Homeசெய்திகள்ரஷ்ய அதிபர் புதினை கொல்ல மீண்டும் சதி… ரூ.3 கோடி கார் மீது குண்டு வெடிப்பு..!

ரஷ்ய அதிபர் புதினை கொல்ல மீண்டும் சதி… ரூ.3 கோடி கார் மீது குண்டு வெடிப்பு..!

-

- Advertisement -

மாஸ்கோவில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் வாகனப் பேரணியின்போது அவரது சொகுசு கார் மீது குண்டு வீசப்பட்டது. மாஸ்கோவில் உள்ள தலைமையகத்திற்கு வெளியே இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இருப்பினும், இந்த குண்டுவெடிப்பில் எந்த உயிரிழப்பும் ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை. குண்டு வெடிப்புச் சத்தத்திற்குப் பிறகு லிமோ கார் தீப்பிடித்து எரிந்தது. என்ஜினில் இருந்து தீப்பிடித்து, பின்னர் கார் முழுவதும் பரவியது.

காரின் ஒரு பகுதி முற்றிலுமாக சேதமடைந்தது. காரில் ஏற்பட்ட குண்டு வெடிப்பு குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த குண்டுவெடிப்பு தானாகவே நடந்ததா? இதற்குப் பின்னால் ஏதேனும் சதி உள்ளதா? என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், இதுவரை இந்த குண்டுவெடிப்பில் எந்த பெயரும் வெளியிடப்படவில்லை. இந்நிலையில், புடினுக்கு எதிராக இந்த சதியை யார் தீட்டினார்கள் என்கிற கேள்வி எழுந்துள்ளது. கார் வெடிப்புக்கும், உக்ரைன் போருக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா?

Putin

சமீபத்தில் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி புதினைப் பற்றி ஒரு கணிப்பு வெளியிட்டிருந்தார். 2 நாட்களுக்கு முன்பு ஜெலென்ஸ்கி, புடின் விரைவில் இறந்துவிடுவார் என்று கூறியிருந்தார். மார்ச் 26 அன்று பாரிஸில் ஐரோப்பிய பத்திரிகையாளர்களுடனான நேர்காணலின் போது ஜெலென்ஸ்கி இப்படிக் கூறி இருந்தார்.

MUST READ