குரோம்பேட்டை அருகே நவபாஷாண முருகன் கோவிலில் சிலை சேதமானது குறித்து செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் அருண்ராஜ் தீடீர் ஆய்வு செய்தார். இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வுக்கு பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிக்கப்பட்டுள்ளது.
சென்னை குரோம்பேட்டை அடுத்த அஸ்தினாபுரத்தில் ஸ்ரீ நவபாஷாண தண்டபானி கோவில் உள்ளது. இந்த கோவிலில் 4 அடி உயரம் கொண்ட நவபாஷாண முருகன் சிலையை வழிபட்டுவருகிறார்கள். இந்த கோவிலின் சிலையை வடிவமைத்த வடபழனி சித்தரின் சீடர் ரமேஷ்குமார் என்பவர் சிலை சேதமாகியுள்ளதாக செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் உயர் காவல் அதிகாரிகளிடம் அளித்த புகாரில் கோவில் நிர்வாகத்தினரான வெங்கடேசன் குடும்பத்தினருக்கு பிரச்சினை ஏற்பட்டது. இதனால் மாவட்ட நிர்வாக தரப்பில் இருதரபிலும் அமைதி கூட்டம் நடத்தப்பட்டது. இந்து சமய அறநிலைத்துறை சார்பில் கோவில் கையகப்படுத்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது ஆட்ஷேபம் இருந்தால் தெரிவிக்க வேண்டும் என கோவில் முன்பாக நோட்டிஸ் ஒட்டப்பட்டது.
இந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் அருண்ராஜ், பள்ளிக்கரணை காவல் துணை ஆணையாளர் கார்திகேயன், பல்லாவரம் வட்டாட்சியர் ஆகியோர் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது மாவட்ட ஆட்சித்தலைவர் அருண்ராஜ் கோவில் நிர்வாகம் செய்யும் வெங்கடேசன், அவரின் சகோதரர் மாநகராட்சி அதிமுக கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோரிடம் விசாரித்துள்ளார்.
அதுபோல் புகார் தாரர் ரமேஷ்குமாரும் அங்கு வந்த நிலையில் கோவில் நவபாஷாண முருகன் சிலையை நேரில் பார்த்தனர். அப்போது ஆட்சியர் அருண்ராஜ் சட்டயை கழட்டிவிட்டு கோவில் கருவறைக்கு சென்று ஊதுபத்தி ஏற்றி வழிபட்டார்.
அதனை தொடர்ந்து கோவில் நிர்வாகத்தினர் கட்டுப்பாடில் உள்ள வடபழனி சித்தர் வடிவமைத்த 2 அடி நவபாஷண சிலை குறித்து கேட்டு அதனை ஆட்சியர் பார்வையிட்டுள்ளார். பின்னர் கோவில் நிலம் யார் பெயரில் உள்ளது என வருவாய் துறை அதிகாரிகளிடம் கேட்டு தெரிந்துகொண்டார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் அருண்ராஜ் கூறியதாவது, ஸ்ரீ நவபாஷாண தண்டபானி கோவில் சிலை சேதம் என புகார் வந்தது. அதன் அடிப்படையில் இருதர்ப்பில் விசாரித்தோம், இந்து சமய அறநிலைய இணை ஆணையாளர் நேரில் விசாரித்து நடவடிக்கை எடுக்க கூறியுள்ளேன், அதுபோல் கோவில் நிலம் கோவில் பெயரில் பட்டா உள்ளது அதனால் கோவில் பொதுவானது, அறநிலையத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என்றார்.
சாமானியர்களின் சிக்கல்களை தீர்க்கவரும் பான் 2.0 எப்படியெல்லாம் எளிதாக்கும்..?