Homeசெய்திகள்ஆன்மீகம்திருப்பதியில் மீண்டும் புனித தன்மையுடன் லட்டு தயாரிப்பு - முதல்வர் சந்திரபாபு நாயுடு தகவல்

திருப்பதியில் மீண்டும் புனித தன்மையுடன் லட்டு தயாரிப்பு – முதல்வர் சந்திரபாபு நாயுடு தகவல்

-

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மீண்டும் புனித தன்மையுடன் லட்டு தயாரிக்கப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்படுவதாக முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். மேலும் கடந்த ஆட்சியில் செய்த தவறை ( தோஷத்தை ) எவ்வாறு பரிகாரம் செய்வது என்பது ஜீயர்கள், சனாதன பண்டிதர்கள், காஞ்சி மடாதிபதி ஆகியோருடன் ஆலோசித்து வருகிறோம் முதல்வர் சந்திரபாபு நாயுடு தகவல்.

ஆந்திர மாநிலம் என்.டி.ஆர். மாவட்டம் விஜயவாடாவில் உள்ள தெலுங்கு தேச கட்சி தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் சந்திரபாபு நாயுடு கடந்த ஆட்சியிக் ராமர்குண்டத்தில் உள்ள ராமர் சிலையின் தலையை துண்டித்தார்கள். குறைந்தபட்சம் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதுமட்டுமல்ல பல முறைகேடுகள் நடந்துள்ளன. கடந்த அரசு செய்யாத தவறே இல்லை. கடந்த அரசு மக்களின் உணர்வுகளுடன் விளையாடியது. அவர்கள் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கவில்லை. போலவரமும், அமராவதி பணிகள் சீரழிக்கப்பட்டது.

சித்தப்பா கொலையைப் பற்றி எப்படிப் பேசினார்களோ, இன்று பிரகாசம் அனையில் படகுகளை கொண்டு அனையை உடைக்க நினைத்ததிலும் பேசுகிறார்கள். அதனால்தான் அவர்கள் கொலம்பிய மாஃபியா டானுடன் ஒப்பிடுகிறேன். முதலில் வழங்க மறுத்த நிறுவனம் மீண்டும் மறு டெண்டரில் ₹ 320 கிலோ பசு நெய் எப்படி வழங்கப்பட்டது ..? பெருமாளுக்கு தயார் செய்த லட்டு தயாரிப்பில் பயன்படுத்தும் நெய்யில் மறு டெண்டர்கள் ஏன் அழைக்கப்பட்டது ? அவர்கள் செய்த தவறை திசை திருப்ப அரசியல் செய்வதாக வெட்கமின்றி கூறுகிறார்கள். ஆட்சி மாறியதும் நான் திருமலையை உடனடியாக பழையபடி அதன் புனிதத்தை காப்பாற்றி ஒழங்குப்படுத்த வேண்டும் என புதிய இ.ஓ.விடம் கூறினேன். அவரும் பல நடவடிக்கைகளை எடுத்தார். லட்டுகளில் தரம் தற்போது அதிகரித்துள்ளது. கலப்படம் செய்த நிறுவனங்கள் மீண்டும் எந்த டெண்டரிலும் பங்கேற்காத வகையில் கருப்பு பட்டியலில் ( பிளாக் லிஸ்டில் ) வைத்துள்ளார். லட்டு தரம் உயர்த்த நந்தினியிடம் இருந்து 1 கிலோ நெய் ₹ 470 என நெய் கொள்முதல் செய்யப்பட்டது. இ.ஓ. தனது பணியை சிறப்பாக செய்து தனது மீண்டும் பழைய தரத்தையும், புனிதத்தை கொண்டு வந்தார். ஆனால் இதெல்லாம் வெளியே தெரியாமல் அவர் பணியை செய்து கொண்டிருந்தார். இப்போது எனது வார்த்தைகள் மூலம் லட்டு விஷயத்தை பேச அந்த கடவுள் என் வாயிலிருந்து உண்மையை சொல்ல வைத்துள்ளார். அனைத்தையும் என் மூலம் கடவுள் செய்ய வைப்பார் . தேவஸ்தான விவகாரத்தில் அடுத்து என்ன செய்வது என்று ஆலோசித்து வருகிறோம் என முதல்வர் சந்திரபாபு தெரிவித்தார்.

ஜீயர்கள், காஞ்சி பீடாதிபதி , சனாதன தர்ம பண்டிதர்களுடன் ஆலோசித்து எவ்வாறு தோஷ பரிகார பூஜை மேற்கொள்வது என ஆலோசித்து வருகிறோம். குருவாயூர் கோயிலில் சட்டையை கழற்றி செல்ல வேண்டும் அதனை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும். ஒவ்வொரு மதத்திற்கும் ஒரு சம்பிரதாயம் கலாச்சாரம் உள்ளது அதற்கு மதிப்பளிக்க வேண்டும். 1817 ஆண்டு முதல் லட்டு அங்கு தயாரிக்கப்படுகிறது. அயோத்தியில் கூட திருமலைப் போல லட்டு செய்ய முயன்றனர். ஆனால், அது சாத்தியப்படவில்லை. ஒரு நாளைக்கு மூன்று முறை சோதனை செய்ததாகச் சொல்லி யாரை ஏமாற்றுகிறார்கள் ? முன்பு ராஜசேகர ரெட்டி ஏழு மலையை இரண்டு என்றார். பிறகு எதிர்த்தோம்.. போராடினோம்.. அமராவதியில் ₹ 250 கோடியில்
பெருமாள் கோவிலை கட்ட நினைத்தால் அதனை குறைத்தனர். மாநிலத்தின் அனைத்து கோயில்களிலும் பரிசோதனை, சம்ரோக்ஷணம் செய்யப்படும். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் உதவுவோம். மனிதாபிமானக் கண்ணோட்டத்தில் நாங்கள் உதவி செய்கிறோம் என்று ஆந்திர முதல்வர் நாரா சந்திரபாபு நாயுடு கூறினார்.

MUST READ