Homeசெய்திகள்கட்டுரைபிஸ்கட் கொடுத்து குழந்தைகளிடம் பாஜக செய்த காரியம்... லீக் ஆன கரு.நாகராஜன் ஆடியோ! விளாசும் செந்தில்வேல்!

பிஸ்கட் கொடுத்து குழந்தைகளிடம் பாஜக செய்த காரியம்… லீக் ஆன கரு.நாகராஜன் ஆடியோ! விளாசும் செந்தில்வேல்!

-

- Advertisement -

மும்மொழி கொள்கை விவகாரத்தில் பாஜக அரசியல் செய்ய முயற்சிப்பதாகவும், அவர்கள் மூன்றாவது மொழியாக இந்தியை தான் திணிக்க உள்ளனர் என்றும்  பத்திரிகையாளர் செந்தில்வேல் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்தி மொழிக்கு ஆதரவாக பாஜகவினர் நடத்து கையெழுத்து இயக்கத்தின் உள்நோக்கம் குறித்தும், தமிழர்கள் குறித்த ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் கருத்து குறித்தும் பத்திரிகையாளர் செந்தில்வேல் அளித்துள்ள நேர்காணலில் கூறியிருப்பதாவது:- கிராமங்களில் பிள்ளை பிடிப்பவர்கள் சாக்லேட், பிஸ்கட் போன்ற திண்பண்டங்களை கொடுத்து குழந்தைகளை கடத்திச்செல்வார்கள். அதுபோன்று பாஜகவினர் ஒரு வேளையை பார்த்துள்ளனர். பாஜக சார்பில் இந்தி மொழி வேண்டும் என்று தமிழ்நாடு முழுவதும் ஒரு கோடி கையெழுத்து பெறும் இயக்கம் நடத்துகின்றனர். அப்படி அவர்கள் யாரிடம் கையெழுத்து பெறுகிறார்கள் என்று பார்த்தால் பள்ளி முடிந்துவரும் குழந்தைகளிடம் கையெழுத்து பெறுகின்றனர். பாஜகவினரை பார்த்ததும் அந்த குழந்தைகள் ஓட்டம் பிடித்த நிலையில், அவர்களை பிடித்து பிஸ்கட் கொடுத்து கையெழுத்து பெறுகின்றனர். குழந்தைகளை ஏமாற்றி இப்படி கையெழுத்து பெறுகிறார்களே இது தவறில்லையா?

மும்மொழி என்றால் இந்தி திணிப்பு கிடையாது. மூன்றாவது மொழியாக எந்த மொழியை வேண்டுமானாலும் படிக்கலாம் என பாஜகவினர் சொல்லி வருகின்றனர். ஆனால் அந்த மூன்றாவது மொழி என்பது இந்தி தான் என்று தமிழக பாஜக மூத்த தலைவர் கருநாகராஜன், வழக்கறிஞர் ஒருவரிடம் பேசிய ஆடியோ மூலம் உறுதியாகி உள்ளது. பாஜக ஆதரவு வழக்கறிஞர் ஒருவர், தமிழகத்தில் மும்மொழி கொள்கையை அமல்படுத்த உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை மாநில அரசின் கொள்கை முடிவு சார்ந்த விவகாரங்களில் தலையிட முடியாடி என்று கூறி உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்ய அதிகளவில் வாய்ப்பு உள்ளது. இந்நிலையில் தான் கரு.நாகராஜன், அந்த வழக்கறிஞரிடம் மனுவை வாபஸ் பெற கோரி தொலைபேசியில் பேசிய ஆடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

அந்த ஆடியோவில், அண்ணாமலையிடம் கேட்காமல் வழக்கு தொடர்ந்தது ஏன்? என்றும், இந்த மனுவை உச்சநீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தால் பாஜகவுக்கு தான் பின்னடைவு என்றும் நாகராஜன் கூறுகிறார். அப்போது, அந்த வழக்கறிஞர் தான் பணி தொடர்பாக டெல்லிக்கு சென்றபோது டெல்லியில் இந்தி தெரியாமல சிரமப்பட்டதாக சொல்கிறார். அதற்கு பதில் அளிக்கும் கரு. நாகராஜன், தமிழ்நாட்டில் 60 லட்சம் பேர் இந்தி படித்துக் கொண்டிருக்கின்றனர். உங்களுக்கு வேண்டுமென்றால் இந்தி பிரச்சார சபாவில் சென்று படிக்கலாமே என்று திமுக அரசே சொல்கிறது என்று கரு.நாகராஜன் தெரிவிக்கிறார். இதன் மூலம் மும்மொழி கொள்கை விவகாரத்தில் பாஜக அரசியல் செய்ய முயற்சிப்பதும், மூன்றாவது மொழியாக இந்தியை தான் அவர்கள் திணிக்க உள்ளதும் வெட்ட வெளிச்சமாகியுள்ளது. கரு.நாகராஜன் சொல்லியும் அந்த வழக்கறிஞர் மனுவை திரும்ப பெற மாட்டேன் என்று சொல்கிறார். அப்போது திட்டமிட்டு இந்தியை திணிப்பதற்கான வேலையை பாஜகவினர் செய்து கொண்டிருக்கிறார்கள்.

