Homeசெய்திகள்கட்டுரைபாண்டேவை அழைத்து ஏன்? அடித்து நொறுக்கிய திமுகவின் மெசேஜ்!  உடைத்துப் பேசும் தாமோதரன் பிரகாஷ்!

பாண்டேவை அழைத்து ஏன்? அடித்து நொறுக்கிய திமுகவின் மெசேஜ்!  உடைத்துப் பேசும் தாமோதரன் பிரகாஷ்!

-

- Advertisement -

முதலமைச்சர் பிறந்தநாள் விழா கூட்டத்தில் ரங்கராஜ் பாண்டே கலந்துகொண்டது என்பது மிகவும் பொருத்தமற்றதாகும் என்றும், அந்த கூட்டத்தில் திமுகவுக்கு எதிரான விஷயத்தைதான் அவர் கக்கிவிட்டு சென்றுள்ளார் என்றும் மூத்த பத்திரிகையாளர்  தாமோதரன் பிரகாஷ் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

திமுக நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ரங்கராஜ் பாண்டே சர்ச்சைக்குரிய விதமாக பேசியுள்ளது குறித்து மூத்த பத்திரிகையாளர்  தாமோதரன் பிரகாஷ் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்துள்ள நேர் காணலில் கூறியிருப்பதாவது: – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள்விழாவில் கலந்துகொண்டு பேசிய பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே திமுகவையே கிண்டல் அடித்துவிட்டு சென்றுவிட்டார்.  அமைச்சர் மா.சுப்பிரமணியன் முதலமைச்சர் பிறந்தநாள் விழா கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தார். அதில் ரங்கராஜ் பாண்டே கலந்துகொண்டது என்பது மிகவும் பொருத்தமற்றதாகும். அந்த கூட்டத்தில் பேசிய போது தன்னைத் தானே மாற்றான் என்று பிரகடனப்படுத்திக் கொள்கிறார். அந்த நிகழ்ச்சியில் பாண்டே, திமுகவுக்கு எதிரான நான்கு ஐந்து விஷத்தை கக்கிவிட்டுதான் சென்றுள்ளார். அவரை நிகழ்ச்சியில் பேச தேர்வு செய்தது என்பது மிகவும் தவறானது. பாண்டேவின் வாயில் இந்த வார்த்தைகள்தானே வரும். வேறு என்ன வரும?. அவருடைய பேச்சில் நிறைய கேடுகள் தான் இருந்தது.

திமுக கூட்டணி உடைந்தால்தான் அரசியல் என்று திமுக மேடையிலேயே பாண்டே பேசியுள்ளார். திமுக அரசுக்கு, இந்தி எதிர்ப்பு என்பது தேர்தலுக்கான நேரேட்டிவ் என்றும், அது அந்த கட்சிக்கு அமுதசுரபி போன்று எதிர்க்கட்சிகளை பின்வாங்க செய்து விடுவதாகவும் பாண்டே சொல்கிறார். அது மக்கள் நலன் சார்ந்த விஷயம் இல்லை என்கிற தொணியில் அவர் பேசியுள்ளார். சரி இந்தி எதிர்ப்பை திமுக நேரேட்டிவாக எடுக்கிறது என்றே வைத்துக்கொள்வோம். இந்த விவகாரத்தில் பாண்டேவின் நிலைப்பாடு என்ன?. மும்மொழி கொள்கை விவகாரத்தில் ஐபிஎல் அணிகள் போல அவர்களுக்குள்ளாகவே அடித்துக்கொள்கிறார்கள். இந்தியா, பாகிஸ்தான் போன்று அல்லாமல் அவர்களுக்குள்ளாகவே அடித்துக்கொண்டு காலி செய்து கொள்கிறார்கள் என்றும் சொல்கிறார். இவற்றை எல்லாம் யாருக்கு அவர் சொல்கிறார். இந்த அட்வைஸ் என்பது திமுகவுக்கு கிடையாது. அவர் நம்பியிருக்கிற எதிர்க்கட்சிகளுக்குதான் இந்த அட்வைசை சொல்கிறார். திமுக கூட்டணி உடையும் என்று எப்படி அவர் சொல்லலாம்?. பாண்டே திமுகவை எதிர்ப்பவர்களுக்கு, அந்த கட்சியின் மேடையில் இருந்துகொண்டு பாடம் எடுக்கும் வேலையைதான் செய்துள்ளார்.

