Homeசெய்திகள்ஆன்மீகம்திருப்பதி போக திட்டமா? டிசம்பர் மாதம் இந்த நாட்களில் சிறப்பு விழாக்கள்.

திருப்பதி போக திட்டமா? டிசம்பர் மாதம் இந்த நாட்களில் சிறப்பு விழாக்கள்.

-

திருப்பதி லட்டு கவுண்டர்
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள சிறப்பு விழாக்கள் குறித்த விவரங்களை கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

உலகப் புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அதிலும் விடுமுறை நாட்கள், சிறப்பு உற்சவ நாட்களில் ஏழுமலையானை தரிசிக்க வருவோரின் எண்ணிக்கை பல லட்சங்களை தொடும். அவ்வாறு திருப்பதிக்கு வரும் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொள்ளாமல் இருக்கவும், பல மணிநேரம் காத்திருப்பதை தவிர்க்கவும் தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துகொள்ளும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அந்தவகையில் டிசம்பர் மாதம் 1 முதல் 20 தேதி வரை தரிசனம் செய்வதற்கான ரூ. 300 தரிசன டிக்கெட்கள் கடந்த செப்டம்பர் மாதம் 25ம் தேதி ஆன்லைனில் வெளியிடப்பட்டன.

திருப்பதி ஏழுமலையான் கோயில்

இந்த நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் டிசம்பர் மாதம் நடைபெறும் சிறப்பு விழாக்கள் குறித்த அறிவிப்பை தேவஸ்தான வெளியிட்டுள்ளது. அதன்படி, 3-ந் தேதி பார்வேத மண்டபத்தில் கார்த்திகை வனபோஜன உற்சவமும், 8-ந் தேதி சர்வ ஏகாதசியும், 12-ந் தேதி ஆட்சியாய நொச்சவளு ஆரம்ப விழாவும் நடைபெறுகிறது. மேலும், 17-ந் தேதி தனுர் மாதம் ஆரம்ப நிகழ்வும், 22-ந் தேதி ஏழுமலையான் சன்னதியில் சின்ன சாத்தும் முறையும், 23-ந் தேதி வைகுண்ட ஏகாதசி ஆரம்ப நிகழ்வும் நடைபெற இருக்கிறது. இதனைத்தொடர்ந்து 24-ந் தேதி வைகுண்ட துவாதசி அன்று ஏழுமலையான் சக்ர ஸ்நானமும், 28-ந் தேதி பிரணயகலஹ உற்சவமும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