Homeசெய்திகள்கட்டுரைமாநாட்டிற்கு நாங்க போகல... துணைவேந்தர்கள் பரபரப்பு! அசிங்கப்பட்ட ஆர்.என்.ரவி!

மாநாட்டிற்கு நாங்க போகல… துணைவேந்தர்கள் பரபரப்பு! அசிங்கப்பட்ட ஆர்.என்.ரவி!

-

- Advertisement -

துணைவேந்தர்கள் மாநாட்டை நடத்துவதன் மூலலம் தமிழ்நாட்டில் மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்தும் வேலையை ஆளுநர் இன்றைக்கு செய்து கொண்டிருக்கிறார் என்று திராவிட இயக்க சிந்தனையாளர் வல்லம் பஷீர் தெரிவித்துள்ளார்.

ஆளுநர் நடத்தும் துணை வேந்தர்கள் மாநாடு குறித்து வல்லம் பஷீர் பிரபல யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்துள்ள நேர்காணலில் கூறியிருப்பதாவது:- உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு ஆளுநரின் அதிகாரத்தை முழுமையாக வரையறுத்து விட்டது. அந்த தீர்ப்பை காலில் போட்டு மிதிக்கின்ற வேலையை இன்றைக்கு ஆளுநர் செய்கிறார். அந்த தீர்ப்பிலேயே துணை வேந்தர்கள் நியமனத்தில் ஆளுநர்கள் தலையிட முடியாது. மற்றொன்று பல்கலைக்கழக வேந்தராக ஆளுநர் தொடர்வதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது . இவற்றை எல்லாம் தாண்டி இனி துணை வேந்தர்களையோ அல்லது பல்கலைக்கழக விவகாரங்களில் நேரடியாகவோ தலையிடுவதையோ ஆளுநர் ரவி நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று அந்த தீர்ப்பு சொல்கிறது. இதெல்லாம் நடந்த பிறகும் துணை வேந்தர்கள் மாநாட்டை ஆளுநர் கூட்டுகிறார். குடியரசுத் துணை தலைவர் ஜெகதீப் தன்கரை துணைக்கு கூட்டி வருகிறார். தமிழ்நாட்டில் மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்தும் வேலையை ஆளுநர் இன்றைக்கு செய்து கொண்டிருக்கிறார். இதற்கு 100 விழுக்காடு ஆளுநருக்கு அதிகாரம் இல்லை. ஏனென்றால் ஆளுநர் பல்கலைக்கழக விவகாரங்களில் நேரடியாக தலையிட முடியாது என்கிற சூழல் வந்துவிட்டதோ, அப்போதே நீங்கள் துணை வேந்தர்களை அழைத்து கூட்டம் நடத்த முடியாது. உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முன்பே ஆளுநர் நேரடியாக துணை வேந்தர்களை அழைத்து கூட்டம் நடத்த முடியாது. அதில் பல படி நிலைகள் இருந்தன. ஆனால் ஆளுநர் அவற்றை எல்லாம் மீறி கூட்டங்களை நடத்தினார்.

துணை வேந்தர்களுக்கு சம்பளம் கொடுப்பது தமிழ்நாடு அரசுதான். அவர்களை தேர்வு செய்வதற்கான தேடுதல் குழுவில் தமிழ்நாடு அரசுக்குதான் பிரதான பங்கு உள்ளது. பல்கலைக்கழக நிர்வாகத்தில் உயர்கல்வித்துறை அமைச்சகம்தான் நேரடியாக தலையிட முடியும். அப்படி உள்ளபோது அதை பைபாஸ் செய்து, ஆளுநர் சில வேலைகளை செய்து கொண்டிருந்தார். அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் நேரடியாக ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்குள்ள குறைபாடுகளை கண்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்ய பதிவாளருக்கு உத்தரவுகளை பிறப்பித்தார். இந்த விவகாரத்தில் பல்வேறு கருத்துக்களை தெரிவித்த ஆளுநர் ஆர்.என்.ரவி, நேரடியாக பல்கலைக்கழத்தில் ஆய்வு மேற்கொள்ளாதது ஏன்? ஏனெனில் அவருக்கு உண்மையில் அதிகாரம் கிடையாது. அதனை தற்போது உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மதிக்க மாட்டேன். துணை வேந்தர்களை அழைப்பேன் என்றால் என்ன அர்த்தம்?

