Homeசெய்திகள்கட்டுரைத.வெ.க மாநில மாநாட்டில் தளபதிகளை மேடை ஏற்றும் விஜய்... மாநாட்டில் பங்கேற்க நடிகர் பிரகாஷ் ராஜூக்கு...

த.வெ.க மாநில மாநாட்டில் தளபதிகளை மேடை ஏற்றும் விஜய்… மாநாட்டில் பங்கேற்க நடிகர் பிரகாஷ் ராஜூக்கு அழைப்பு

-

விழுப்புரத்தில் வரும் 27ஆம் நடைபெறும் தமிழக வெற்றிக் கழக மாநில மாநாட்டில் கட்சியின் முக்கிய நிர்வாகிகளை மேடை ஏற்ற விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த மாநாட்டில் பங்கேற்க நடிகர் பிரகாஷ் ராஜுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

த.வெ.க கட்சி கொடியை அறிமுகப்படுத்திய விஜய்..... வாழ்த்து தெரிவித்த ரஜினிகாந்த்!

நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று விழுப்புரம் மாவட்டம் வி.சாலை பகுதியில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிற்காக பிரம்மாண்ட பந்தல் அமைக்கும் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. இந்த மாநாட்டிற்கு ஆட்களை அழைத்து வர ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் மாநாட்டிற்கு வரும் வழியில் பிரச்சினைகள் ஏற்பட்டால் அதனை எதிர்கொள்ள சட்டநிபுணர்கள் அடங்கிய குழுவை விஜய் நியமித்துள்ளார்.

மாணவர்கள் மத்தியில் உரையாற்றுகிறார் விஜய்

மாநாடு காலை 9 மணிக்கு தொடங்கி இரவு 9 மணி வரை நடைபெறுகிறது. எனினும் கட்சியினர் காலை 6 மணிக்கே மாநாட்டு திடலில் இருப்பார்கள். தென்மாவட்டங்களில் இருந்து 50 முதல் 60 வாகனங்களிலும், கொங்கு மண்டலத்தில் இருந்து 60க்கும் மேற்பட்ட வாகனங்களில் பொதுமக்களை அழைத்துவர திட்டமிட்டுள்ளனர். மாநாட்டின் முக்கிய நோக்கம் விஜய் பின்னால் எவ்வளவு பெரிய மக்கள் கூட்டம் உள்ளது என்பதை வெளிக்காட்டுவதே ஆகும். இதனால் தான் தமிழக வெற்றிக்கழக மாநாட்டிற்கான அழைப்பிதழை வீதி வீதியாக சென்று வழங்கி வருகின்றனர். 2005ல் விஜய்காந்த் தேமுதிகவை தொடங்கியபோது மிகப்பெரிய அளவில் மக்கள் கூட்டம் திரண்டதை போன்று, விஜய் கட்சியின் மாநாட்டிற்கு கூட்டம் வரும் என எதிர்பாரக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழக மாநாட்டு திடலுக்கு, அக்கட்சியின் தலைவர் விஜய் மாலை 4 மணிக்கு வர உள்ளார். முதலில் மாநாட்டு பந்தலுக்கு வருகை தந்து, பின்னர் கட்சி கொடியை ஏற்ற திட்டமிடப்பட்டிருந்தது. தற்போது காவல்துறையினர் அறிவுறுத்தலின் பேரில் இத்திட்டம் மாற்றப்பட்டுள்ளது. அதன்படி, மாநாட்டு திடலுக்கு ரோஜா நகர் வழியாக வரும் விஜய், மேடைக்கு செல்கிறார். பின்னர் மாநாட்டு திடலில் அமைக்கப்பட்டுள்ள 100 அடி கம்பத்தில் கட்சி கொடியை ஏற்றுகிறார்.

தமிழக வெற்றிக் கழக மாநாட்டு திடலில் மேற்கொள்ளப்பட்டு உள்ள ஏற்பாடுகளை கடலூர் மற்றும் விழுப்புரம் டிஎஸ்பிக்கள் சுமார் 3 மணி நேரம் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். மேலும், சுகாதாரம், மின்சாரம் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளும் ஆய்வு மேற்கொண்டு விழா ஏற்பாட்டாளர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கியுள்ளனர். அதில் மாநாட்டிற்கு வரும் தொண்டர்கள் பாதுகாப்பான முறையில் பயணம் மேற்கொள்ளவும், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தாத வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளனர்.

மாநாடு திடலில் கூட்டத்தை கட்டுப்படுத்தும் பணியில் த.வெ.க-வின் 10 ஆயிரம் தன்னார்வலர்கள் மற்றும் 5 ஆயிரத்து 500 காவலர்கள் ஈடுபட உள்ளனர். இதேபோல் வடக்கு மண்டல ஐ.ஜி தலைமையில், 2 டிஐஜிக்கள், 10 எஸ்.பி-க்கள், 20 ஏடிஎஸ்பிக்கள், 50 டிஎஸ்பிக்கள், 200 காவல் ஆய்வாளர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். தேவை ஏற்பட்டால் கூடுதல் போலிசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

பொங்கலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்!

த.வெ.க மாநில மாநாட்டிற்கு வரும் தொண்டர்களுக்கு கட்சியின் கொள்கைகள், மாநாட்டு தீர்மானங்கள் புத்தக வடிவிலும், பிடிஎப் வடிவிலும் வழங்கப்பட உள்ளன. மேலும் மாநாட்டிற்காக அமைக்கப்பட்டுள்ள கட்அவுட்களில் தமிழ்த்தாய், சேர, சோழ, பாண்டிய மன்னர்கள், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற வாசகம், மற்றும் வேலு நாச்சியார், கடலுர் அஞ்சலை அம்மாள் ஆகியோரது படங்களும் அமைக்கப்பட்டுள்ளன. மாநாட்டிற்கான ஏற்பாடுகளை பொதுச்செயலாளர் ஆனந்த், பொருளாளர் வெங்கட்ராமன் ஆகியோரிடம் கேட்டறிந்து வரும் விஜய், வீடியோ கான்பரன்ஸ் வாயிலாகவும் கண்காணித்து வருகிறார். மேலும், மாநாடு எப்போது நடைபெறும் என்ற எதிர்பார்ப்புடன் விஜய் உள்ளார்.

தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் 8 தலைவர்கள் பேச உள்ளனர். அவர்களில் தவெக தலைவர் விஜய், பொதுச்செயலாளர் ஆனந்த், பொருளாளர் வெங்கட்ராமன், தலைமை நிலைய செயலாளர் ராஜசேகர், கொள்கை இணைச் செயலாளர் தாஹிரா ஆகியோர் அடங்குவர். மேலும், மாநாட்டில் பங்கேற்க நடிகர் பிரகாஷ் ராஜுக்கும், விஜய் அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதேபோல், மாவட்ட  தலைவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் விதமாக அவர்களை மேடை ஏற்றவும் திட்டமிடப்பட்டுள்ளது. சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 18 மாதங்களே உள்ள நிலையில், மாவட்ட தலைவர்களை கட்சியினரிடையே அறிமுகம் செய்து வைக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

MUST READ