மகளிர் தின கொண்டாட்டம் : 2025 மாணவிகள் இணைந்து பிரம்மாண்ட உலக சாதனை
அம்பத்தூர் அடுத்த மாதனங்குப்பம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் 2025 மாணவிகள் பிங்க் நிற ஆடை அணிந்து இன்ஃபினிட்டி வடிவில் நின்றபடி உலக சாதனை படைத்தனர்.
சென்னை அம்பத்தூர் அடுத்த மாதனங்குப்பம் பகுதியில் சோகா இகதா எனும் தனியார் கலை அறிவியல் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் உலக மகளிர் தினம் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. அப்போது திறந்தவெளி மைதானத்தில் 2025 மாணவிகள் பிங்க் நிற ஆடை அணிந்து இன்ஃபினிட்டி வடிவில் அமர்ந்தபடியும், நின்றபடியும் பிரம்மாண்ட உலக சாதனை படைத்தனர். இதற்கு முன்னர் 1400 மாணவிகள் சேர்ந்து இன்ஃபினிட்டி வடிவில் நின்றது உலக சாதனையாக இருந்த நிலையில் தற்போது 2025 மாணவிகள் நின்று அதை முறியடித்துள்ளனர்.
வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் யூனியன் புத்தகத்தில் இந்த உலக சாதனை இடம் பிடித்தது. பெண்களின் திறமைக்கு எல்லை இல்லை என்பதை குறிப்பிடும் வகையில் இந்த உலக சாதனை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
சுட்டெரிக்கும் வெயிலில் உலக சாதனைக்காக நீண்ட நேரம் நின்று கொண்டிருந்த மாணவிகளுக்கு பாராட்டுகள் குவிந்தன. இறுதியில் உலக சாதனை படைத்ததற்கான சான்றிதழ் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது. உலக சாதனை குழுவின் மேலாளர் கிறிஸ்டோபர் டைலர் நேரில் பார்வையிட்டு உலக சாதனைக்கான சான்றிதழை வழங்கினார்.