சமத்துவத்தை நோக்கி நமது சமூகம் நகர வேண்டும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை
 

சமீபத்தில்தான் துணை வேந்தர்களை அழைத்து முதலமைச்சர், உயர்கல்வித்துறை அமைச்சர் ஆகியோர் ஆலோசனை மேற்கொண்டனர். அதில் பகுத்தறிவுக்கு ஒவ்வாத விஷயங்களை கல்விக்கூடங்களுக்குள் கொண்டுவரக் கூடாது என்று உத்தரவை பிறப்பித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். தமிழ்நாட்டில் கல்வி வளாகங்கள் எப்படி கட்டமைக்கப்பட வேண்டும். அதன் நோக்கம் என்ன? மீண்டும் பிற்போக்குத்தனமான கருத்துக்கள் வந்துவிடக்கூடாது என்று முதலமைச்சர் கண்ணும் கருத்துமாக சிந்தித்து செயல்படுகிறார். அப்போது, முதலமைச்சரின் செயல்பாடுகளுக்கும், தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்கும் முட்டுக்கட்டை போடும் விதமாக தான் இந்த மாநாடு அமைந்துள்ளது. உயர்கல்வித்துறை அமைச்சகம் விரைவில் முடிவு எடுக்கப்படும் என்று சொல்லியுள்ளது. அதனால் அந்த மாநாடு ரத்து செய்யப்படும் என்று நினைக்கிறேன். துணை வேந்தர்களுக்கு மாநாட்டில் பங்கேற்க கூடாது என்று சுற்றறிக்கை அனுப்பினால் என்ன ஆகும்? இதில் பெரிய சிக்கல் என்ன என்றால் ஜெகதீப் தன்கருக்கு, தலைகுனிவு ஏற்படப் போகிறது. அத்தகைய வேலையைதான் ஆளுநர் செய்து கொண்டிருக்கிறார்.

govi chezhiyan
govi chezhiyan

கடந்த காலத்தில் அனைத்து துணை வேந்தர்களும் ஆளுநரை சென்று சந்திக்கவில்லை. சேலம் பெரியார் பல்லைக்கழக துணை வேந்தர் உள்ளிட்ட 3 பேர் தான் ஆளுநரை சந்தித்து பேசினார்கள். எனவே துணை வேந்தர்களுக்கே யாருக்கு அதிகாரம் உள்ளது என்பது புரிகிறது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பில் அடிப்படையில் துணை வேந்தர்கள் செயல்பட வேண்டும் என்று திமுக பொருளாளர் டிஆர். பாலு தெரிவித்துள்ளார். அப்படி, ஆளுநர் மாநாட்டில் பங்கேற்றால் துணை வேந்தர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

மத்தியில் எம்.பிக்களுக்கு தான் அதிகாரம் உள்ளது என்று  ஜெகதீப் தன்கர், சொல்வது ஏற்புடையதாக இருந்தால், மாநிலத்தில் எம்.எல்.ஏக்களுக்கு தானே அதிகாரம் உள்ளது. அப்போது நாங்கள் நீட்டிற்கு எதிராக தீர்மானத்தை நிறைவேற்றினோம். ஏன் நீட்டை கொண்டுவந்து எங்கள் தலையில் கட்டுகிறீர்கள். அனைத்து அதிகாரங்களும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்றம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தான் என்றால், அப்போது சட்டமன்றத்தில்  நாங்கள் நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றிவிட்டோம். எங்களுக்கு நீட் தேர்வில் விலக்கு தாருங்கள். அப்படி இல்லை நீதிமன்றத்திற்குதான் அந்த அதிகாரம் உள்ளது என்றால், எங்களுக்கு நீதிமன்ற அதிகாரம் இருக்கிற போது, உங்களுக்கு ஏன் நீதிமன்ற அதிகாரம் கிடையாது என்று விளக்கம் அளியுங்கள். குடியரசுத் துணை தலைவர் பாஜகவின் செய்தித் தொடர்பாளர் போன்று பேசுகிறார். அவர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, இதுபோன்று பேச வேண்டும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