Homeசெய்திகள்ஆன்மீகம்விநாயகர் சதுர்த்தி விழா - மதம் கடந்த மனித நேயம்! இது தான் தமிழ்நாடு!!

விநாயகர் சதுர்த்தி விழா – மதம் கடந்த மனித நேயம்! இது தான் தமிழ்நாடு!!

-

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடைபெற்ற பக்தி நடன நிகழ்ச்சி மேடையில் காளி பிறந்தநாள் பாடல் பாட, அம்மன் கேக் ஊட்ட மகளின் முதலாமாண்டு பிறந்தநாளை கொண்டாடிய இஸ்லாமிய தம்பதியினர்.

சென்னை ஆவடி அடுத்த பட்டாபிராம் கக்கன் ஜி நகர் பகுதியில் 8 அடியில் பிரம்மாண்டமான விநாயகர் சிலை வைத்து விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடபட்டு வருகிறது.

விநாயகர் சதுர்த்தி விழா - மதம் கடந்த மனித நேயம்! இது தான் தமிழ்நாடு!!

இதையொட்டி அங்கு பக்தி பாடல்களுக்கு விநாயகர்,அம்மன், காளி, கருப்பசாமி உள்ளிட்ட தெய்வங்களின் வேடமணிந்தவர்களின் நடன நிகழ்ச்சி நடைபெற்றது.  அப்போது அதே பகுதியை சேர்ந்த அன்வர் என்பவர் மகளின் முதலாமாண்டு பிறந்தநாள் விழாவை மேடையில் கொண்டாடினார். கடவுளர்கள் வேடமணிந்தவர்களுடன் இணைந்து பிறந்த நாள் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.  காளி பிறந்தநாள் பாடல் பாட,  கேக்கினை அம்மன் இசுலாமிய குழந்தைக்கு ஊட்டி மகிழ்ந்தனர்.

விநாயகர் சதுர்த்தி விழா - மதம் கடந்த மனித நேயம்! இது தான் தமிழ்நாடு!!

திடீரென நடைபெற்ற இந்த நிகழ்வு காண்போரை ஆச்சரியம் அடைய செய்யும் விதமாக இருந்தது. மேலும் இது தமிழர்களின் மதம் கடந்த மனித நேயத்தை விளக்கும் வகையில் இருப்பதாகவும் அமைந்தது.

MUST READ