பருவமழையை எதிர்கொள்ள அரசு தயாா் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் மா.சுப்பிரமணியை பெரியளவில் டார்கெட் செய்தது பிரபல தமிழ்நாளிதழ் ஒன்று. அந்த நாளிதழுக்கு நெருக்கமாக இருந்தவர் தான் பாண்டே. அவருடைய தந்தையின் இறப்புக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்றது அவருடைய பெருந்தன்மையகும். இதேபோல் தான் கலைஞர், சோவிடம் நட்பு பாராட்டினார். சோ, ஜெயலலிதாவுக்கு நெருக்கம் என்று கலைஞருக்கு தெரியும். அப்படி இருந்தபோதும் இருவரும் ஒருவருக்கு ஒருவர் மதிப்பு அளித்துக்கொண்டனர். பாண்டேவை முதலமைச்சர் உயர்த்திப் பிடிப்பது அவர்களுக்கு ஆபத்தாகத்தான் முடியும் என்பதை அவரது பேச்சுக்கள் நிரூபித்துவிட்டன. அண்ணாமலை சாதாரணமானவர் கிடையாது, அவரை யாராலும் ஒன்றும் செய்துவிட முடியாது என்று பாண்டே சொன்னார். ஆனால் இன்று அண்ணாமலை அதிமுக கூட்டணிக்கு கொடி பிடித்துக்கொண்டிருக்கிறார். அதிமுகவிடம் ஒரு மாநிலங்களவை எம்.பி. சீட்டிற்காக தொங்கிக் கொண்டிருக்கிறார். கோவையில் சிவராத்திரி நிகழ்ச்சியின்போது மாநிலங்களவை எம்.பி. சீட்டை அன்புமணிக்கு தர வேண்டாம். அதனை தனக்கு கொடுத்தால்,  மத்திய அமைச்சராகி விடுவேன் என்று அமித்ஷா முன்னிலையில் வேலுமணி, ஜக்கி வாசுதேவ், அண்ணாமலை ஆகியோர் பேசி கொண்டனர். இதற்கு எடப்பாடி பழனிசாமி சம்மதிக்க மாட்டார் என்று அமித் ஷாவே சொல்லிவிட்டு போய் விட்டார். பின்னர் வேலுமணி இல்ல திருமண நிகழ்வுக்கு அமித்ஷா வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் வரவில்லை. அரக்கோணம் சிஎஸ்ஐஎப் நிகழ்ச்சிக்கு அவர் வந்தபோது மிகப்பெரிய அளவில் பாஞ்சாயத்து நடைபெறும் என்று அண்ணாமலை எதிர்பார்த்தார். ஆனால் அமித்ஷா அரசியல் எதுவும் பேசாமல் புறப்பட்டு சென்றுவிட்டார்.

மேற்படிப்பிற்காக லண்டன் செல்லும் அண்ணாமலை

தமிழ்நாட்டில் அண்ணாமலையை மிகப் பெரிய ஆளாக விளம்பரப்படுத்தியவர்களில் பாண்டேவின் பங்கு மிகப்பெரியதாகும். அண்ணாமலை அதிகம் விமர்சித்தது முதலமைச்சர் குடும்பத்தை தான். இதுவரை செந்தில் பாலாஜி வீட்டில் 2 முறை அமலாக்கத் துறை சோதனை நடைபெறுவதற்கு காரணமும் அண்ணாமலைதான். அவரை அடி முதல் பாதம் வரை ஆதரிக்கும் பாண்டேவுக்கு, திமுக நிகழ்ச்சியில் என்ன வேலை? அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நக்கீரன் கோபால் கலைஞருக்கு மிகவும் நெருக்கமானவர். இந்து ராம் பாஜகவுக்கு ஜென்ம எதிரி. பிரியன், காந்தராஜ் போன்றவர்கள் திமுக ஆதரவாளர்கள் ஆவர். அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பாண்டே சொல்கிறார், எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்தால் திமுக கூட்டணி தாங்காது என்கிறார். தவெக, அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக எல்லோரும் ஒற்றுமையாக வர வேண்டும் அல்லவா? இந்த கூட்டணி ராஜ்யசபா தேர்தலின்போதுதான் தெரியவரும்.

