Homeசெய்திகள்கட்டுரைபெண்களை அதிகம் கவரும் லைட் வெயிட் நகைகள்

பெண்களை அதிகம் கவரும் லைட் வெயிட் நகைகள்

-

பெண்களை அதிகம் கவரும் லைட் வெயிட் நகைகள்

பெண்கள் இயற்கையாகவே அழகானவர்கள் தான் என்றாலும், அவர்களது அழகை மெருகேற்றுவதில் நகைகளுக்கு முக்கிய பங்குண்டு.

நகைகள் மீது பெண்களுக்கு தீராத ஆசை உண்டு என்பதை மறுக்கவும் முடியாது. அதனால் தான் தங்க நகை பயனாளர் பட்டியலில் பெண்கள் முதலிடம்.

அதிலும் லைட் வெயிட் நகை என்றால்

பேஷன் உலகம் காலத்திற்கு ஏற்ப மாற்றம் கண்டு வருகிறது.  அந்த காலத்தில் இருந்து  தற்போது வரை  பெண்கள் கழுத்து முழுக்க நகைகளை அணிந்து கொண்டு நிகழ்ச்சிகளுக்கு செல்வார்கள்.

ஆனால் தற்போதைய நவீன கால  பெண்கள் எடை குறைந்த  லேசான நகைகளையே  அதிகம் விரும்புகின்றனர்.  பேஷனில் நாட்டம் உள்ள பெண்களுக்காகவே  லைட் வெயிட் நகைகளில் அதிக கலெக்‌ஷன்கள் வந்த வண்ணம் உள்ளன.

ஒரே நகையாக அணிவதை விட அடுகடுக்கான நகைகளை அணிவது தனி அழகாக தெரியும்.

அப்படி ஒரே நகையாக வடிவமைக்கப் படும் லைட் வெயிட் நகையின் சிறப்பு அம்சம் என்னவென்று பார்த்தால். பாரம்பரியத்தின் அடிப்படையில் வடிவமைக்க பட்டுள்ளதாக கூறுகின்றனர்.  அதில் வடிவமைக்க படும் ஒவ்வொரு அணிகலனும் மற்றவரின் கண்களை கவரும் விதமாக வடிவமைத்து உள்ளனர்.

கழுத்தில் அணியும் செயின் மட்டுமல்லாது மோதிரம் வளையல் போன்றவற்றையும் மேட்சிங் டிசைன்களில்  வடிவமைத்துக் கொள்ள முடியும்.

இந்த லைட் வெயிட் நகையின் சிறப்பு , அதை அணிந்து இருப்பதே தெரியாது.  கல்லூரிகள், அலுவலகங்களுக்குச் செல்லும் இன்றைய பெண்கள்

ட்ரெண்டிங் லைட் வெயிட் நகைகளை அணிந்து செல்லவே விரும்புகின்றனர். ஆகையால்,  பேஷன் உலகில் இவை மிக முக்கிய பங்காற்றி வருகிறது.

MUST READ