புரட்டாசி மாதம் முதல் நாள் இன்று. திருவேங்கடமுடையான் அவதரித்த மாதம் இது. எனவே புரட்டாசி மாதம் பெருமாள் வழிபாட்டுக்கு உரியது என்பது நம்பிக்கை. திருப்பதி வெங்கடாஜலபதி பெருமாள் என்றாலே லட்டு தான் ஞாபகத்திற்கு வருகிறது.
அவ்வாறே பிரசாதம் என்றால் லட்டு, சர்க்கரைப் பொங்கல், புளியோதரை தான் கண் முன்னே வரும்.
ஆனால் அந்தக் காலத்தில் திருப்பதி வெங்கடாஜலபதி பெருமாளுக்கு தோசையில் சர்க்கரை தூவித்தான் படைப்பார்களாம்.
பின்னர்தான் “லட்டு” வழக்கத்திற்கு வந்துள்ளது.
தோசையை பிரசாதமாக தரும் கோவில்கள் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
கோவில் பிரசாதம் என்றால் பழனி பஞ்சாமிர்தம், திருப்பதி லட்டு, உப்பிலியப்பன் கோவில் புளியோதரை.
ஆனால் மதுரை அழகர் கோவிலில் தோசை புகழ்பெற்றது.
அழகர்கோயில் வந்து சம்பா தோசையை வாங்கிச் சாப்பிட்டுச் சென்றால் , நமது சங்கடங்கள் நிச்சயமாக தீரும் என்று கூறுகிறார்கள்.
இத்திருத்தலத்தின் மூலவருக்கு நைவேத்தியமாக செய்யும் சம்பா தோசை என்று சொல்லப்படும் நெய் பலகாரம் சற்று வித்தியாசமான சுவையில் இருக்க கூடிய ஒன்றாகும்.
2000 ஆண்டுகள் பழமையான பல்லவர் காலத்தைச் சேர்ந்த சிங்கப்பெருமாள் நரசிம்மர் குடைவரை கோவிலில் அதிரசம், லட்டு, முறுக்கு, தட்டை, தோசை போன்றவை பிரசாதமாக வழங்கப்பட்டாலும் மிளகு தோசைதான் பக்தர்களின் பெரும்பாலான விருப்பமாக உள்ளது.
அழகர் கோவில் சுந்தரராஜ பெருமாள் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அழகர் கோயில் ஸ்பெஷல் தோசையை வாங்காமல் செல்ல மாட்டார்கள். இங்கு மலை உச்சியில் நூபுர கங்கை பாய்கிறது. இந்த நீரை பயன்படுத்திதான் தோசை பிரசாதம் செய்து அழகருக்கு படைக்கப்பட்டு பின்பு பிரசாதமாக வழங்கப்படுகிறது.
தமிழகத்தில் 2 நாட்களுக்கு வெயில் சுட்டெரிக்கும்… சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
அந்தக் காலத்தில் திருப்பதி வெங்கடாஜலபதி பெருமாளுக்கு தோசையில் சர்க்கரை தூவி படைப்பார்களாம். பின்னர்தான் “லட்டு” வழக்கத்திற்கு வந்துள்ளது.
ஸ்ரீரங்கம் பெருமாள் கோவிலில் பெருமாளுக்கு தோசை, ரொட்டி, வெண்ணை, வெண்பொங்கல், சர்க்கரைப் பொங்கல், அப்பம், தேன்குழல், அதிரசம் ஆகியவை அந்தந்த காலத்திற்கேற்ப அமுது செய்விக்கப்படுகின்றது. வைகுண்ட ஏகாதசி நாட்களில் பெருமாளுக்கு “சம்பாரா தோசை” எனப்படும் பெரிய தோசையும், செல்வரப்பமும் அமுது செய்விக்கப்படுகின்றது.