Homeசெய்திகள்ஆவடிஆவடியில் தொழிலாளர் நலச்சங்கத்தினர் கவன ஈர்ப்பு பேரணி

ஆவடியில் தொழிலாளர் நலச்சங்கத்தினர் கவன ஈர்ப்பு பேரணி

-

ஆவடியில் தொழிலாளர் நலச்சங்கத்தினர் கவன ஈர்ப்பு பேரணி

ஆவடி அருகே ஊழியர் வருங்கால வைப்பு நிதி ஊதியத்தை அதிகரித்து வழங்க வலியுறுத்தி ஓய்வுபெற்ற தொழிலாளர்கள் மற்றும் நலச்சங்கத்தினர் கவன ஈர்ப்பு பேரணியில் ஈடுபட்டனர்.

ஆவடியில் தொழிலாளர் நலச்சங்கத்தினர் கவன ஈர்ப்பு பேரணி

முருகப்பா டியூப் ப்ராடக்ட்ஸ் ஆப் இந்தியா ஒய்வுபெற்ற தொழிலாளர்கள் நலசங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி EPF பென்சனர்களின் கவன ஈர்ப்பு பேரணி ஆவடி இமாக்குலேட் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

மேலும் தொழிலாளர் வைப்பு நிதி ஓய்வு பெற்ற நல சங்க அகில இந்திய துணை தலைவர் பாபு தலைமையில் நடைபெற்ற, இந்த பேரணியில் சிறப்பு அழைப்பாளராக ஆவடி சட்ட மன்ற உறுப்பினர் சா. மு. நாசர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

ஆவடியில் தொழிலாளர் நலச்சங்கத்தினர் கவன ஈர்ப்பு பேரணி

இதனை தொடர்ந்து கொடியசைத்து கவன ஈர்ப்பு பேரணியை துவக்கி வைத்த அவர், பென்சனர்களின் கோரிக்கையை செவிசாய்க்காத மத்திய அரசை கண்டித்து கண்டன உரை ஆற்றினார்.

அதன் பின் மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பியவாறு,ஆவடி இமாக்குலேட் பள்ளி அருகே துவங்கிய இந்த பேரணி பிரதான சாலை வழியாக ஆவடி பேருந்து நிலையத்தில் முடிவடைந்தது.

மத்திய அரசிடம் EPF பென்சனர்கள் கோரிக்கை,

குறைந்தபட்ச பென்சன் மாதம் ரூ.9000/- வழங்கிடுக!

உடனடியாகஉயர்மட்டக்குழு பரிந்துரைத்த பென்சன் மாதம் ரூ.3000/- பஞ்சப்படியாக வழங்கிடுக.

EPF 95 பென்சனர்களுக்கு ESI மருத்துவ வசதி திட்டத்தை அமுல்படுத்திடு!

வருங்கால வைப்பு நிதி ஆணையம் பென்சன் உயர்த்த காலம் கடத்தும் போக்கினை கைவிடுக!

மூத்த குடிமக்களுக்கு நிறுத்தப்பட்ட இரயில் கட்டணச் சலுகையை மீண்டும் வழங்கிடுக!

உச்சநீதிமன்றமே!

1.09.2014க்கு முன், பின் என,பென்சனர்களை பிரித்து வஞ்சிக்காதே! தகுதியுள்ள உயர் சம்பளம் பெற்ற அனைவருக்கும் உயர் பென்சன் வழங்கிடுக! என பல்வேறு கோரிக்கைகள் முன் வைத்துள்ளனர்.

இதில் பகுதி செயலாளர் நாராயண பிரசாத், மதிமுக வழக்கறிஞர் அந்திரிதாஸ், தொழிலாளர் நலச்சங்க நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

MUST READ