Homeசெய்திகள்ஆன்மீகம்நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் திருவிழா

நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் திருவிழா

-

- Advertisement -
நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் திருவிழா
புதுக்கோட்டை மாவட்டத்தில் விமர்சையாக நடைபெற்ற நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் திருவிழா

நார்த்தாமலையில் உள்ள முத்து மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த மாதம் 2 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருவிழாவை ஒட்டி நாள்தோறும் பல்வேறு அலங்காரங்களில் அம்மன் வீதி உலா வந்தார். இந்நிலையில் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பல்லாயிரம் பக்தர்கள் பங்கேற்று பக்தி முழக்கத்துடன் தேரை வடம் பிடித்து வழிபட்டனர்.

நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் திருவிழா

கோவிலை சுற்றியுள்ள நான்கு வீதிகளில் தேர் வளம் வந்து நிலையை அடையும் வரை ஏராளமானோர் சாமி தரிசனம் செய்தனர். தேரோட்டத்தை ஒட்டி புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

MUST READ