Homeசெய்திகள்கட்டுரைஇப்படியும் ஒரு பிரதமரா? சமூக வலைதளங்களில் விவாதம்

இப்படியும் ஒரு பிரதமரா? சமூக வலைதளங்களில் விவாதம்

-

இப்படியும் ஒரு பிரதமரா? சமூக வலைதளங்களில் விவாதம்

மக்களவை தேர்தல் தொடக்கத்தில் 400 தொகுதிகளுக்கு மேல் பாஜக கைப்பற்றும் என்று மோடி, அமித்ஷா பேசினார்கள். பின்னர் 370 தொகுதிகள் என்றார்கள். இரண்டாவது கட்டம், மூன்றாவது கட்டம் தேர்தலில் அவர்கள் நம்பிக்கையை இழந்து விட்டார்கள். அதன் பின்னர் அவர்கள் பேசிவரும் கருத்து பெரும் விவாதப்பொருளாக மாறிவருகிறது.

தேர்தல் ஆதாயத்திற்காக மதமோதல்களையும், பிரிவினையைத் தூண்டும் வகையிலும் முன்னுக்குப்பின் முரணாக பேசும் ஒரு பிரதமர் நமக்கு தேவையா என்று சமூக வலைதளங்களில் விவாதித்து வருகின்றனர்.

கடந்த ஏப்ரல் மாதம் ராஜஸ்தான் மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய பிரதமர் மோடி, இந்துக்களுடைய சொத்துக்களை கணக்கிட்டு அதை பிடுங்கி இஸ்லாமியர்களிடம் காங்கிரஸ் கொடுத்து விடும் என்றார். மேலும் உங்கள் கழுத்தில் இருக்கும் தாலியை பிடுங்கி இஸ்லாமியர்களிடம் கொடுத்து விடுவார்கள் என்று பேசி மத உணர்வை தூண்டும் விதத்தில் பேசினார்.

இந்துக்களுடைய சொத்துக்களை கணக்கிட்டு அதை பிடுங்கி இஸ்லாமியர்களிடம் காங்கிரஸ் கொடுத்து விடும்

தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு கொடுத்து வரும் இட ஒதுக்கீட்டை பறித்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க காங்கிரஸ் பாடுபடுகிறது என்றும் அதை நான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன் என்றும் பிரதமர் மோடி பேசினார்.

அதனை தொடர்ந்து “தென் இந்தியர்கள் உத்தரப்பிரதேச மக்களை திட்டுகிறார்கள். வட இந்திய மொழிகளை அவமதிக்கிறார்கள். அதை காங்கிரஸ் வேடிக்கை பார்க்கிறது.

உத்தரப்பிரதேச மக்களை அவமதிப்பவர்களை நீங்கள் மன்னிப்பீர்களா?” என்று ஒரு நாட்டின் பிரதமர் பிரிவினை வாதத்தை பேசி ஓட்டு கேட்கிறார்.

75 ஆண்டு கால சுதந்திர இந்தியா வரலாற்றில் இப்படி மாநிலங்களிடையே பிரிவினை பேசி அரசியல் ஆதாயம் தேடும் பிரதமரை இந்தியா பார்த்ததில்லை என்று எக்ஸ் வலைத்தளத்தில் விவாதித்து வருகின்றனர்.

அதனைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை உத்தரப்பிரதேசத்தில் பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் ராமர் கோயிலை புல்டோசர் வைத்து இடித்து விடுவார்கள் என்று பேசியுள்ளார். மேலும் குழந்தை ராமரை மீண்டும் கூடாரத்திற்கு அனுப்பி விடுவார்கள். தேர்தல் முடிந்தப் பின்னர் உங்களுடைய சொத்துகளை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுத்து விடுவார்கள் என்று ஆபத்தான கருத்தை பேசியுள்ளார்.

காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் ராமர் கோயிலை புல்டோசர் வைத்து இடித்து விடுவார்கள்

இதுகுறித்து பீகார் மாநிலத்தின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டுமக்கள் இந்த முறை மாற்றத்தை விரும்புகின்றனர். பாஜக தாங்கள் செய்த சாதனைகளைப் பற்றி பேசுவதில்லை. ஏன் என்றால் அவர்களிடம் எந்த சாதனையும் இல்லை. அதனால் பொய் சொல்லி, மக்களை பிரிக்கின்ற எதிர்மறை அரசியல் செய்கின்றனர் என்று கூறியுள்ளார்.

இப்படி தொடர்ந்து பொய்யான கருத்துகளையும், மதமோதல்களை தூண்டும் கருத்துகளையும் பேசிவரும் பிரதமரை தேர்தல் ஆணையம் கண்டுக் கொள்ளாதது ஏன் என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

MUST READ