Homeசெய்திகள்ஆன்மீகம்வேளாங்கண்ணி மாதா பேராலய ஆண்டுத்திருவிழா கொடியேற்றம்

வேளாங்கண்ணி மாதா பேராலய ஆண்டுத்திருவிழா கொடியேற்றம்

-

வேளாங்கண்ணி மாதா பேராலய ஆண்டுத்திருவிழாகோலாகலமாக துவங்கும் உலகப்புகழ்பெற்ற வேளாங்கண்ணி மாதா பேராலய ஆண்டுத்திருவிழா கொடியேற்றத்தை காண வேளாங்கண்ணியில் குவிந்துள்ள பல லட்சம் பக்தர்கள்

கீழ்திசை நாடுகளின் லூர்து நகர் என்றழைக்கப்படும், உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டுத்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்குகிறது. 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவை காண்பதற்காக, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெருசலம் உள்ளிட்ட அயல்நாடுகளில் இருந்தும், கேரளா, ஆந்திரா,கர்நாடகா, தமிழ்நாடு, புதுச்சேரி என பல்வேறு பகுதிகளில் இருந்து பாதயாத்திரையாக பல லட்சம் பக்தர்கள் வேளாங்கண்ணி நகர் பகுதிக்கு வந்து குவிந்துள்ளனர்.

வேளாங்கண்ணி நகரமே பல லட்சம் பக்தர்களின் கட்டுக்கடங்காத கூட்டத்தால், அங்கு களைகட்டி உள்ளது. இன்று மாலை சரியாக 5:20 மணிக்கு பேராலயத்தில் இருந்து புனித கோடியானது பக்தர்களால் எடுத்து வரப்படுகிறது. அதனைத் தொடர்ந்து வேளாங்கண்ணி கடற்கரை உள்ளிட்ட நகர் பகுதியை சுற்றி கொடி ஊர்வலம் நடைபெறுகிறது. பின்னர் ஆலயத்தை வந்தடையும் கொடிக்கு தஞ்சை மறை மாவட்ட ஆயர் சகாயராஜ் புனிதம் செய்து வைத்து பின்னர் 6:30 மணி அளவில் கொடியேற்றுகிறார்.

”ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்”  செய்தியாளர் சந்திப்பில் மனம் திறந்த நட்சத்திரங்கள்

வேளாங்கண்ணி பேராலய ஆண்டு திருவிழாவை காண்பதற்காக பல்வேறு மாநிலங்களிலிருந்து சிறப்பு ரயில்கள் மற்றும் பேருந்துகள் மூலம் வருகை தந்துள்ள பக்தர்களின் வசதிக்காகவும், அதேபோல் நடைபயணமாக வேண்டுதல் நிறைவேற்ற வந்துள்ள யாத்தீர்களின் வசதிக்காக தங்கும் விடுதிகள் கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் குடிநீர் மருத்துவம் மற்றும் கழிப்பறை போன்ற வசதிகள் அங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் கபிலன் தலைமையில் 6,மாவட்டத்தைச் சேர்ந்த 3000 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

MUST READ