேள்வி கேட்காமல், நீங்கள் மனு கொடுத்தால். அதனால்தான் அய்யநாதன் வெளியே வந்துவிட்டார். மறுபடியும் நீங்கள் பிரசாந்த் கிஷோரை கொண்டு வருகிறார்கள். ஒரு கட்சி தொடங்கி 10, 15 ஆண்டுகளுக்கு பின்னர்தான் குழப்பம் வரும். நீங்கள் கட்சி தொடங்கிய 2 வருடத்தில் ஆடியோக்கள் வெளியாகிறது.

இந்தியா டுடே என்பது மத்திய அரசின் ஆதரவு பத்திரிகைதான். ஆனால் அவர்கள் வெளியிட்ட கருத்துக்கணிப்புகளிலே  திமுவின் வெற்றியை மறைக்க முடியவில்லை. பிரசாந்த் கிஷோர், தவெகவுக்கு 15 முதல் 20 சதவீத வாக்குகள் கிடைக்கும் என நேரேட்டிவ் செட் செய்கிறார். அவர் ஜன் சுராஜ் என்ற கட்சியை தொடங்கி பீகாரில் 4 தொகுதிகளில் போட்டியிட்டார். அதில் 3 தொகுதிகளில் டெபாசிட் இழந்துவிட்டார். அவருக்கே வியூகம் வகுக்க தெரியாதவர். மற்றவர்களுக்கு எப்படி வியூகம் வகுப்பார். இந்த சர்வேக்கு என்ன அளவு கோல்? இவர் எந்த சாம்பிளும் செலக்ட் செய்யாமல் அடித்துவிடுகிறார்.  அப்படி என்றால் பிரசாந்த் கிஷோர் விஜயிடம் வியாபாரம் செய்வதற்காக வந்துள்ளார்.

7 மாநில இடைத்தேர்தலில் பாஜகவுக்கு பின்னடைவு

இன்று பாஜக தேர்தல் ஆணையத்தை கைகளில் வைத்துக்கொண்டு இந்திய அரசியல் ஆட்டத்தையே மாற்றி கொண்டிருக்கும் பாஜகதான் எனது முதல் எதிரி. ஒரு அரசியல் கட்சியின் போராட்டம் என்பது, அரசியல் களத்தை காப்பதுதான். அதில் பத்திரிகையாளர்களுக்கும் பங்கு உள்ளது. தேர்தல் ஆணையரை தேர்வு செய்யும் குழுவை மாற்றி, உள்துறை அமைச்சரை கொண்டுவந்துவிட்டனர். அப்போ அவர்கள் நியாயமானவரை தேர்வு செய்வார்களா?. நாட்டின் அரசியல் அமைப்பை காப்பாற்ற வேண்டி கடமை உள்ளது. திமுக அரசு மீது பல்வேறு விவகாரங்களில் எனக்கு விமர்சனங்கள் உள்ளது. ஆனால் இன்று முதன்மையானது பாஜக, ஆர்எஸ்எஸ்தான். அதனால் பாஜகவுக்கு எதிர் நிலைப்பாட்டை எடுக்கிறேன், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