Homeசெய்திகள்ஆவடிஆவடி அருகே வாகன சோதனையில்100 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்

ஆவடி அருகே வாகன சோதனையில்100 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்

-

ஆவடி காவல் ஆணையரகத்துக்கு உட்பட்டு ஆணையர் சங்கர் போதைப் பொருட்களுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். ஆணையர் சங்கர் உத்தரவின் பெயரில் அனைத்து காவல் எல்லை பகுதிகளிலும் தொடர்ந்து வாகன சோதனையில் காவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆவடி அருகே வாகன சோதனையில்100 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்இந்நிலையில் ஆவடி T10 திருமுல்லைவாயில் காவல் நிலைய ஆய்வாளர் அவர்களுக்கு குட்கா பொருட்களை கடத்தி வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் காவல் ஆய்வாளர் ஜார்ஜ் மில்லர் தலைமையிலான போலீசார் அயப்பாக்கம் திருவேற்காடு சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

ஆவடி அருகே வாகன சோதனையில்100 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்அவ்வழியாக வந்த சந்தேகத்திற்கிடமான GJ 01 RX 0436 என்ற குஜராத் மாநில பதிவெண் கொண்ட ஹூண்டாய் காரினை மடக்கி சோதனை செய்ததில் காரில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 100 கிலோவிற்கு மேற்பட்ட குட்கா பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

ஆவடி அருகே வாகன சோதனையில்100 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்இதனையடுத்து குட்கா பொருட்களை பறிமுதல் செய்து கடத்தி வந்த குற்றவாளிகள் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த 1) தீபா ராம் (வ/23) 2)மனோகர்லால் (வ/ 34) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

குட்கா பொருட்களை கடத்தி வந்த காரை பறிமுதல் செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி பின்னர் புழல் சிறையில் அடைத்தனர்.

MUST READ