Homeசெய்திகள்கட்டுரைவிக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பு - அதிமுக எதிர்காலம் என்ன ஆகும்? - என்.கே.மூர்த்தி

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பு – அதிமுக எதிர்காலம் என்ன ஆகும்? – என்.கே.மூர்த்தி

-

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிப்பதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளதால் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதமாக மாறியுள்ளது.

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பு - அதிமுக எதிர்காலம் என்ன ஆகும்? - என்.கே.மூர்த்தி

நாடாளுமன்ற தேர்தல் ரிசல்டுக்கு பின்னர் உடனடியாக விக்கிரவாண்டி இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் திமுக, விவசாய தொழிலாளர் அணி செயலாளராக உள்ள அன்னியூர் சிவாவை வேட்பாளராக அறிவித்து, களத்தில் இறங்கி வாக்கு சேகரிக்க தொடங்கிவிட்டது. அதேபோன்று தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பா.ம.க மாநிலத் துணைத் தலைவர் சி.அன்புமணி என்பவரை போட்டியில் இறக்கியுள்ளனர். நாம் தமிழர் கட்சியும் ஹோமியோபதி மருத்துவர் அபிநயா என்பவரை வேட்பாளராக நிறுத்தியுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தின் முக்கிய எதிர்க்கட்சியான அதிமுக இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பு - அதிமுக எதிர்காலம் என்ன ஆகும்? - என்.கே.மூர்த்தி

அதிமுக இடைத் தேர்தலை புறக்கணிப்பது ஏன்? தொடர் தோல்வியில் சோர்ந்துபோயுள்ள தொண்டர்களுக்கு மீண்டும் ஒரு தோல்வியை கொடுத்து விடக் கூடாது என்கிற நோக்கமா? இந்த தேர்தலை புறக்கணிப்புதால் அதிமுகவில் என்ன நடக்கும் என்று பலக் கோணங்களில் விவாதிக்க வேண்டும்.

தமிழகத்தில் இதுவரை நடந்த இடைத் தேர்தல்களில் மிக முக்கியமானது 1973ல் நடந்த திண்டுக்கல் இடைத்தேர்தல். 1972ல் எம்.ஜி.ஆர் கட்சி தொடங்கிய சில மாதங்களில் திண்டுக்கல் நாடாளுமன்றத்திற்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தலில் அதிமுக சார்பில் கே.மாயத்தேவர் என்பவர் (இரட்டை இலை) சுயேட்சை சின்னத்தில் போட்டியிட்டு 2 லட்சத்து 60 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அந்த கட்சியின் முதல் வெற்றியை பதிவு செய்தார். அந்த இடைத்தேர்தல் வெற்றிதான் எம்.ஜி.ஆரின் ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்தது. அதிமுகவிற்கு ஆணி வேராக மாறியது.

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பு - அதிமுக எதிர்காலம் என்ன ஆகும்? - என்.கே.மூர்த்தி

அதன் பின்னர் சுமார் 30 இடைத்தேர்தல் நடந்துள்ளது. ஜெயலலிதா மறைந்தப் பின்னர் அதிமுக ஆட்சியில் சென்னை திரு.வி.க.நகர் இடைத்தேர்தலில் சுயேட்சியாக குக்கர் சின்னத்தில் போட்டியிட்ட டி.டி.வி.தினகரன் வெற்றிப் பெற்றார். அந்த தேர்தலில் திமுக வேட்பாளர் டெபாசிட் இழந்தார்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பு - அதிமுக எதிர்காலம் என்ன ஆகும்? - என்.கே.மூர்த்தி

தமிழகத்தில் இடைத்தேர்தல் என்றால் ஆளும் கட்சிதான் வெற்றிப்பெறும். எதிர்கட்சிகள் டெபாசிட் பெறுவதற்கு கடுமையாக போராட வேண்டும். அதை நினைத்துதான் இந்த இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடவில்லை என்று கூறப்படுகிறது.

ஜெயலலிதா காலத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் நடந்த இடைத்தேர்தலை அதிமுக புறக்கணித்தது. இளையான்குடி, கம்பம், தொண்டாமுத்தூர், பர்கூர், சிரி வைகுண்டம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத் தேர்தலையும் ஜெயலலிதா புறக்கணித்தார்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பு - அதிமுக எதிர்காலம் என்ன ஆகும்? - என்.கே.மூர்த்தி

ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை முக்கிய எதிர்கட்சி புறக்கணிப்பது நல்லதல்ல என்று ஊடகங்கள் அப்போது பெரும் விவாதம் செய்தது. அதன் பின்னர் 2010 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடந்த தர்மபுரி, பென்னாகரம் இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடும் என்று ஜெயலலிதா அறிவித்தார். அந்த தேர்தலில் திமுக 36,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பாமக வேட்பாளர் தமிழ் குமரன் இரண்டாம் இடம் பிடித்தார். அதிமுக டெபாசிட் இழந்தது.

