Homeசெய்திகள்ஆவடிபுதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் - ஸ்ரீகுமார் கோரிக்கை

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் – ஸ்ரீகுமார் கோரிக்கை

-

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் – ஸ்ரீகுமார் கோரிக்கை

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் போது புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி டெல்லியில் 5 லட்சம் அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுப்பட போவதாக அகில இந்திய பாதுகாப்புதுறை தொழிலாளர் கூட்டமைப்பின் தலைவர் ஸ்ரீகுமார் தெரிவித்துள்ளார்.

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் - ஸ்ரீகுமார் கோரிக்கை
ஸ்ரீகுமார் கோரிக்கை

ஆவடியில் அகில இந்திய மத்திய அரசு ஊழியர்களின் மாநாடு நடைபெற்று வருகிறது. அதில் கலந்து கொண்ட ஸ்ரீகுமார்  செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், மத்திய அரசு ஊழியர்கள், பாதுகாப்பு துறை ஊழியர்கள், ரயில்வே ஊழியர்கள், மாநில அரசு ஊழியர்கள் என்று சுமார் 5 லட்சம் தொழிலாளர்கள் டெல்லி மாநகரில் சங்கமித்து வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னால் புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை திரும்ப கொணரவேண்டும் என்கின்ற அந்த கோரிக்கையை முன்னெடுத்து ஒரு மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நாடாளுமன்றத்திற்கு முன்னால் நடைபெற இருக்கின்றது என்றார்.

ஆகவே மத்திய அரசு ஊழியர்களுடைய கோரிக்கையை உதாசீனப்படுத்தாமல் அவர்களுடைய கோரிக்கையை ஏற்றுக்கொண்டு கார்ப்பரேஷன் ஆபத்தை திரும்ப பெற வேண்டும். புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்கின்ற அந்த கோரிக்கையை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

அப்படி ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் பல்வேறு விதமான தீவிர போராட்டங்கள் மற்றும் தேவை ஏற்பட்டால் காலவரையற்ற வேலை நிறுத்தம் வரை அரசு ஊழியர்கள் செல்லக் கூடிய வாய்ப்பு இருப்பதாக  ஸ்ரீகுமார் தெரிவித்தார்.

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் - ஸ்ரீகுமார் கோரிக்கை
ஸ்ரீகுமார்

புதிய பழைய பென்சன் திட்டத்தில் உள்ள வித்தியாசம்

ஒரு முன்னாள் ராணுவ வீரர் 15 ஆண்டுகள் பணிபுரிந்து இங்கு மீண்டும் வேலை கிடைத்து பணிபுரிந்து புதிய பென்சன் திட்டத்தில் 30-ஆம் தேதி ஓய்வு பெறுகிறார். அவருக்கு புதிய பென்ஷன் திட்டத்தில் கிடைப்பது வெறும் ஆயிரம் ரூபாய் மட்டுமே. ஆனால் அதே ஊழியர் பழைய பென்ஷன் திட்டத்தில் ஓய்வு பெற்றிருந்தால் அவருக்கு 20 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பென்ஷன் கிடைத்திருக்கும். அதாவது  அவருடைய சம்பளத்தில் 24 சதவீதம் பென்சனுக்காக கொடுத்து விட்ட பிறகு ஒவ்வொரு மாதமும் பணி நிறைவு செய்து போகின்ற போது வெறும் ஆயிரம் ரூபாய் பென்சனுக்காக அவர் 15 ஆண்டுகள் NPS திட்டத்தில் இங்க பணிபுரிந்து இருக்கிறார்.

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் - ஸ்ரீகுமார் கோரிக்கை
ஸ்ரீகுமார்

ஆகவே nps திட்டம் என்பது ஒரு நாசா காரத்திடம் அரசு ஊழியர்களுடைய ஓய்வு கால வாழ்க்கையை மிகப்பெரிய கேள்விக்குறியாக இருட்டாக மாற்றி இருக்கின்ற ஒரு திட்டம். ஆகவேதான் இந்த NPS திட்டம் இருக்கக்கூடாது பழைய பென்ஷன் திட்டத்தின் அடிப்படையில் ஓய்வு பெறுகின்ற போது என்ன அடிப்படை ஊதியம் இருக்கின்றதோ அதில் 50% உத்தரவாதப்படுத்தப்பட்ட பென்சனாக பஞ்சபடியுடன் விலைவாசி உயர்வை ஈடு கட்டுகின்ற பஞ்சபடியுடன் வழங்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய கோரிக்கை என்றார்.

MUST READ