Homeசெய்திகள்ஆன்மீகம்ராமானுஜ கைங்கர்ய டிரஸ்ட் சார்பில் திருப்பதி திருக்குடைகள் பாதயாத்திரை தொடங்கியது

ராமானுஜ கைங்கர்ய டிரஸ்ட் சார்பில் திருப்பதி திருக்குடைகள் பாதயாத்திரை தொடங்கியது

-

ராமானுஜ கைங்கர்ய டிரஸ்ட் சார்பில் திருப்பதி திருக்குடைகள் பாதயாத்திரை தொடங்கியது

ராமானுஜம் கைங்கரிய டிரஸ்ட் சார்பாக 19 ஆம் ஆண்டு திருப்பதி திருமலைக்கு திருக்குடைகளுடன் செல்லும் பாதயாத்திரையை சென்னை புறநகர் பகுதியான ஆவடி அடுத்த திருநின்றவூர் தனியார் திருமண மண்டபத்தில் சிறப்பு அழைப்பாளராக திருமலை திருப்பதி தேவஸ்தான தமிழ்நாடு பாண்டிச்சேரி ஆலோசனை குழு தலைவர் ஏ.ஜே.சேகர் ரெட்டி கலந்து கொண்டு கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
ராமானுஜ கைங்கர்ய டிரஸ்ட் சார்பில் திருப்பதி திருக்குடைகள் பாதயாத்திரை தொடங்கியதுபின்பு, செண்டை மேளம் முழங்க பெருமாளுக்கு பிடித்த பஜனை பாடல்கள் பாடியபடி போகும் பாதை வரை சிறு பிள்ளைகள் முதல் முதியவர்கள் சென்றனர். கோகுல கிருஷ்ணன் பாடலுக்கு அழகிய கோலாட்டம் நடனமாடியபடி பெண்கள் முன் சென்றனர்.

ராமானுஜ கைங்கர்ய டிரஸ்ட் சார்பில் திருப்பதி திருக்குடைகள் பாதயாத்திரை தொடங்கியது

 

பெருமாளின் பாத அணிகள் ரத தேரினில் அலங்கரிக்கப்பட்டு பக்தர்கள் தங்களது தலையில் சுமந்து சென்று திருப்பதி சேர்வது வழக்கம். 60 திருக்குடைகளுடன் துவங்கிய பாதயாத்திரை போகும் வழியில் அமைந்திருக்கும் பெரியபாளையம், ஊத்துக்கோட்டை, ரேணிகுண்டா ஆகிய பகுதிகளிலும் உள்ள அனைத்து பெருமாள் ஆலயங்களுக்கும் ஒவ்வொரு திருக்குடை கொடுத்துவிட்டு செல்வது வழக்கம். கடைசியாக, திருப்பதி திருமலை பெருமாளுக்கு 11 கொடைகள் ஆண்டு தோறும் ஸ்ரீ ராமானுஜ கைங்கரிய டிரஸ்ட் சார்பாக வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ராமானுஜ கைங்கர்ய டிரஸ்ட் சார்பில் திருப்பதி திருக்குடைகள் பாதயாத்திரை தொடங்கியது

இந்த பாதயாத்திரையில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ் அப்துல் ரஹீம், பி வி ரமணா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி அலெக்சாண்டர், மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வழிநெடுக சுவாமிக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளித்து கோவிந்தா கோவிந்தா என்று கோஷமிட்டபடி சென்றனர்.

MUST READ