Homeசெய்திகள்ஆன்மீகம்ஸ்ரீ ராதா ருக்மணி ஸமேத ஸ்ரீ வேணு கோபால பெருமாள் ஆலய கும்பாபிஷேகம் – திரளான...

ஸ்ரீ ராதா ருக்மணி ஸமேத ஸ்ரீ வேணு கோபால பெருமாள் ஆலய கும்பாபிஷேகம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு

-

ஸ்ரீ ராதா ருக்மணி ஸமேத ஸ்ரீ வேணு கோபால பெருமாள் ஆலய கும்பாபிஷேகம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு

ஆவடி அருகே, அருள்மிகு ஸ்ரீ ராதா ருக்மணி ஸமேத ஸ்ரீ வேணுகோபால பெருமாள் ஆலயத்தில் அஷ்ட பந்தன கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என்று கோஷம் எழுப்பி பக்தி பரவசத்துடன் வழிபாடு செய்தனர்.

ஸ்ரீ ராதா ருக்மணி ஸமேத ஸ்ரீ வேணு கோபால பெருமாள் ஆலய கும்பாபிஷேகம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு

ஆவடி அடுத்த பாலவேடு சாஸ்திரி நகரில் அமைந்துள்ள பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ ராதா ருக்மணி ஸ்ரீ வேணுகோபால பெருமாள் ஆலயம் புறனமைப்பு பணிகள் நடைபெற்று முடிவடைந்த நிலையில்,

ஸ்ரீ ராதா ருக்மணி ஸமேத ஸ்ரீ வேணு கோபால பெருமாள் ஆலய கும்பாபிஷேகம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு

பாலவெடு கிராம பொதுமக்கள் தலைமையில் கடந்த  மூன்று நாட்களாக மகா கணபதி ஓமம், கோ பூஜை, தம்பதி பூஜை பிரம்மச்சாரி பூஜை, மற்றும் மூன்று கால யாக பூஜைகள், குருக்கள் மந்திரம் முழுங்க துவங்கப்பட்டு இன்று நான்காவது நாளாக ஆலயத்தில் ஸ்ரீ ராதா ருக்மணி ஸ்ரீ வேணுகோபால பெருமாளுக்கு சிலை,

ஸ்ரீ ராதா ருக்மணி ஸமேத ஸ்ரீ வேணு கோபால பெருமாள் ஆலய கும்பாபிஷேகம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு

லட்சுமி வராக சுவாமி, மகாலட்சுமி தாயார் ஆஞ்சநேயர் ஆகிய சன்னதி  பீடம் அமைத்து கோபுர கலசங்களுக்கும் பரிவார மூர்த்திகளுக்கும் நவகிரகங்களுக்கும் குருக்கள் வேத மந்திரங்கள் முழுங்க கலச நீர் ஊற்றி அஸ்தனபந்தன மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

ஸ்ரீ ராதா ருக்மணி ஸமேத ஸ்ரீ வேணு கோபால பெருமாள் ஆலய கும்பாபிஷேகம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு

பின்னர் ஆலயத்தில் அருள்பாலித்த ஸ்ரீ ராதா ருக்மணி ஸ்ரீ வேணுகோபாலப் பெருமாளுக்கு வாசனை திரவங்கள் ஊற்றி பால் அபிஷேகம், பன்னீர் அபிஷேகம், சந்தன, நெய் அபிஷேகங்கள் திருமஞ்சனம் மகா தீபாரதனைகள் நடைபெற்றது.

ஸ்ரீ ராதா ருக்மணி ஸமேத ஸ்ரீ வேணு கோபால பெருமாள் ஆலய கும்பாபிஷேகம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு

இந்த கும்பாபிஷேகத்திற்கு பாலவேடு சாஸ்திரி நகர் பகுதி பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பத்துக்கும் மேற்பட்ட கிராம பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

MUST READ