ஆவடி அருகே சேகாட்டில் 500 மீட்டர் சாலையில் 5000 பள்ளத்தில் வாகன ஓட்டிகள் விழுந்து, அடிப்பட்டு செல்வதாக பொதுமக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
ஆவடி மாநகராட்சியில் 48 வார்டுகள் உள்ளன.அதில் 37 ஆவது வார்டில் பட்டாபிராம் ,கோபாலபுரம், சேக்காடு இணைக்கும் பிரதான சாலை உள்ளது. இதில் அப்பகுதியில் சேக்காடு, கோபாலபுரம், பட்டாபிராம், என 10,000மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதி மக்கள் மார்க்கெட் செல்லவும் பிள்ளைகளை பள்ளிக்கு கொண்டு செல்லவும் ரயில் போக்குவரத்து பயணம் செய்யவும் இச்சாலையை பெரிதும் பயன்படுத்தி வருகின்றனர்.
மேலும் பொதுமக்கள் கூறுகையில் பள்ளிகளும் கல்லூரிகளும் அமைந்த சாலையில் இவ்வாறு வசதிகள் இல்லாமல் இருப்பதும் வேலைக்கு செல்பவர்கள், மருத்துவமனை செல்பவர்கள் என அனைவரும் இந்த வழியாக செல்ல நேரிடுகிறது. இந்நிலையில் சாலை இவ்வாறு வசதிகள் இல்லாமல் இருப்பது பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளது.
தற்போது இந்த சாலையில் பயணம் செய்யும் வாகன ஓட்டிகள் பள்ளி குழந்தைகள் முதியோர்கள் என அனைவருமே பாதிப்புக்கு உள்ளாகின்றனர். இதில் வாகன ஓட்டிகள் பள்ளத்தில் விழுந்து கை, கால் அடிப்படுவதாக வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.மேலும் குழந்தைகள் தவறி விழுந்து காயம் ஏற்படுவதாகவும் முதியோர்கள் பெரும் அவதிக்குள்ளாவதாக தெரிவித்தனர்.
ஆவடி மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சமீபத்தில் இச்சாலை அருகே இணையும் புதிதாக கட்டப்பட்ட சேக்காடு சுரங்கப்பாதை நெடுஞ்சாலைதுறை அமைச்சர் ஏ.வ.வேலு, மற்றும் துணிநூல் அமைச்சர் காந்தி, ஆவடி சட்டமன்ற உறுப்பினர் சா.மு நாசர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது, என்பது குறிப்பிடத்தக்கது.