Homeசெய்திகள்ஆவடிஆவடி: விதிமுறைகளை மீறி பட்டாசு வெடித்த 65 நபர்கள் மீது வழக்கு பதிவு

ஆவடி: விதிமுறைகளை மீறி பட்டாசு வெடித்த 65 நபர்கள் மீது வழக்கு பதிவு

-

ஆவடி காவல் ஆணையரகம் உட்பட்ட பகுதிகளில் விதிமுறைகளை மீறி பட்டாசு வெடித்த 65 நபர்களின் மீது வழக்கு பதிவு

ஆவடி: விதிமுறைகளை மீறி பட்டாசு வெடித்த 65 நபர்கள் மீது வழக்கு பதிவு

நேற்று தீபாவளி பண்டிகையை யொட்டி ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும் இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அனுமதிக்கப்பட்ட நேரத்தை தவிர்த்தும் விதிமுறைகளை மீறியும் பட்டாசுகளை வெடித்ததாக ஆவடி காவல் மாவட்டத்தில் 28 நபர்களின் மீது 27 வழக்குகளும், செங்குன்றம் காவல் மாவட்டத்தில் 37 நபர்களில் மீது 19 வழக்குகளென மொத்தம் 65 நபர்களின் மீது 46 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஆவடி: 14 வயது சிறுமியை கடத்தியவர் போக்சோவில் கைது

MUST READ