Homeசெய்திகள்ஆவடிஅதிகபட்சமாக ஆவடியில் 108 செ.மீ. கனமழை

அதிகபட்சமாக ஆவடியில் 108 செ.மீ. கனமழை

-

அதிகபட்சமாக ஆவடியில் 108 செ.மீ.  கனமழை

ஆவடியில் நேற்று இரவு 10.8 சென்டிமீட்டர் கனமழை கொட்டி தீர்த்தது

சென்னை வானிலை மையம் சென்னை சுற்றுவட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்ய கூடும் என அறிவித்திருந்தது.

இந்நிலையில் நேற்று இரவு (ஜூலை 12)ஆவடி சுற்றுவட்ட பகுதி, பட்டாபிராம் திருநின்றவூர், பூவிருந்தவல்லி மதுரவாயில் அம்பத்தூர் ஆகிய பகுதிகளில் பலத்த காற்று இடியுடன் கூடிய கனமழை கொட்டி தீர்த்தது.

அதிகபட்சமாக ஆவடியில் 108 செ.மீ.  கனமழை

இதனால் சாலைகளில் நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் மிகவும் பாதிப்புக்கு உள்ளானர். மழையின் காரணமாக பல்வேறு இடங்களில் மின்வெட்டு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று காலை வழக்கமாக ஆவடி பகுதிகளில் மழை நீர் தேங்கி நிற்கக்கூடிய இடங்களில் நீர் வழிந்தோடி சிறிதளவு காணப்பட்டது.

அண்ணா அறிவாலயத்தில் திமுகவினருக்கு இனிப்பு வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

மேலும் ஆவடி வீட்டு வசதி வாரிய மாநகராட்சி பள்ளிகளில் விளையாட்டு மைதானங்களில் நீர் தேங்கி காணப்படுகிறது. மேலும் காமராஜர் நகர் பகுதி அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் விளையாட்டு மைதானத்தில் நீர் தேங்கி காணப்படுகிறது.

அதிகபட்சமாக ஆவடியில் 108 செ.மீ.  கனமழை

கனமழை கொட்டி தீர்த்த போதும் பெருமளவு சேதம் ஏதும் ஏற்படாமல் ஆவடி சுற்றுவட்ட பகுதிகளில் மக்கள் இயல்பு வாழ்க்கையை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இனிவரும் காலங்களில் பருவமழையின்போது ஆவடி சுற்றுவட்ட பகுதிகளில் வழக்கமாக நீர் தேங்கும் இடங்களில் மாநகராட்சி துரிதமாக செயல்பட்டு நீர் தேங்காமல் இருக்க வழிவகை ஏற்படுத்தி தரவேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

MUST READ