வி.பி. சிங் என்பவர் யார் ? அவருக்கு எதற்கு சிலை ?
தமிழ்நாட்டில் முன்னாள் பிரதமர் வி.பி.சிங் அவர்களுக்கு சிலை வைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் அறிவித்துள்ளார்.
வி.பி.சிங் என்பவர் யார் ? அவர் அப்படி என்ன சாதித்தார் ? அவருக்கு ஏன் சிலை ?
இந்தியாவில் 11 மாதம் வரை(டிசம்பர் 2, 1989 – நவம்பர் 10 1990) வரை மட்டுமே பிரதமராக இருந்தவர் வி.பி.சிங் என்கிற விஸ்வநாத் பிரதாப் சிங். அந்த காலக்கட்டத்தில் தான் சமூக ஜனநாயகத்தின் அடித்தளத்தை அரணாக நின்று பாதுகாத்தது மட்டுமல்லாமல் மக்களாட்சி என்ற உயர்ந்த வார்த்தைக்கு இந்திய அரசியலில் அகராதியில் அர்த்தம் தந்தவர்.
சமூக அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து அதை நிறைவேற்றி காட்டியவர் வி.பி.சிங். மண்டல் கமிஷன் பரிந்துரை செய்த 27 சதவீத இட ஒதுக்கீடு கோரிக்கையை நிறைவேற்றி பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் வாழ்க்கையில் விளக்கேற்றி வரலாற்றில் இடம் பிடித்தவர்.
அன்றைய பாஜக தலைவர்கள் பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களை தூண்டிவிட்டு மண்டல் கமிஷன் பரிந்துரையை எதிர்த்து போராட்டம் நடத்தினர். அந்த போராட்டத்தில் சில உயிரிழப்புகளும் ஏற்பட்டது. முடிவில் வி.பி.சிங் ஆட்சி மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டு ஆட்சி கலைக்கப்பட்டது. சமூக நீதிக்காக போராடிய ஒரு தலைவர் திட்டமிட்டு தோற்கடிக்கப்பட்டார்.
அதே காலக்கட்டத்தில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. அதை கண்டித்தும் அமைதியை நிலை நாட்ட வலியுறுத்தியும் வி.பி.சிங் உண்ணாவிரதம் இருந்தார். அப்போது மசூதியை இடித்த மதவாதிகள் அவருடைய அருகில் அமர்ந்து உண்ணும் போராட்டத்தை நடத்தி அநாகரிகச் செயலில் ஈடுப்பட்டது. அதற்கெல்லாம் சிறிதும் அச்சப்படாத வி.பி.சிங், தண்ணீரும் அருந்தாமல் தனது போராட்டத்தை தீவிரப்படுத்தினார்.
போராட்டத்தின் நாட்கள் அதிகரிக்க, அரசின் அழுத்தத்தினால் வி.பி.சிங் கைது செய்யப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அப்பொழுது அவருக்கு ஏற்பட்ட சிறுநீர் பாதிப்பு, கடைசியில் அவருடைய உயிரையும் பறித்துக் கொண்டது.
பிற்படுத்தப்பட்ட , மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக உழைத்த அந்த தலைவரின் இழப்பு என்பது இந்தியவிற்கு பெரும் இழப்பு. 27 சதவீதம் இட ஒதுக்கீடு கிடைத்ததால் இன்று பிற்படுத்தப்பட்ட மக்கள் உயர் படிப்பில் சேர்ந்து பட்டம் பெறுகிறார்கள். அரசு பதவிக்கு சுலபமாக செல்கிறார்கள். அதற்கெல்லாம் மூலக்காரணம் யார் என்பதை மறந்து போனதுதான் இந்த சமுதாயத்தின் சோகம்.
இந்தியாவிலேயே தமிழகம் மட்டுமே முற்போக்கு சிந்தனையிலும், இட ஒதுக்கீட்டிலும் போதிய விழிப்புணர்வு பெற்ற மாநிலம். அதனால்
தமிழ்நாட்டையும், தமிழர்களையும் உயர்வாக நேசித்தார். தந்தை பெரியாரையும், அவருடைய கொள்கைகளையும் உயிருக்கும் மேலாக நேசித்தார்.
கலைஞர் கருணாநிதியை உடன் பிறந்த சகோதரனைப் போல் பாவித்தார். அவருடைய கோரிக்கைகளை அனைத்தையும் ஏற்றுக் கொண்டார். சமூக நீதிக்காக தனது வாழ்வின் இறுதி நாள் வரை போராடினார். அதற்காகவே மறைந்தார். அந்த மாபெரும் தலைவருக்காக தமிழ்நாட்டில் சிலை அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அறிவிப்பு வரவேற்க வேண்டும்.