ஆவடி அடுத்த பட்டபிராமில் டைபாய்டு காய்ச்சலுக்கு 10 வயது சிறுவன் பரிதாப பலி.
திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராம் அடுத்த நெமிலிச்சேரி அண்ணா நகர் பகுதியை சேர்ந்த பச்சையப்பன் இளவரசி தம்பதியர்.இவர்களுக்கு ஒரு ஆண் இரு பெண் பிள்ளைகள் உள்ளன.கணவர் பச்சையப்பன் 2 வருடங்களுக்கு முன்பு கொரோனாவில் உயிரிழந்த நிலையில் இளவரசி குழந்தைகளுடன் வசித்து வந்தார்.
இவரின் இரண்டாவது மகன் 10வயது தன்வந்த் அருகிலுள்ள பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்தார்.இந்நிலையில் தன்வந்த்க்கு கடந்த 3 நாட்களுக்கும் மேல் காய்ச்சல் இருந்துள்ளது.இதனால் திருநின்றவூரிலுள்ள சுகம் தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற்று வந்துள்ளார்.அங்கு ட்ரிப்ஸ் ஏற்ற பட்டு மருந்து மாத்திரைகள் வழங்க பட்டுள்ளது.முன்னதாக ரத்த பரிசோதனையில் டைபாய்டு என வந்துள்ளது.
இதன் பின்னர் மருத்துவ கண்காணிப்பில் இருந்த நிலையில் நேற்று சிகிச்சை முடிந்து வீட்டிற்கு வந்தவர் மிகவும் சோர்வாக இருந்துள்ளார்.மேலும் மூச்சு விட சிரம பட்டுள்ளார்.இதனால் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மீண்டும் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.ஆனால் அதற்குள் சிறுவன் சுயநினைவின்றி மயங்கியுள்ளார்.
உடனடியாக ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அங்கு சிறுவனைபரிசோதனை செய்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இது குறித்து திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் இருந்து பட்டபிராம் போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில், போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் உடற்குராய்வு மேற்கொள்ளபட்ட நிலையில் சிறுவனின் உடலானது பெற்றோரிடம் இன்று ஒப்படைக்கபட்டது.இதனையடுத்து வீட்டிற்கு கொண்டு வந்த சிறுவனின் உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுத காட்சி காண்போரை கண்கலங்க வைக்கும் விதமாக இருந்தது.
கொரோனாவில் கணவரை இழந்த நிலையில் இளவரசி தற்போது காய்ச்சலில் மகனையும் இழந்தது அப்பகுதியினர் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.