Homeசெய்திகள்கட்டுரைஇத்தனை ஆண்டுகளில் ஈழத்திற்காக சீமான் செய்தது என்ன? - சுப.வீரபாண்டியன் கேள்வி!

இத்தனை ஆண்டுகளில் ஈழத்திற்காக சீமான் செய்தது என்ன? – சுப.வீரபாண்டியன் கேள்வி!

-

- Advertisement -
kadalkanni

43 வயது வரை ஈழத்திற்காக எதுவும் பேசாமல் இருந்தவர் சீமான் என்று திராவிட இயக்க தமிழர் பேரவை தலைவர் தலைவர் சுப.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். மேலும் இதனை ஆண்டுகளாக அவர் ஈழத்துக்கு என்ன செய்துள்ளார் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என்று பேசியவர்கள் தான் பிரபாகரனின் வாரிசுகளா? - சுப. வீரப்பாண்டியன்

தந்தை பெரியாரை இழிவுபடுத்தும் சீமானை கண்டித்து திராவிட இயக்க தமிழர் பேரவை சார்பில் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தேரடி திடலில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பேரவையின் தலைவர் சுப.வீரபாண்டியன் கலந்து கொண்டு சீமானுக்கு எதிராக தனது கண்டனங்களை தெரிவித்தார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:- சீமான் இத்தனை பேருக்கு மத்தியில் கேள்வி பொருளாக ஆகி உள்ளது. எனக்கு வருத்தமாகதான் இருக்கிறது. வாழ்க்கையில் பணமும் பதவியும் உங்களுக்கு பின்னால் பேசாது. கலைஞர், பெரியார், அண்ணா போன்றவர்கள் பதவியில் இல்லாதபோதும் அவர்களை பற்றி இன்றும் நாடு பேசிக்கொண்டு தான் இருக்கிறது. சீமான் தாமாக இயங்கவில்லை இயக்கப்படுகிறார். அவர் பணத்திற்கும் பதவிக்கும் ஆசைப்படுகிறார் என்பதை தெரிந்துகொண்டு, பிரபாகரனை காட்டிக்கொடுத்தால் பணமும் பதவியும் கொடுக்க தயார் என்றால் காட்டிக் கொடுக்க தயாராக இருக்கும் மனிதன் சீமான். நாங்கள் கொள்கைக்காக எதையும் இழக்க தயாராக இருக்கிறோம். சீமானுக்கு உள்ளே பலவீனமும், கையாலாகாத தன்மையும் ஏற்பட்டுள்ளது. விஜய் வந்த பிறகு தன்னிடம் இருக்கிற வாக்கு குறைகிறது என்பதை அவரால் புரிந்துகொள்ள முடிகிறது. அவரிடம் 8 சதவீதம் இருக்கின்ற வாக்கு சதவீதம் 5% வந்துவிட்டது என்பது தான் உளவுத்துறை அளித்த உண்மை.

சீமான் அவர்களே நீங்கள் எப்பாடு பட்டாலும் ஒரு சதவீத வாக்கிற்கு மேல் பெற முடியாது, உங்கள் காலம் முடிந்துவிட்டது. உங்களை யாரோ பின்னால் இருந்து செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். நினைவு நாளை போற்றுவோமே தவிர பிறந்த நாளை நாங்கள் கொண்டாட மாட்டோம் என்று சீமான் கூறுகிறார். ஆனால் பிறந்த நாள் கொண்டாடினார்கள். அமித்ஷா அம்பேத்கரைப் பற்றி தவறாக பேசிய பிறகு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டித்தார். அம்பேத்கரை அவமதிப்பு பற்றி போய் விடாமல் இருக்க பெரியாரைப் பற்றி பேசினால் விடை தருவார்கள் என்று நம்பினார்கள். அதனை சீமான் தன் பேச்சிலே சொல்லி இருக்கிறார். சீமான் வெளியிட்ட 64 படங்களில், பாரதியார் படம் இல்லை, பாரதியாரை தொட்டுக் கொண்டு பெரியாரை இழிவுப்படுத்தியது தான் அந்த கூட்டத்தின் நோக்கம்.

பாரதி எப்படி உங்களின் தமிழ் தேசிய கவிஞர் ஆவார். பாரதியார் தமிழை பற்றி பாராட்டிய பாடல்கள் வெறும் 6 தான். 21 பாடல்கள் இந்து மதத்தில் இடம் பெற்றுள்ளன. தமிழ் பற்றியும், சமஸ்கிருதம் பற்றியும் பாரதியார் என்ன சொல்லி இருக்கிறார். பாரதி கம்பரை பற்றி தான் கூறுவார். தமிழ்நாட்டில் தமிழ் சிறக்கட்டும், பாரத முழுவதும் சமஸ்கிருதம் ஆட்சி நிலவட்டும் என்று எழுதி இருக்கிறார். உங்கள் தமிழ் தேசத்திற்கு இது உடன்பாடா என்று சொல்லுங்கள்?. இந்த பாரதிய தான் நீங்கள் முன்னிறுத்தீர்களா என்பது கேள்வி. ஈழத் தமிழர்களே இப்போது ஆவது நீங்கள் பேசப் போகிறீர்களா இல்லையா?. சீமான் பிரபாகரனை அதிகமாக இழிவுப்படுத்தி பேசி வருகிறார். பிரபாகரனை தூக்கில் போட வேண்டும் என்று சொன்னவர் ஜெயலலிதா. சீமான் வீட்டில் இருக்கின்ற அவர் மனைவி தமிழ் பேச மாட்டார். உங்கள் வீட்டில் என்ன நடக்கிறது. வாய்மொழியும் தாய்மொழியும் தமிழ்தானா என்ற கேட்கிறேன். நீங்கள் பேசும் மொழி பற்றி தவறு கூறவில்லை. 1983 இருந்து தற்போது வரை தமிழ்நாட்டில் ஈழத்துக்கு கூட்டங்கள் நடைபெற்றன. நீங்கள் இங்கு வருவதாக இருந்தால் தாராளமாக வரலாம் உங்கள் மீது ஒரு துரும்பு கூட இங்கு படாது. இது ஒரு நாகரிகமான மேடை. இத்தனை ஆண்டுகளாக ஈழத்துக்கு நீங்கள் செய்த செயல் என்ன?, எங்காவது இதைப் பற்றி பேசி இருக்கிறீர்களா?.

