ஆவடியில் மர்ம காய்ச்சலுக்கு இரண்டு வயது குழந்தை பலி
உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் ராம்ஜித், (வயது 33) கொத்தனார் வேலை செய்பவர். இவர், கடந்த ஆறு மாதமாக ஆவடி, பிள்ளையார் கோவில் தெருவில் வசித்து வருகிறார்.
இவரது மனைவி கல்பனா, ( வயது 30) இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ள நிலையில், இவரது 2 வயது மகன் டிபிஹனுக்கு ஒரு வாரமாக காய்ச்சல் இருந்ததாக கூறப்படுகிறது. இவர்கள் மருத்துவமனைக்கு செல்லாமல் மருந்து வாங்கி கொடுத்துள்ளனர்.
வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் காலமானார்
இந்நிலையில், நேற்று கல்பனா குழந்தைக்கு உணவளித்து படுக்க வைத்துள்ளார். மாலை வெகு நேரம் ஆகியும் சிறுவன் கண் விழிக்காததால் சந்தேகம் அடைந்த கல்பனா, ஆவடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.
அங்கு மருத்துவ பரிசோதனையில் குழந்தை இறந்தது தெரிந்தது. இந்நிலையில் பிரேத பரிசோதனைக்காக குழந்தையின் சடலத்தை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து ஆவடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.