edappadi palanisamy

எஸ்டிபிஐ மாநாட்டில் பாஜக உடன் கூட்டணி இல்லை என்று சொன்ன எடப்பாடி பழனிசாமி, தற்போது 6 மாதம் கழித்து கூட்டணி தொடர்பாக முடிவு எடுக்கப்படும் என்று சொல்கிறார். ஆனால் 6 மாத காலம் என்பதெல்லாம் கிடையாது. சோதனை நடைபெற்றுக் கொண்டிருந்த போதே அதிமுக முடிவு எடுத்துவிட்டது. சதாசிவம் என்பவர் போய் பேசி முடிவெடுத்துவிட்டு வந்துவிட்டார். வேலுமணி வீட்டு திருமண நிகழ்வில் தாலி எடுத்துக்கொடுக்க அண்ணாமலை வருகிறபோது ஜெயலலிதா வருவதை போன்று எல்லோரும் கால்களில் விழுகிறார்கள். வரவேற்பு நிகழ்ச்சிக்குதான் எடப்பாடி பழனிசாமியை வரவழைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு மாற்றுக் கட்சி என்ற முறையில் சீமான் மட்டும்தான் சென்றார். மற்ற கட்சியினர் யாரும் போகவில்லை. இப்போது இன்னொரு கூடுதல் அஜெண்டா என்ன என்றால் சீமானும் சென்று அதிமுக கூட்டணியில் சங்கமம் ஆகி விடுவார் என தகவல் வருகிறது. அப்படி சீமான் சேரும் பட்சத்தில் அதிமுகவுக்கான மொழி சிறுபான்மையினருக்கான வாக்குகள் கிடைக்காது.

"ரூபாய் 5,000 கோடியை என்ன செய்தீர்கள்?"- கணக்குக் கேட்கும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

அதிமுக கூட்டணி என்பது பாஜகவுடன்தான். விஷயம் என்ன என்றால் பாஜக கேட்கும் இடங்களை அவர்களால் தர முடியாது. பாஜக 80 இடங்கள் வரை கேட்கிறது. இதுமட்டுமின்றி அவர்கள் அழைத்து வரும் ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா போன்றவர்களுக்கும் சீட் கொடுத்தாக வேண்டும். இந்த கூட்டணியின் பெயர் அதிமுக கூட்டணி அல்ல என்டிஏ கூட்டணி. இந்த கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்று அறிவிக்க மாட்டார்கள். யார் அதிக இடங்களில் வெற்றி பெறுகிறார்களோ அவர்கள் முதலமைச்சர் ஆவார்கள். பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற்றால், பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கும். அதற்கு அதிமுக வெளியில் இருந்து ஆதரவு அளிக்கும். அதிமுகவுக்கு சோதனைகளை எதிர்கொள்ள வேறு வழியில்லை. இந்த ஆட்சியில் நிர்மலா சீதாராமன் முதலமைச்சர் ஆவார் என்பதுதான் அண்ணாமலையின் திட்டம். இதைதான் எடப்பாடி பழனிசாமியால் சகித்துக்கொள்ள முடியவில்லை. அதிமுகவை முழுக்க பாஜக விழுங்கிவிட்டது. அவர்கள் தங்களது சுயத்தை இழந்துவிட்டனர்.  இதில் பாஜகவை அதிக இடங்களில் வெல்ல வேண்டும் என்ற இந்துத்துவ சிந்தனை கொண்டவர் பாண்டே. அவரை அழைப்பதற்கு பதிலாக அண்ணாமலையே கூப்பிட்டிருக்கலாமே. இதைவிட அவர் நன்றாக விமர்சித்திருப்பார், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