ஐயா நெடுமாறனை விடவா நீங்கள் ஈழத்துக்கு வேலை செய்து விட்டீர்கள். பிரபாகரன் அவரிடம் பேசியதை நான் அறிவேன். ஆனால் சீமான் எங்கு இருந்தார். 23 ஆண்டுகளில் சீமான் செய்த செயல் என்ன சொல்லுங்கள் நாங்கள் கூட்டத்தை கலைத்து விடுகிறோம். எதுவும் செய்யாமல் பிரபாகரன் பிள்ளை என்று கூறிக் கொள்கிறீர்கள். அங்கு போனேன் ஆமை கறி சாப்பிட்டேன் என்று கூறுகிறீர்கள். சமையல்காரனை தவிர்த்து பிரபாகரனிடம் கேட்க வேறு எதுவும் கிடைக்கவில்லையா. பிச்சை எடுத்து வாழ்கிறேன் என்று கூறுகிறீர்கள். ஆனால் அவ்வளவு பெரிய மாளிகையில் இருக்கிறீர்கள். வாடகையில் தான் இருக்கிறேன் என்று கூறுகிறீர்கள். ஒரு மனிதனுக்கு கொஞ்சமாவது கூச்சம் இருக்க வேண்டும். நானும் அண்ணனும் துப்பாக்கிச்சூடு நடத்தினோம் என்று கூறுகிறாயே இதைவிட ஒரு கூச்சம் இருக்க வேண்டுமா? ஒரு மனிதனுக்கு.

ரஜினிகாந்தை பார்த்து சுடுகாட்டில் வெற்றிடம் இருக்கிறது. அங்கே போய் படுத்துக் கொள்ளுங்கள் என்று கூறுகிறீர்கள். எவ்வளவு வன்மம் இருக்க வேண்டும். சீமான் மீது கூட நாங்கள் இவ்வளவு வன்மம் காட்ட மாட்டோம். சீமான் திருந்த வேண்டும் அல்லது திருத்துவோம். 1973ல் இறந்த பெரியாரை நான் வண்டியில் தள்ளிக்கொண்டு வந்தேன் என பொய் கூறுகிறார். சீமான் திமுகவை தவிர அனைத்து கட்சிகளுடன் ஒன்றுகிறார். இடையினம் வல்லினம் தெரியாத ஒரு ஆள் முதலமைச்சராக வர வேண்டும் என எண்ணுகிறார். இரவு நேரங்களில் இரண்டு மூன்று மணிக்கு எழுந்து படிப்பேன் என கூறுகிறார். அதனால்தான் புத்தி பேதலித்து இருக்கிறார். செந்தில் பாலாஜியை பார்த்து வஉசி-யா என்று சீமான் கேட்டார். அப்போது சசிகலாவை சென்று பார்த்தீர்களே அவர்கள் யார், அவர் எங்கு சென்று வந்தார்?

43 வயது வரை ஈழத்திற்காக எதுவும் பேசாமல், பிரபாகரனை பற்றி தனக்கும் அவருக்கும் சாப்பாட்டில் பந்தயம் என்று சொல்கிறீர்கள். இது பிரபாகரனை இழிவுபடுத்தும் செயல், ஈழ மக்களை, இலங்கை மக்களை காட்டிக் கொடுத்த சிங்களவன் சீமான் என்று எழுதுங்கள். 26 ஆண்டுகள் ஈழத்திற்காக பற்றி எரிந்த போராட்டத்தில் ஏதாவது கலந்து கொண்டீர்களா?. தனியாக தமிழ் தேசிய வேண்டுமா அல்லது மாநில சுயாட்சி வேண்டுமா. அப்படி என்றால் இங்கு வந்துவிடு. புத்தக கண்காட்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடாமல், புதுவை வாழ்த்துப் பாடப்பட்டுள்ளது. இது தனியார் ஏற்பாடுதான் என்று பப்பாசி கூறி விட்டார்கள். பிறகு ஏன் அவரை அழைத்து வந்தீர்கள். இங்கு பேசிய பேச்சுக்கு நாங்கள் தான் பொறுப்பு, அதுபோல அங்கு நடந்த பேச்சுக்கு அவர்கள் தான் பொறுப்பு ஏற்க வேண்டும். அதுதான் நாணயம், இல்லையென்றால் பப்பாசி, டிஸ்கவரி புக் பேலஸ் பதிப்பகத்தின் வேடியப்பனை புத்தக கண்காட்சியில் இருந்து வெளியேற்ற வேண்டும், இவ்வாறு அவர் பேசினார்.

MUST READ