அரசியலில், வணிகத்தில் ஈடுபாடு கொண்ட நீங்கள் தற்போது எந்த நிலையில் இருக்கிறீர்கள் என்பது முக்கியமில்லை, நீங்கள் அடைய விரும்பும் இலக்கை நிர்ணயம் செய்யுங்கள், அதுதான் முக்கியம் என்கிறார் முன்னாள் தலைமை செயலாளர் இறையன்பு ஐ.ஏ.எஸ்.
புதியதாக கட்சியை தொடங்கியதும் முதலமைச்சராகி விடவேண்டும். வணிகத்தில் இறங்கியதும் கோடியில் மூழ்க வேண்டும் என்று கனவு காண்கிறார்கள். இப்போது உள்ள இளைஞர்கள் எடுத்த உடனேயே எல்லாம் கிடைத்துவிட வேண்டும் என்று விரும்புகிறார்கள். அதற்கான தகுதியை வளர்த்துக் கொள்ளவும், உழைக்கவும், போராடவும் முன்வர மறுக்கிறார்கள்.
அரசியல் கட்சியை தொடங்கி ஒரே ஒரு மாநாடு மட்டும் நடத்திவிட்டு ஆட்சி அதிகாரத்தின் மீது ஆசைப் படுகிறார்கள். சினிமா மூலம் மக்களை சுரண்டி கொழுத்ததைவிட மக்களுக்காக செய்த நன்மைகள் என்ன?
அரசியல், வர்த்தகம், இவற்றில் எதில் வெற்றிப்பெற வேண்டும் என்று நினைத்தாலும் அதற்கு அடிப்படையாக இருக்க வேண்டிய பண்பு மக்களுக்கு நேர்மையாக இருக்க வேண்டும் என்கிற அப்பழுக்கற்ற குணநலன்கள் மிகவும் முக்கியமானது.
உங்களுடைய எண்ணத்தில், சிந்தனையில் தவறுகள் இருந்தால் அதுவே உங்களுடைய எதிராளிகளுக்கு சாதகமாக அமைந்துவிடும். காலம் கடந்தாகிலும் நீங்கள் வீழ்த்தப்படுவது உறுதி.
திடமான முடிவும், தீராத முயற்சியும், தீவிர உழைப்பும், தீர்க்கமான இலக்கும் இருப்பவர்கள் சொந்த சுக துக்கங்களையும் தாண்டி சிந்திக்கிறார்கள். அவர்கள் மட்டுமே வரலாற்றில் நிற்கிறார்கள்.
திப்பு சுல்தான் தனது இரு மகன்களையும் பிணை கைதிகளாக இங்கிலாந்து படைக்கு அனுப்பினார். குடும்பத்தினரின் உயிர் முக்கியமானதா? நாடு முக்கியமானதா என்றால் திப்பு சுல்தானுக்கு நாடுதான் முக்கியமானதாக இருந்தது. அதனால் தனது மகன்களை தியாகம் செய்தார். அந்தப் பண்பு தான் அவருடைய வீரர்களின் மன உறுதியை அதிகப்படுத்தியது.
இரண்டாம் உலகப்போரின் போது ரஷ்யா நாட்டின் தளபதி ஸ்டாலினுடைய மகன் ஜேக்கப் ஜெர்மனி படையிடம் பிடிப்பட்டார். ஆனால் ஸ்டாலின் கைதிகளைப் பரிமாற்றம் செய்துக்கொள்ள ஜெர்மன் நாடு விடுத்த அழைப்பை ஏற்க மறுத்துவிட்டார். ஸ்டாலினுடைய மகன் ஜேக்கப் சிறை கைதிகளின் முகாம் ஒன்றில் கடும் சித்தரவதையில் மரணமடைந்தார். இரண்டாம் உலகப் போரின் போது தியாகங்களை செய்து 1953ல் ஜெர்மனியை வீழ்த்தி வரலாற்றில் இடம் பிடித்தவர் ரஷ்யா புரட்சியாளர் ஸ்டாலின்.
அதே 1953ல் பிறந்தவர் தான் தமிழ்நாடு தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
இந்திரா காந்தி 1971ல் மிசா சட்டம் கொண்டு வந்தபோது அதை கடுமையாக எதிர்த்து போராடியவர் அப்போதைய முதல்வர் கலைஞர் கருணாநிதி. மிசாவில் திமுகவின் முன்னணி தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள் என்று ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். அதற்கும் அவர் பயப்படவில்லை. அவருடைய மகன் ஸ்டாலினை கைது செய்தார்கள், சிறையில் சித்திரவதை செய்தார்கள், எதற்கும் கலைஞர் கருணாநிதி அஞ்சவில்லை. மிசாவை துணிச்சலாக எதிர்த்தார். கலைஞரை பணிய வைக்க ஆட்சியை கலைத்தார் இந்திரா காந்தி. அப்போதும் துளியும் கலங்கவில்லை.
அடக்குமுறைக்கு எதிராக தொடர்ந்து போராடிய அந்த பண்பு தான் அவருடைய தொண்டர்களுக்கு உற்சாகத்தை கொடுத்தது. அந்த தியாகம் தான் 11 முறை தி.மு.க.வின் தலைவராக, 5 முறை தமிழ்நாடு முதல்வராக கலைஞர் கருணாநிதி இருந்தார். தமிழ்நாட்டில் இருந்து இந்திய அரசியலை தீர்மானித்தார். அவர் மறைந்தப் பின்னரும் திமுகவை மையப்படுத்தி தான் தமிழ்நாடு அரசியல் இயங்குகிறது. அந்த அளவிற்கு திமுகவில் தலைவர் முதல் கடைசி தொண்டன் வரை கடுமையாக உழைக்கிறார்கள்.
வாழ்க்கையில் இலக்கு தான் முக்கியம். தனிமனிதனாக இருக்கட்டும், இயக்கமாக இருக்கட்டும் இலக்கு மிகவும் முக்கியம். அந்த இலக்கை நெருங்குவதற்கு முன்பு நெருக்கடி, தடைகள் இருக்கத்தான் செய்யும். அந்த நெருக்கடிகளையும், தடைகளையும் எதிர்த்து போராட வேண்டும். அந்த போராட்ட பாதைதான் வெற்றிக்கான வழி.
வாழ்க்கையில் எதெல்லாம் நெருக்கடியும் வலியையும் கொடுக்கிறதோ, அதுதான் வெற்றிப் பெறுவதற்கான பாதை அமைத்துக் கொடுக்கிறது என்பது பெஞசமின் ஃபிராங்களின் தத்துவம். அதனால் இலக்கை நிர்ணயுங்கள், நெருக்கடியான காலத்தில் அமைதியாக போராடுங்கள், வெற்றி நிச்சயம்!
ரிலீஸ் தேதியை லாக் செய்த பிரித்விராஜ் – மோகன்லாலின் ‘எம்புரான்’ படக்குழு!