இடைத்தேர்தலில் ஆளும் கட்சியை எதிர்த்து போட்டியிடுவது என்பது பெரும் சவாலானது தான். அதிலும் டெபாசிட் பெறுவது அதைவிட சவாலானது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

அதிமுக ஆளும் கட்சியாக இருந்தபோது நடந்த இடைத்தேர்தலில் திமுக டெபாசிட் இழந்ததும், திமுக ஆட்சியில் நடந்த இடைத்தேர்தலில் அதிமுக டெபாசிட் இழந்ததும் வரலாற்றில் பதிவாகி உள்ளது. இடைத்தேர்தலில் ஏற்படும் தோல்வியை வைத்து ஒரு கட்சியின் செல்வாக்கை குறைத்து மதிப்பிட முடியாது.

வீதிக்கு வந்த ஆர்.எஸ்.எஸ் – பாஜக சண்டை.. முடிவிற்கு வருமா? தொடருமா? (apcnewstamil.com)

கடந்த 2010ல் தர்மபுரி, பென்னாகரம் நடந்த இடைத்தேர்தலில் பாமக போட்டியிட்டது. அதன் பின்னர் நடந்த அனைத்து இடைத் தேர்தல்களிலும் அந்த கட்சி புறக்கணித்து வந்தது. அதுவும் இடைத்தேர்தல் நடத்துவது தேவையற்ற பொருளாதார செலவு என்றும் கால விரையம் என்றும் பாமக கூறி வந்தது.

பென்னாகரம், தர்மபுரி தொகுதிகளுக்கு அடுத்து பா.ம.க.விற்கு ஓரளவு செல்வாக்கு உள்ள விக்கிரவாண்டி தொகுதியில் பலத்தை நிரூபிக்க போட்டியிடுகிறது. அதுவும் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் போட்டியிட்டு வாக்கு சதவீதத்தை தக்கவைத்துக் கொள்ள களத்தில் இறங்கியுள்ளது.

விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுகவிற்கு தனி செல்வாக்கு இருக்கிறது. கடந்த 2021ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றிப் பெற்ற திமுக வேட்பாளர் புகழேந்தி 49% வாக்குகளை பெற்றிருந்தார். அதிமுக வேட்பாளர் முத்து தமிழ்செல்வன் 43% வாக்குகளை பெற்றிருந்தார். அதேபோன்று நாடாளுமன்ற தேர்தலிலும் அதிமுகவின் வாக்கு சதவீதம் கணிசமாக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் இடைத்தேர்தலை புறக்கணிப்பது சரியான அணுகுமுறையா என்பதுதான் முக்கியமான கேள்வி.

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பு - அதிமுக எதிர்காலம் என்ன ஆகும்? - என்.கே.மூர்த்தி

இந்த இடைத்தேர்தலை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தொடர்ந்து களத்தில் நின்று செய்தியாளர்களை சந்தித்து தமிழகத்தில் பாஜக இரண்டாவது பெரிய கட்சியாக காட்டிக் கொள்வார். அதிமுகவின் வாக்குகளை தன்பக்கம் இழுக்க முயற்சி செய்வார். அதிமுக தொண்டர்கள் வேறு வழியில்லாமல் திமுகவை ஆதரிக்கவும் வாய்ப்பு இருக்கிறது.

இடைத்தேர்தலில் அமோகமாக வெற்றிப் பெற்ற டி.டி.வி. தினகரன் அடுத்த தேர்தலில் காணாமல் போய்விட்டார். அதே தேர்தலில் டெபாசிட் இழந்த திமுக 2021ல் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் ஆட்சியை பிடித்துள்ளது. எனவே, ஒரு கட்சி இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை என்பதாலும், டெபாசிட் இழந்துவிட்டதாலும் அடுத்த தேர்தலில் அந்த கட்சி வெற்றி பெறாது என்று கூறுவது தவறான கருத்து.

மக்களவை தேர்தல் 2024 : முடிவுகள்… முறையாக அமையவில்லை (apcnewstamil.com)

தோல்வியை கண்டு துவண்டு விடாமல் தொடர்ந்து மக்களிடம் சென்று, மக்களின் நலனுக்காக குரல் கொடுக்கும் கட்சிக்கு தோல்வியே இல்லை. அதிமுக மக்களுக்காக நிற்குமா? போராடுமா? என்பதுதான் இப்பொழுது இருக்கும் கேள்வி.

MUST READ