karu nagarajan

இந்தி படிப்பதால் என்ன தவறு உள்ளது என்று கேள்வி எழுப்புகிறார்கள். நாங்கள் திருப்பி திருப்பி சொல்வது என்னவென்றால் இந்தியை படிப்பதால், பல மாநிலங்களில் அந்த மாநிலங்களுடைய மொழியே அழிந்துபோய் விட்டது. அந்த நிலை தமிழ்நாட்டிற்கு வந்துவிடக் கூடாது என்றுதான் துடிக்கிறோம். இந்தி படிக்காததால் தமிழன் ஏதாவது தோற்றுவிட்டனாரா? இந்தி தெரியாத மயில்சாமி அண்ணாதுரை, சந்திரயான் 2 விண்கலத்தின் திட்ட இயக்குநர், சந்திரயான் மூன்றின் திட்ட இயக்குநராக இந்தி தெரியாத வீரமுத்துவேல் இருந்தார். ஆதித்தயாவிற்கு நிகர்ஷாஜி. இவர்கள் அனைவரும் தமிழ்நாட்டில் தமிழ் வழியில் கல்வி பயின்றவர்கள் ஆவர். அப்துல் கலாம், இஸ்ரோ சிவன் உள்ளிட்ட எத்தனையோ விஞ்ஞானிகளை இந்தியாவுக்கு கொடுத்திருக்கிறோம். நீங்கள் உத்தர பிரதேசத்தில் இருந்து எத்தனை பேரை கொடுத்துள்ளனர். யாரை கொடுத்துள்ளனர்? தமிழ்நாடு சட்டப்பேரவையில் வரலாற்று சிறப்பு மிக்க சட்டங்கள் எல்லாம் இயற்றுகிறார்கள். ஆனால் இந்தி மொழி கற்பிக்கப்படும் உத்தர பிரதேச சட்டப்பேரவை வளாகத்திற்குள் எம்.எல்.ஏ-க்கள் பான் மசாலா உபயோகிக்க தடை விதித்து, சபாநாயகர் உத்தரவிடுகிறார். யாருக்கு நீங்கள் பாடம் நடத்துகிறீர்கள்?

ஆந்திரா முதல்வராக சந்திரபாபு நாயுடு விரைவில் பதவியேற்கிறார்

இந்தி படிக்காததால் தமிழர்கள் ஒன்றும் குறைந்துவிடவில்லை என ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சொல்கிறார். தமிழர்கள் முன்னேறி கொண்டே இருக்கிறார்கள். அமெரிக்காவில், ஆஸ்திரேலியாவில், பிரிட்டனில் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். ஏனென்றால் அவரகள் ஆங்கில அறிவு பெற்றவர்களாக உள்ளனர் என்று சந்திரபாபு நாயுடு சொல்கிறார். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர் ஆகியோர் இரு மொழி கொள்கையில் உறுதியாக இருந்த காரணத்தால் தமிழ்நாடு இன்றைக்கு வளர்ந்திருக்கிறது. இதுதான் எதார்த்தமான உண்மை. இதை சீர்குலைக்க பாஜக சதித்திட்டம் தீட்டுகிறது. அதற்காக பள்ளி குழந்தைகளிடம் பிஸ்கெட்டை கொடுத்து, கையெழுத்து வாங்கும் அளவிற்கு பாஜகவினர் கேவலமாக போய் விட்டனர். இவர்களை இனியும் வளரவிட்டால் தமிழ்நாட்டிற்கு பேராபத்து என்பதை மனதில் கொள்வோம். எந்த எல்லைக்கு சென்றாகினும் நாம் இந்தி திணிப்பை எதிர்ப்போம், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