Homeசெய்திகள்கட்டுரைசோதனைகளை கடந்து சாதனை படைக்கும் பெண்

சோதனைகளை கடந்து சாதனை படைக்கும் பெண்

-

சோதனைகளை கடந்து சாதனை படைக்கும் பெண்

தனது சொந்த காலில் நின்று சாதிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் சுயதொழில் செய்யும் பெண்களை நாம் பார்த்திருப்போம். அதிலும் தனி  பெண்ணாக நின்று சிறு தொழில் தொடங்கி இன்று முதலாளியாக வளர்ந்தவர்கள் பலர் இருகின்றனர். அப்படி ஒரு பெண் தான் தேவி.

யார் இந்த தேவி? இவர் என்ன வேலை செய்கிறார் என்ற ஆர்வத்துடன் அவரை சந்தித்தோம். அவரைப் பற்றி அவர் பேசியது,

என் பெயர் தேவி. சொந்தமாக ஸ்டீல் பட்டறை நடத்தி வருகிறேன், நான் பள்ளியோ கல்லூரியோ செல்லவில்லை.
இந்த பட்டறையை தொடங்கிய பொழுது எனக்கு எதிர்ப்புகள் ஏராளமாக இருந்தது.

இந்த பகுதி முழுவதும் ஏராளமான பட்டறைகள் உள்ளது. அந்த பட்டறைகள் முழுவதும் ஆண்கள் தான் நடத்தி வருகின்றனர். ஆண்களால் மட்டுமே நடத்த முடியும் என்ற எண்ணம் அவர்களிடம் இருந்தது. நான் பட்டறையை தொடங்கியதும் முதல் எதிர்ப்பே அவர்களிடம் இருந்து வந்தது.

எதோ நீ பட்டறையில் வேலை செய்கிறாய் என்று நினைத்திருந்தோம். இன்று நீ எங்களுக்கு போட்டியாக பட்டறையே தொடங்கி விட்டாயா? நீ எப்படி இங்கு தொழில் செய்கிறாய் என்று பார்க்கிறோம் என்று பயமுறுத்தினார்கள்.

அதை எல்லாம் நான் அப்போது பொருட் படுத்தவில்லை நமகென்று ஒரு”அடையாளம் வேண்டும், ஒரு அங்கீகாராம்” வேண்டும் என்று நினைத்து தொழிலை தொடங்கினேன்.
கட்டிங் மிஷின், பிரஸிங் மிஷின், பீடிங் மிஷின், வெல்டிங் மிஷின், பாலிஷ் மிஷின், என தேவையான அனைத்து மிஷின்களும் என் பட்டறையில் தற்போது வைத்துள்ளேன்.

அனைத்து வகையான எவர்சில்வர் பாத்திரங்களையும் எங்கள் பட்டறையில் உற்பத்தி செய்கிறோம்.

அப்படி உற்பத்தி செய்த பாத்திரங்களை ஆர்டரின் படி அன்றைய தினமே பஜாருக்கு அனுப்பிவிடுவோம், முதலில் ஒரு சிறு பட்டறையைத் தான் தொடங்கினேன். என்னுடைய கடும் உழைப்பினால் தற்போது நான்கு பட்டறையாக வளர்ந்துள்ளது என்றார்.

மேலும் என் இரு மகள்களும் டாக்டருக்கு படித்துள்ளார்கள். நான் படிக்காவிட்டாலும் இந்த பட்டறையில் உழைத்து என் மகள்களை டாக்டருக்கு படிக்க வைத்துள்ளேன் என்று பெருமையுடன் கூறினார்.

நான் தொழிலை தொடங்கிய பொழுது பெண்களுக்கு எதுக்கு இந்த வேலை என்று பேசியவர்கள் இன்று என்னிடமே வந்து வேலை செய்கிறார்கள், ஆர்டர் கொடுக்கிறார்கள்.
இந்த வேலையெல்லாம் பெண்களுக்கு எதற்கு என்று கேட்டவர்களுக்கு நான் ஒரு பதில் அளிக்க விரும்புகிறேன்.
“பிரசவ வலியை விடவா, பெரிய வலியை பெண்கள் அனுபவிக்க போகிறோம்? அந்த வலியே தாங்கிய பெண்கள் இதுபோன்ற ஆயிரம் பிரச்சனைகளை சமாளிக்க முடியும் என்று தைரியமாக பேசி உற்சாகப்படுத்தினார்

MUST READ