Homeசெய்திகள்ஆன்மீகம்நிறை புத்தரிசி பூஜை: சபரிமலை நாளை நடை திறப்பு

நிறை புத்தரிசி பூஜை: சபரிமலை நாளை நடை திறப்பு

-

நிறை புத்தரிசி பூஜை: சபரிமலை நாளை நடை திறப்பு

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை (ஆகஸ்ட் -11) திறக்கப்படவுள்ளது.

நிறைபுத்தரிசி பூஜையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை  மாலை திறக்கப்படுகிறது.

சபரிமலையில் வருடம்தோறும் ஆடி மாதத்தில் நிறைபுத்தரிசி பூஜை நடைபெறுவது வழக்கம். நாட்டில் விவசாயம் செழித்து வறுமை நீங்குவதற்காக இந்த பூஜை நடத்தப்படும். அதன்படி இந்த வருடத்துக்கான நிறைபுத்தரிசி பூஜை வரும் 12ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த சிறப்பு பூஜையை முன்னிட்டு நாளை மாலை 5 மணிக்கு சபரிமலை கோயில் நடை திறக்கப்படுகிறது. கோயிலின் மேல்சாந்தி மகேஷ் நம்பூதிரி நடை திறப்பார் என தெரிவித்துள்ளனர்.

 

12ம் தேதி அதிகாலை 5.45விலிருந்து 6.30 மணிக்கு இடையே நிறைபுத்தரிசி பூஜை நடைபெறும். இதற்காக பாலக்காடு மற்றும் அச்சன்கோவில் ஆகிய இடங்களில் இருந்து புதிதாக அறுக்கப்பட்ட நெற்கதிர்கள் கொண்டு வரப்படும் எனவும் இந்த நெற்கதிர்கள் பூஜை செய்யப்பட்ட பின்னர் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.

திருப்பூரிலிருந்து அயோத்திக்கு ராமர் பாதம் கொண்டுசெல்லும் தொடக்க நிகழ்ச்சி… சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி மறுப்பு

இதனைத் தொடர்ந்து வழக்கமான பூஜைகளுக்குப் பின்னர் 12ம் தேதி இரவு 10 மணிக்கு கோயில் நடை சாத்தப்படும். மீண்டும் ஆவணி மாத பூஜைகளுக்காக வரும் 16ம் தேதி மாலை சபரிமலை கோயில் நடை திறக்கப்படும் என தெரிவிக்கின்றனர்.

MUST READ