Homeசெய்திகள்கட்டுரைஆம்ஸ்ட்ராங் கொலையில் பின்னணி என்ன? - என்.கே.மூர்த்தி

ஆம்ஸ்ட்ராங் கொலையில் பின்னணி என்ன? – என்.கே.மூர்த்தி

-

ஆம்ஸ்ட்ராங் கொலையில் பின்னணி என்ன? - என்.கே.மூர்த்தி

பகுஜான் சமாஜ்வாடி கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5 தேதி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பூர் வேணுகோபால் சாலையில் புதியதாக வீடுகட்ட தொடங்கியிருக்கும் ஆம்ஸ்ட்ராங், அந்த கட்டிடப் பணியை வழக்கமாக பார்வையிடும் போது 10க்கும் மேற்பட்ட கும்பல் திட்டமிட்டு படுகொலை செய்துள்ளது. அதில் புன்னை பாலா தலைமையில் அருள், தேவராஜ், திருமலை, சந்தோஷ், ராமு, மணிவண்ணன் மற்றும் திருவேங்கடம் ஆகிய 8 பேர் 5 ஆம் தேதி இரவு காவல்துறையில் சரணடைந்து உள்ளனர்.

சரணடைந்த எட்டு குற்றவாளிகளில் மிக முக்கியமான ஒருவர் புன்னை பாலா. இவர் பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி. அவனிடம் நடத்திய விசாரணையில் ஆம்ஸ்ட்ராங் கொலையில் உள்ள மர்ம முடிச்சுகள் வெளிவரத் தொடங்கியுள்ளது.

ஆற்காடு சுரேஷின் கொலைக்கு பழிக்கு பழி

ஆற்காடு சுரேஷ் வடசென்னை பகுதியில் பெரும் செல்வாக்குள்ள கூலிப்படை தலைவராக வலம் வந்தார். ஆள்களை கடத்தி பணம் பறிப்பது, கொலை மிரட்டல் விடுத்து பணம் பறிப்பது, கொலை செய்யும் கூலிப்படை என்று அவர் பின்னால் பெரும் நெட்வொர்க் இயங்கி வந்தது. மேலும் ஆற்காடு சுரேஷ் மீது சென்னை பேசின் பிரிட்ஜ், புளியந்தோப்பு, சைதாப்பேட்டை, பூவிருந்தவல்லி, வேலூர், காஞ்சிபுரம் ஆகிய காவல் நிலையங்களில் 30 க்கும் மேற்பட்ட வழக்குகள் இருந்தது. தமிழகத்தை தாண்டி ஆந்திராவிலும் வழக்குகள் இருந்தன. 15 முறைக்கு மேல் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்றவர்.

‘கேம் சேஞ்சர்’ படப்பிடிப்பு நிறைவு….. விரைவில் வெளியாகும் ரிலீஸ் தேதி!

இந்த நிலையில் அதே காலக்கட்டத்தில் ஆம்ஸ்ட்ராங் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டார். வழக்கறிஞரான ஆம்ஸ்ட்ராங், வடசென்னை பகுதியில் உள்ள ஏழை, எளிய மக்களுக்கு உதவி செய்வதும், சில இளைஞர்களை வக்கீல் படிப்பிற்கு வழிகாட்டுவது என்று அசூர வளர்ச்சி அடைந்து வந்தார். இந்த வளர்ச்சி ஆற்காடு சுரேஷின் தொழிலுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது. அதுவே காலப்போக்கில் இருவருக்கும் இடையே மோதலாக மாறியது.

கடந்த 2010 ஆம் ஆண்டு ஆம்ஸ்ட்ராங்கிற்கு நெருக்கமான சின்னா என்கிற சென்ன கேசவலு, அவருடைய வழக்கறிஞர் பகத்சிங் ஆகிய இருவரையும் பூந்தமல்லி நீதிமன்ற வாசலில் கொலை செய்து ஆம்ஸ்ட்ராங்கிற்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கிறார். அதன் பின்னர் ஆம்ஸ்ட்ராங் – ஆற்காடு சுரேஷ் இருவருக்கும் இடையே பகை மேலும் வலு பெறுகிறது. அதன் பின்னர் ஒரு கட்டத்தில் ஆம்ஸ்ட்ராங்கிடம் உயிர் பிச்சை கேட்டு சென்னையை விட்டு வெளியேறி ஆந்திராவில் பதுங்கி இருந்தபடி தனது ஆள்களை வைத்து கட்டப்பஞ்சாயத்து தொழில் செய்து வந்தார்.

அப்போது 2015ம் ஆண்டு ஆம்ஸ்ட்ராங்கிற்கு நெருக்கமானவரும் பகுஜன் சமாஜ் கட்சியின் வடசென்னை மாவட்ட தலைவருமான தென்னரசுவை திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தாமரைப் பாக்கத்தில் அவருடைய மனைவி மைதிலியின் கண் எதிரே ஆற்காடு சுரேஷ் மற்றும் அவருடைய கூட்டாளிகளுடன் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் ஆம்ஸ்ட்ராங்கிற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் 2023 ஆகஸ்ட் மாதம் புளியந்தோப்பில் பதிவான ஒரு வழக்கு தொடர்பாக ஆற்காடு சுரேஷ் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜரானார். பின்னர் அவருடைய நண்பர் மோகன், வழக்கறிஞர் அமல்ராஜ் ஆகியோருடன் பட்டினப்பாக்கம் லூப் சாலையில் காத்துக் கொண்டிருந்த தனது நண்பர் மாதுவை பார்ப்பதற்கு காரில் சென்றார். அங்கே ஒரு கடையில் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது காரில் வந்த மர்ம கும்பல் ஆற்காடு சுரேஷ், அவருடைய நண்பர் மாதுவை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றனர். படுகாயம் அடைந்த இருவரையும் மருத்துவமனையில் சேர்த்தனர். அதில் ஆற்காடு சுரேஷ் உயிரிழந்தார். அவருடைய நண்பர் மாது உயிர் பிழைத்தார். அதன் பின்னர் மாதுவும் ஜனவரி மாதம் 13 ஆம் தேதி ஜாம் பஜாரில் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் ஆற்காடு சுரேஷின் தம்பி புன்னை பாலா உள்ளிட்ட கூட்டாளிகளுக்கு மேலும் கோபத்தை அதிகரிக்க செய்துள்ளது.

ஆற்காடு சுரேஷ் படுகொலைக்கு பின்னர் பிரச்சினை முடிந்து விட்டது என்று ஆம்ஸ்ட்ராங் மனதளவில் நினைத்து விட்டார். ஆனால் அதன்பிறகு தான் அவருடைய உயிருக்கே ஆபத்து ஏற்படப் போகிறது என்பதை அவர் உணரவில்லை.
குறிப்பாக ஆற்காடு சுரேஷின் பின்னணி தொடர்பாக ஆய்வு செய்யாமல் அலட்சியமாக இருந்தது பெரும் ஆபத்தில் முடிந்தது.

ஆற்காடு சுரேஷ் கொலையில் ஆம்ஸ்ட்ராங்கிற்கு முக்கிய பங்கு இருக்கிறது என்று புன்னை பாலா உள்ளிட்ட கும்பல் நம்பியது. அதனால் ஆற்காடு சுரேஷ் கொலை செய்து ஒரு வருடம் கூட ஆகாத நிலையில் ஆம்ஸ்ட்ராங்-ன் பிறந்த நாளான ஜூலை 5 -2024 அன்று அவரை படுகொலை செய்துள்ளனர்.

MUST READ