Homeசெய்திகள்ஆவடிசெங்குன்றத்தில் 120 கிலோ கஞ்சா பறிமுதல் – ஆவடி ஆணையர் அருண் பேட்டி

செங்குன்றத்தில் 120 கிலோ கஞ்சா பறிமுதல் – ஆவடி ஆணையர் அருண் பேட்டி

-

- Advertisement -

செங்குன்றத்தில் 120 கிலோ கஞ்சா பறிமுதல் – ஆவடி ஆணையர் அருண் பேட்டி

ஆந்திராவிலிருந்து செங்குன்றம் வழியாக தென்னிந்திய போதை பொருள் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அதிகாரிகள் தொடர்ந்து கஞ்சா கடத்தலை பிடித்து வருகின்றனர். அவர்களைப் போலவே ஆவடி காவல் ஆணையரக போலீசார் மூலம் தனிப்படை அமைக்கப்பட்டு. கஞ்சா கடத்தலை தடுக்க தொடர் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆவடி காவல் ஆணையர் அருண் IPS பேட்டி.

செங்குன்றத்தில் 120 கிலோ கஞ்சா பறிமுதல் – ஆவடி ஆணையர் அருண் பேட்டி
காவல் ஆணையர் அருண் பேட்டி

ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்திற்கு உட்பட்ட மணலி சரக உதவி ஆணையாளர் தலைமையில் தனிப்படை போலீஸ் 35 லட்சம் மதிப்புடைய 120 கிலோ கஞ்சா 2 செல்போன் 1 சொகுசு கார் பறிமுதல் செய்து 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

செங்குன்றத்தில் 120 கிலோ கஞ்சா பறிமுதல் – ஆவடி ஆணையர் அருண் பேட்டி
3 பேர் கைது

இதுகுறித்து ஆவடி காவல் ஆணையரகத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஆவடி காவல் ஆணையர் அருண் IPS அவர்கள் கூறுகையில், கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து இப்போது வரை சுமார் 736 கிலோ கஞ்சா வரை நாங்கள் பறிமுதல் செய்துள்ளோம். குற்றவாளிகளை கைது செய்வதோடு நிறுத்தாமல் இந்த கஞ்சா விற்பனையின் தொடக்கத்தில் இருந்து முடிவு வரை நாங்கள் ஆராய்கிறோம்.

செங்குன்றத்தில் 120 கிலோ கஞ்சா பறிமுதல் – ஆவடி ஆணையர் அருண் பேட்டி
120 கிலோ கஞ்சா பறிமுதல்

அப்போது இந்த கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர்கள் எப்போதிலிருந்து இதை செய்கின்றனர் என்று ஆராய்ந்து அப்போதிலிருந்து அவர்களது வங்கி கணகக்கு மற்றும் பண பரிவர்த்தனை சோதனைக்கு உட்படுத்தப்பட்டு அனைத்து பணங்களும் பறிமுதல் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து தற்போது வரை 736 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதுடன் 340 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  போக்குவரத்து துறை காவலர்கள் மட்டுமே அபராதம் விதிக்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. அதற்கு ஏற்ப சட்டம் ஒழுங்கு காவலர்களிடம் இருந்து மட்டுமே ஈ செல்லான் மெஷின் வாங்கப்பட்டிருக்கிறது.

ஆவடி காவல் ஆணையரகத்துக்குட்பட்ட பகுதிகளில் அதிக சிசிடிவி கேமராக்களை பொருத்த ஆலோசித்து வருகிறோம். மேலும் சேதம் அடைந்த,  பழுதான கேமராக்களை கண்டறிந்து அவற்றை மாற்றி புதிய கேமராக்களை பொருத்தும் பணியையும் மேற்கொள்ள உள்ளோம்.

செங்குன்றத்தில் 120 கிலோ கஞ்சா பறிமுதல் – ஆவடி ஆணையர் அருண் பேட்டி
ஆவடிகாவல்துறை ஆணையரகம்

இதற்கு முன்னர் நான் சென்னை மாநகர காவல் துறையில் போக்குவரத்து துறை கூடுதல் காவல் ஆணையராக இருந்தபோது சென்னை மாநகராட்சியிடமே காலையில் பள்ளி மற்றும் வேலைக்கு செல்லும் முக்கியமான நேரங்களிலும், பள்ளி முடிந்து மற்றும் வேலை முடிந்து வீடுகளுக்கு வரும் நேரங்களிலும் கனரக வாகனங்கள் இயக்க வேண்டாம் என்று அறிவுறுத்தி இருக்கிறேன்.

காவலர்களுக்கான உணவுப் படி பிரச்சனை முடிந்து விட்டது. அதற்கான அரசாணை சில தினங்களுக்கு முன்பு வெளியாகிவிட்டது. அதற்குண்டான தொகை ஒதுக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஒரு நாட்களில் அதுவும் சரி செய்யப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஐந்து மாத உணவுப்படி வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

MUST READ