கடந்த ஜூன் ஒன்பதாம் தேதி சரத்குமார் மற்றும் அசோக் செல்வன் நடிப்பில் போர் தொழில் எனும் திரைப்படம் வெளியானது. இந்த படத்தை அப்ளா என்டர்டைன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கியுள்ளார்.
கிரைம் திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படம் ரசிகர்களிடைய நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. மேலும் வெளியான இரண்டு நாட்களில் 2.25 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.
இந்நிலையில் இந்த படம் குறித்து யூடியூபர் ப்ளூ சட்டை மாறன் பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவின் பெரிய நடிகர்களின் படங்களுக்கு கூட நெகட்டிவ் விமர்சனங்களை அளித்து வந்த ப்ளூ சட்டை மாறன் அந்த நடிகர்களின் ரசிகர்களிடம் வெறுப்பை சம்பாதித்தார். இருப்பினும் சில நல்ல படங்களை அவர் பாராட்டியதும் உண்டு. அந்த வரிசையில் இந்த போர் தொழில் படமும் தற்போது இணைந்துள்ளது.
ப்ளூ சட்டை மாறன் போர்த் தொழில் திரைப்படத்தில் சரத்குமார் மற்றும் அசோக் செல்வனின் நடிப்பு குறித்து பாராட்டியுள்ளார். மேலும் திரை கதையும் வசனமும் சிறப்பாக அமைந்துள்ளதாக கூறியிருக்கிறார். தேவையில்லாத வசனங்களும் தேவையில்லாத காட்சிகளோ இந்த படத்தில் இல்லை என்று பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்துள்ளார்.
இவ்வாறான நல்ல விமர்சனங்களை அளித்ததற்காக ப்ளூ சட்டை மாறனுக்கு நடிகர் அசோக் செல்வன் ட்விட்டர் பக்கத்தில் இமோஜி ஒன்றுடன் தனது நன்றியை தெரிவித்துள்ளார். அதற்கு பதில் தெரிவிக்கும் விதமாக ப்ளூ சட்டை மாறனும் மேலும் இதுபோன்ற பல நல்ல படங்களில் நடிக்க என்னுடைய வாழ்த்துக்கள் என்று அசோக் செல்வனுக்கு பதிலளித்துள்ளார்.