Homeசெய்திகள்ஆன்மீகம்தை அமாவாசைக்கு மறக்காமல் தர்ப்பணம் அளிக்க வேண்டும்!

தை அமாவாசைக்கு மறக்காமல் தர்ப்பணம் அளிக்க வேண்டும்!

-

- Advertisement -

இந்த 2023ம் ஆண்டு தை அமாவாசை சனிக்கிழமை வருவது சிறப்பானதாக கருதப்படுகிறது. தை அமாவாசை ஜனவரி 21ம் தேதி சனிக்கிழமை வருகிறது.

ஒவ்வொரு மாதமும், அமாவாசை திதி வரும் இருந்தாலும், தை மாதம் வரும் அமாவாசை மிகவும் முக்கியமாதாக கருதப்படுகிறது.

நமது வாழ்க்கையில் ஏற்படும் இன்னல்களில் இருந்து விடுபட, தை அமாவாசை. மேலும் வரும் சனி அமாவாசை அன்று சில தானங்களை அளித்தால் நம் முன்னோர்களின் ஆசி கிடைக்கும் என சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.

சனி அமாவாசை தினத்தின் போது கருப்பு உளுந்து, கருப்பு எள், வெல்லம், புதிய ஆடைகள் ஆகியவற்றை நாம் தானம் அளித்தால் மிகவும் நல்லது என்று கூறப்படுகிறது.

அதே போல் தாகத்தை தணிக்கும் தண்ணீர் தானமும் சிறப்பானது.

இதனால் நம் முன்னோர்களின் முழு ஆசி கிடைக்கும் என்றும் சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.

னி அமாவாசை தினத்தில் ஏழை எளியோரை ஒருபோதும் நாம் தொந்தரவு அல்லது கஷ்டப்படுத்தக் கூடாது. ஏழை மக்களின் உருவில் சனி பகவான் இருக்கிறார்.

அவர்களை அவமதித்தால் சனி பகவானின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். ஏழை மக்களுக்கு உதவி செய்வதன் மூலமும் அவர்களுக்கு மரியாதை அளிப்பதன் மூலமும் சனி பகவானின் ஆசியை பெறலாம்.

இந்த உலகில், நம்முடன் வாழ்ந்து மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க ஆடி அமாவாசை, புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசை, தை அமாவாசை போன்றவை சிறப்பு வாய்ந்த நாட்களாகும்.

நம்முடைய பித்ருகளுக்கு தர்ப்பணம் பூஜை செய்யாதவர்கள் முன்னோர்களின் சாபத்திற்கு ஆளாகின்றனர். அப்படி சாபம் பெற்றவர்களின் வீடுகளில் தான் ஊனமுற்ற குழந்தைகள் பிறக்கிறது என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

எனவே, வரும் இந்த தை அமாவாசை நாளில் நாம் மறக்காமல் தர்ப்பணம் அளிக்க வேண்டும் என்பதை கருத்தில் கொள்ளுங்கள்.

MUST READ