திருச்செந்தூரில் சூரசம்ஹாரத்தை முன்னிட்டு இன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கடல் அலைக்கு போட்டியாக கரையில் குவிந்துள்ளனர்.
சூரசம்காரத்தை கான வந்த ஒரு பக்தர் அவருயை அனுபவத்தை பகிர்ந்துள்ளார்
குழந்தை இல்லாம 7 வருசமா இந்த கோயிலுக்கு விரதம் இருந்து வந்தோம். எங்களுக்கு ரெட்டை குழந்தை கிடைச்சிருச்சு. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று மாலை நடைபெறும் சூரசம்கார நிகழ்ச்சியைக் காண திரளான பக்தர்கள் வருகை தந்துள்ளனர்.
கந்த சஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நிகழ்வு முருகப் பெருமான் திருத்தலங்களில் இன்று நடைபெறுகிறது. அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் நடைபெற்று வரும் சூரசம்ஹார நிகழ்ச்சியை காண்பதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் கடல் அலைபோல குவிந்துள்ளனர்.
முருக பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில் ஆண்டுதோறும் நடைபெறும் விழாக்களில் கந்தசஷ்டி விழா முக்கியமானதாகும். சூரபத்மனை, முருகப்பெருமான் வதம் செய்த இடம் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளதால் இங்கு நடைபெறும் சூரசம்ஹாரம் உலக பிரசித்தி பெற்றதாக கருதப்படுகிறது. இந்த ஆண்டு கந்தசஷ்டி விழா கடந்த 2-ம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கிற்று. விழாவில் ஒவ்வொரு நாளும் காலை 7மணிக்கு யாக பூஜை தொடங்கி,12 மணிக்கு யாக சாலையில் தீபாராதனை நடைபெற்றது. 12.45 மணிக்கு சுவாமி தங்க சப்பரத்தில் சண்முக விலாசம் வந்து அங்கு தீபாராதனைக்கு நடைபெற்றது.
முதலில் சுவாமி தன்னிடம் போரிட வரும் யானை முகம் கொண்ட சூரனையும், 2-வதாக சிங்கமுகம், 3-வதாக தன் முகம் கொண்ட சூரனையும் வதம் செய்கிறார். இறுதியில் மரமாக மாறிய சூரனை சுவாமி சேவலாகவும், மயிலாகவும் மாற்றி தன்னோடு ஜக்கியமாக்கி கொள்ளும் நிகழ்ச்சி நடக்கிறது.
சூரசம்ஹாரம் முடிந்த பிறகு சந்தோச மண்டபத்தில் சுவாமிக்கும், அம்பாளுக்கும் அலங்காரமாகி தீபாராதனை நடைபெறும். தொடர்ந்து கிரிபிரகாரம் உலா வந்து திருக்கோயில் சேருகிறார். அதன் பிறகு இரவு 108 மகாதேவர் சன்னதி முன்பு சாயா அபிஷேகம் நடைபெற்று, பக்தர்களுக்கு சஷ்டி பூஜை தகடுகள் கட்டப்படும். தொடர்ந்து 7-ம் நாளான நாளை மறுநாள் (நவ.8) இரவு திருக்கல்யாணம் நடைபெறும்.
கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு கடந்த 6 நாள்களாக ஆயிரகணக்கான பக்தர்கள் திருச்செந்தூரிலேயே தங்கி விரதம் இருந்து வருகின்றனர். அதே போல, லட்சக்கணக்கான பக்தர்கள் தங்கள் வீடுகளில விரதம் மேற்கொண்டுள்ளனர்.
சூரசம்ஹாரத்தை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் நெல்லை சரக டிஐஜி மூர்த்தி தலைமையில் 4000க்கும் மேற்பட்ட போலீசார், ஊர்க்காவல் படையினர், கடலோர காவல்படையினர் ஈடுபட்டுள்ளனர். கடற்கரையில் நடைபெறும் சூரசம்ஹார விழாவை காண செல்லும் பக்தர்களுக்கு தனியாக வரிசைப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.